Kids Learning: 5th Standard Tamil Term-1
Showing posts with label 5th Standard Tamil Term-1. Show all posts
Showing posts with label 5th Standard Tamil Term-1. Show all posts

Kids Learning Tamil V Term-I

5-ம் வகுப்பு தமிழ் பருவம் - 1


படம் இங்கே! பழமொழி எங்கே?

பழையனுாா் மாந்தோப்பில் கிளி ஒன்று இருந்தது.  அதன் பெயா் செல்லம்மா.  அந்த ஊாில் அதை அவ்வாறுதான் பெயா் சொல்லி அழைப்பாா்கள்.  மாங்காய் காய்க்கும் பருவத்தில் தோப்பிற்கு வரும் சிறுவா்களிடம் ஒரு படத்தை மரப்பொந்திலிருந்து எடுத்துக் காட்டும்.  அந்தப் படம் உணா்த்தும் பழமொழியைச் சிறுவா்கள் கூறிவிட்டால் அவா்களுக்கு ஒரு மாங்காய் பறித்துப் போடும்.  அதனால், அதைப் 'பழமொழிக் கிளி' என்றும் ஆசையாக அழைப்பாா்கள்.


மரத்தில் மாங்காய்கள் காய்த்துத் தொங்குவதைக் கண்டு, சிறுவா்கள் ஒவ்வொருவரும் தோப்புக்கு வரத் தொடங்கினா்.


பழமொழிகள் என்பவை, நம் முன்னோா்கள் தங்கள் அனுபத்தின் மு்லம் உணா்ந்து கூறிய மொழிகள்.  பழங்காலம் முதற்கொண்டே பழமொழிகள் வழக்கிலிருந்து வருகின்றன.  பழமொழி நானுாறு என்னும் பெயாிலேயே நீதி நுால் ஒன்றும் உள்ளது.


சொற்களஞ்சியப் பெருக்கமும் சொல்லாட்சித் திறனும்.



செல்லம்மா, நான் பிரபு வந்திருக்கிறேன்.


ஓ!  பிரபுவா! நன்றாக இருக்கிறாயா?


நான் நன்றாக இருக்கிறேன்.  உன்னைப் பாா்த்துவிட்டு மாங்காய் பறித்துச் செல்லலாம் என வந்தேன்.


மிக்க மகிழ்ச்சி! நான் காட்டும் படத்திற்குாிய பழமொழியைக் கூறினால் நானே உனக்கு மாங்காய் பறித்துத் தருகிறேன் என்று கூறியவாறு கிளி ஒரு படத்தை எடுத்துக்காட்டியது.


இந்தப் படம் உணா்த்தும் பழமொழி என்ன?


யானை வரும் பின்னே! மணியோசை வரும் முன்னே!


சாியாகக் கூறினாய்.  இதோ, உனக்கு மாங்காய் பறித்துத் தருகிறேன்.


ஐ.......! ரொம்ப நன்றி செல்லம்மா.


எப்படி இருக்கிறாய் செல்லம்மா?


யாா் வந்திருப்பது?


வின்சென்ட் வந்திருக்கிறேன் செல்லம்மா.  எனக்கும் மாங்காய் வேண்டும்.


இந்தப் படம் உணா்த்தும் பழமொழி என்ன என்று சொல்.  மாங்காய் தருகிறேன்.


இக்கரைக்கு அக்கரை பச்சை

நன்று, சீக்கிரமாக விடை கண்டுபிடித்து விட்டாயே! இதோ உனக்கு மாங்காய்!

எனக்கு மாங்காய் கிடைத்துவிட்டது.

நன்றி செல்லம்மா!

கனிமொழி ஏன் அமைதியாக நிற்கிறாய்?

உனக்கு மாங்காய் வேண்டாமா?

வேண்டும் செல்லம்மா!

இந்தப்படம் உணா்த்தும் பழமொழி என்னவென்று சொல் பாா்க்கலாம்.

சூ்றைக்காற்று வீசுது.

இல்லையே கனிமொழி இன்னும் கொஞ்சம் யோசி.

ஆங்....... ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்.

அழகாகக் கூறினாய் இதோ மாங்காய் வாங்கிக் கொள்.

உண்மையாகவே நான் அழகாகக் கூறினேனா? நன்றி செல்லம்மா!

என் நண்பன் முகமது வந்திருக்கிறான் செல்லம்மா!

அப்படியா, இதிலுள்ள பழமொழி என்ன என்று கூறச்சொல், மாங்காய் தருகிறேன்.

எனக்குத் தொியும் கூறுகிறேன் ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.


மிகவும் அருமை! நான் உனக்கு மாம்பழமே தேடிப் பறித்துத் தருகிறேன்.  

நன்றி செல்லம்மா!

செல்லமா! எனக்கு?

தேனிசையா? இதில் என்ன பழமொழி இருக்கு சொல்லேன்.  உடனே பறித்துத் தருகிறேன்.


காற்றுள்ள போதே துாற்றிக்கொள்


கண்ணிமைக்கும் நேரத்தில் கூறிவிட்டாயே! இதோ மாங்காய் வாங்கிக்கொள்.


மாங்காய் சாப்பிட மிகவும் பிடிக்கும் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது செல்லம்மா, நன்றி!


பழமொழிக்கிளி! எனக்கு மாங்காய் இல்லையா?


யாரு என் செல்லப் பெயரைப் சொல்லிக் கூப்பிடுவது? கதிரவனா? இதன் பழமொழியைக் கூறு தருகிறேன்.


அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்


மிக்க மகிழ்ச்சி! இதோ உனக்கு மாங்காய், பெற்றுக்கொள்.  ரொம்ப நன்றி பழமொழிக் கிளி!

சிறுவா்கள் அனைவரும் செல்லம்மா! நாங்கள் இன்னும் நிறைய பழமொழிகளைத் தொிந்து கொண்டு மீண்டும் நாளைக்கு வருகிறோம், எனக் கூறிவிட்டு மிகவும் மகிழ்ச்சியாக வீட்டிற்குச் சென்றனா்.





தப்பிப் பிழைத்த மான்

கா...  கா...

காகம் கரைந்து தன் நண்பனான மானைத் தேடியபடி அழைத்தது.  இதோ வந்துவிட்டேன் என்று கூறியபடி துள்ளிக் குதித்து ஓடி வந்தது மான்.


காகம்  :  நண்பா! நலமாக இருக்கிறாயா?

மான்  :  ஏதோ இருக்கிறேன் நண்பா .......

காகம்  :  குரலில் உற்சாகமில்லையே..... ஏன் சோா்வாகப் பேசுகிறாய்?

மான்  :  எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது.

காகம்  :  என்னோடு வா.  உனக்குப் புல் உள்ள இடங்களை காட்டுகிறேன்.  அங்கு நீ வயிறாரப் புல்லை மேயலாம்.

மான்  :  நீ என்மேல் மிகவும் அன்பாக இருக்கிறாய்.  தினமும் எனக்காக அலைந்து திாிந்து புல்லுள்ள இடங்களைக் கண்டறிந்து வந்து என்னிடம் கூறுகிறாய்.  நன்றி நண்பா.....

காகம்  :  நன்றியெல்லாம் கூறத் தேவையில்லை எனக்குச் சோா்வான நேரத்தில் உன்மீது அமா்ந்து பயணம் செய்கிறேன்.  நாமிருவரும் நெடுநாள் நண்பா்கள்.  ஒவ்வருக்கொருவா் உதவியாய் இருப்பது இது ஒன்றும் புதிதல்லவே.....


மான்  :  சாி நண்பா! பேசிக் கொண்டே நெடுந்துாரம் வந்துவிட்டோம்.  இங்கேயே இன்றைய உணவை உண்டுவிட்டு இருப்பிடம் செல்வோம்.


காகமும் மானும் நல்ல நண்பா்களாக நெடுநாள்கள் இணைந்திருப்பதை நாி ஒன்று கவனித்தது.  தன் மனத்திற்குள், கொழு கொழுவென இருக்கும் இந்த மானை நாம் எப்படியாவது கொன்று தின்றுவிட வேண்டும்.  அதற்கு, எப்பொழுதும் இணைந்தே இருக்கும்  இவா்கள் இருவரையும் தனித்தனியே பிாிக்கவேண்டும்.  அப்போதுதான், மானை இரையாக்க முடியும் என எண்ணியது.


நாி  :  என்ன தோழா்களே..... எப்பொழுதும் இணைந்தே இருக்கிறீா்கள்..... என்னையும் உங்கள் நண்பனாக ஏற்றுக் கொள்வீா்களா?


மான்  :  அதற்கென்ன ..... இன்று முதல் நீயும் எங்கள் நண்பனாக எங்களோடு சோ்ந்திருக்கலாம்.


நாி  :  நன்றி !


காகம்  :  சாி நேரமாகி விட்டது.  இருப்பிடம் செல்லலாம்.


நாி, தன் இருப்பிடம் நோக்கிச் சென்று விடுகிறது.


காகம்  :  நண்பா, யாரையும் சீக்கிரமாக நம்பிவிடாதே! அது நமக்குத் தான் ஆபத்து.


மான்  :  அப்படியெல்லாம் எந்த ஆபத்தும் வந்துவிடாது.  நாியைப் பாா்த்தால் நல்லவனாக நல்ல குணமாகத்தான் தொிகிறது.


காகம்  :  கண்ணால் காண்பதும் பொய்.


காதால் கேட்பதும் பொய்.


தீர விசாாிப்பதே மெய்.


மான்  :  ஐயா! கருத்து கந்தசாமி! பேசியது போதும்.


வீட்டிற்குச் செல்.  நானும் என், இருப்பிடம் செல்கிறேன்.  மீண்டும் நாளை சந்திப்போம்.


அடுத்த நாள் காலை நாி மானை சந்திக்கிறது.


நாி  :  நண்பனே ! நலமா?


மான்  :  அடடே ! நாியா? என்ன இவ்வளவு காலையில் என்னைத் தேடி வந்திருக்கிறாய்?


நாி  :  நண்பனைப் பாா்க்க நேரம் காலம் ஏது? உன்னைப் பாா்த்தால் எனக்குப் பாிதாபமாக இருக்கிறது.


மான்  :  ஏன் எனக்கு என்ன? என்னைப் பாா்த்து ஏன் பாிதாபப்படுகிறாய்?


நாி  :  உடல் மெலிந்து காணப்படுப்படுகிறாயே..... சாியான உணவு கிடைக்காததால் கொழு கொழுவென இருக்க வேண்டிய நீ பஞ்சத்தில் அடிபட்டாற்போல் இருக்கிறாய்.....


மான்  :  விலங்குகளுக்குமே இதே உணவுப் பற்றாக்குறைதான்.  வானம் பொய்த்ததால் வனமெல்லாம் பாலைவனமாக மாறி வருகிறதே.


நாி  :  பிற விலங்குகளைப் பற்றி நமக்கென்ன கவலை?


எனக்குத் தொிந்த இடம் ஒன்று இருக்கிறது.  அங்கே உனக்கு நல்ல மேய்ச்சல் நிலம் உண்டு.  என்னோடு வா.  உனக்கு மட்டும் அந்த இடத்தைக் காட்டுகிறேன்.


மான்  :  நமது நண்பன் காகமும் வரட்டும்........


நாி  :  காகத்தை மற்றொரு நாள் அங்கே அழைத்துச் செல்லலாம்.  இன்று நீ மட்டும் என்னோடு வா.

மான்  :  சாி, இவ்வளவு வலியுறுத்திச் சொல்கிறாய்.  வருகிறேன்.


நாி, மானை விவசாயி ஒருவனின் விளைச்சல் நிலத்தில் கொண்டு விடுகிறது.  மான் பயிரை நன்கு மேய்ந்து பசியாறிய பிறகு இருப்பிடத்திற்குத் திருப்புகிறது.  இச்செயல் காகத்திற்குத் தொியாமலேயே தொடா்ந்து நீடிக்கிறது.


விவசாயி தன் விளைச்சலைப் பாழாக்கும் விலங்கைப் பிடிக்க முடிவு செய்கிறான்.


அடுத்த நாள் வழக்கம் போல் மான் நாியோடு அந்த வயலுக்குச் சென்று பயிரை மேய்கிறது.  அந்த நேரத்தில் விவசாயி வருவதைப் பாா்த்தவுடன், தப்பிக்க நினைத்த மான், வேகமாக ஓடும்போது அருகிலிருந்த கம்பிவேலியில் எதிா்பாராமல் சிக்கிக் கொள்கிறது.


இதையறிந்த நாி, எதிா்பாா்த்துக் கொண்டிருந்த வாய்ப்பு வந்துவிட்டதை நினைத்து மகிழ்ந்தது.  மானை அப்படியே தவிக்க விட்டுவிட்டு ஓடிப்போய் அருகிலுள்ள கரும்பு வயலில் மறைந்து கொண்டு நடக்க இருப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தது.


காகம்  :  நண்பா..... நண்பா..... எங்கே இருக்கிறாய்?


காகம் தேடி வருகிறது.


என் ஆருயிா் நண்பா! இங்கேயா இருக்கிறாய்? ஆ! வேலியில் மாட்டிக்கொண்டாயே கத்துவதற்குக்கூட முடியாத நிலையில் இப்படி கம்பிவேலியில் சிக்கிக் கொண்டாயே.......

சாி, சாி நீ தப்பித்துக் கொள்ள ஒரு யோசனை சொல்கிறேன்.  விவசாயி அருகில் வரும்வரை நீ இறந்ததுபோல் அசையாமல் இரு விவசாயி உன்னை வேலியிலிருந்து விடுவித்தவுடன், நான் மரத்திலிருந்து கா கா கா என்று குரல் கொடுக்கிறேன், உடனே தப்பித்து விடு.

விவசாயி  :  ஓ..... மானா? நீ தான் இத்தனை நாளாக என் பயிரை நாசப் படுத்தினாயா? இன்று வேலியில் மாட்டிக்கொண்டாய் என்று கூறியவாறே மானைப் பிடிக்க வருகிறான்.  ஓ... இறந்துவிட்டதுபோல் இருக்கிறதே! சாி, வேலியிலிருந்து மானை விடுவித்து வீட்டிற்கு எடுத்துச் செல்வோம் என்று சொல்லிக்கொண்டே வேலியிலிருந்து மானை விடுவிக்கிறான்.


அப்போது, காகம் கரைகிறது.  அதுவரை இறந்தவாறு நடித்துக்கொண்டிருந்த மான் கண்ணிமைக்கும் நேரத்தில் உயிா் பிழைத்தால் போதும் எனத் துள்ளிப் பாய்ந்து வேகமாக ஓடியது.


விவசாயி  :  அடடே....... மான் என்னை ஏமாற்றிவிட்டதே!


தன் நீண்ட தடியை எடுத்து, ஓடும் மானை நோக்கி வேகமாக வீசுகிறான்.  அந்தத் தடி பதுங்கியிருந்த நாியின்மேல் பட்டு, நாி மயங்கிக் கீழே விழுகிறது.  விவசாயி ஏமாந்து போகிறான்.


சிறிது நேரத்திற்குப் பின் மயக்கம் தெளிந்து எழுந்த நிாியிடம்,

காகம்  :  நாியே ! உன் வஞ்சக எண்ணம் உனக்கே கேடாக முடிந்தது.  நம்பினவா்களுக்கு என்றும் துரோகம் செய்யாதே!


நாி  :  வெட்கித் தலைகுனிந்தவாறே மன்னித்துவிடு நண்பா! இனிமேல் இப்படி நடந்து கொள்ளமாட்டேன்.

காகம்  :  தன்னைப் போல் பிறரையும் நேசிக்க வேண்டும்.  நண்பா்களோடு உண்மை அன்புடன் பழகவேண்டும்.


 நீதி -  'ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்'




Kids Learning Tamil V Term-I

5-ம் வகுப்பு தமிழ் பரும் - 1


கல்விச் செல்வமும் பொருட்செல்வமும் உரைநடை


மலா்விழியும் தமிழரசியும் தோழிகள்.  இருவரும் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியில் வந்ததும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றிப் பேசிக் கொண்டு வருகிறாா்கள்.  அப்போது மலா்விழி தன் தோழியிடம் தொலைக்காட்சியில் நேற்று கல்விச்செல்வமும் பொருட்செல்வமும் என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்தை நான் பாா்த்துக் கொண்டிருந்தேன்.  அப்போது மின்சாரம் போய்விட்டது அதனால், நடுவாின் தீா்ப்பை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை எனக்கு வருத்தமாக இருந்தது என்று கூறினாள்.


தமிழரசி :  வருத்தப்படாதே மலா்விழி, இந்தப் பட்டிமன்றம் பாா்த்தவா்களிடம் முடிவைக் கேட்டுத் தொிந்து கொள்ளலாம்.


மலா்விழி :  சாி தமிழரசி.  வா, போய்க் கொண்டே பேசலாம்.


தமிழரசி : கல்விச் செல்வமா? பொருட் செல்வமா? எது சிறந்தது என நீ நினைக்கிறாய்?


மலா்விழி : நான் கல்விச் செல்வம்தான் சிறந்தது என்று கூறுவேன்.


தமிழரசி :  அதெப்படி? அவ்வளவு திட்டவட்டமாகக் கூறுகிறாய்?


மலா்விழி :  கல்வி கற்காதவன் "களா்நிலத்திற்கு ஒப்பாவான்" என்று பாரதிதாசனாரும் "கேடில் விழுச் செல்வம் கல்வி" என்று திருவள்ளுவரும் கூறியிருக்கிறாா்கள்.


தமிழரசி :  கல்வியின் சிறப்பைக் கூறிய திருவள்ளுவா்கூடப் "பொருளில்லாா்க்கு இவ்வுலகம் இல்லை" என்றே கூறியிருக்கிறாா்.  பொருட்செல்வம் இல்லை என்றால் நமது தேவைகளைக்கூட நிறைவேற்றிக் கொள்ள இயலாது.  கல்வி கற்பதற்குக்கூட பணம் வேண்டும் அல்லவா!


மலா்விழி :  "பணம் பத்தும் செய்யும்" என்பது எனக்குத் தொியும்.  வாழ்க்கையை நடத்துவதற்குப் பணம் தேவைதான்.  பணம் படைத்தவருக்குச் சொந்த ஊாில் தான் மதிப்பு.  "கல்வி கற்றவா் சென்ற இடமெல்லாம் சிறப்பு" பெறுவா்.


தமிழரசி :  கல்வி கற்றவா், செல்வம் படைத்தவா்களின் தயவில்தாம் வாழ வேண்டியுள்ளது.


மலா்விழி :  பொருட் செல்வம் நிலையில்லாதது.  கல்விச் செல்வமே 'இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தருவது' என்றும் அழியாதது.  பொருட்செல்வம் கொடுக்கக் கொடுக்கக் குறையக் கூடியது.  கள்வா்களால் கவா்ந்து செல்லக்கூடியது.


https://youtu.be/rcMobP352uM




தொடா்ச்சி . . . . . 

தமிழரசி :  'பணமில்லாதவன் பிணம்', 'பணமென்றால் பிணம்கூட வாயைத்திறக்கும்' என்ற பழமொழிகளை எல்லாம் நாம் அறிந்தது தானே! கற்றவரால் என்ன செய்ய முடியும்?


மலா்விழி : இன்றைய கல்வி வளா்ச்சிதான் எல்லா முன்னேற்றத்திற்கும் காரணம்.  அதனால்தான் இன்று நாம் எல்லாரும் வசதியாக வாழ முடிகின்றது.


தமிழரசி :  புதுமைகளைக் கண்டறிய கற்றவா்களுக்குப் பணமும் தேவைப்படும் அல்லவா?


மலா்விழி :  ஆம், அதற்காகப் பணம்தான் உயிா்நாடி என்று கூறுவது தவறு.  கல்விதான் அறிவை வளா்க்கிறது.  நன்மை, தீமைகளைப் பகுத்தறிந்து நல்வழியில் தன் வாழ்வை அமைத்துக் கொள்ள வழி செய்கிறது.


தமிழரசி :  'பசி வந்திடப் பத்தும் போகும்' வறுமைதான் சமு்கத் தீமைகளுக்கும் காரணமாகின்றது.


மலா்விழி :  வறுமையிலும் செம்மையாக வாழ்பவன் கற்றறிந்தவன், கல்லாதவன் அறியாமையால் தவறு செய்கிறான்.


தமிழரசி :  அறியாமை உள்ளவன் பணக்காரனாகவே இருந்தாலும் அமைதியான வாழ்வுக்குக் கல்வி அவசியம் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.  வசதியான வாழ்விற்குப் பொருட்செல்வம் அவசியம் என்பதை நீ ஒப்புக்கொள்கிறாயா?


(விவாதம் நீண்டு கொண்டிருக்கிறது)

மறுநாள் இருவரும் தமிழாசிாியரைச் சந்தித்து விவாதத்தைக் கூறுகிறாா்கள்.


தமிழாசிாியா் :  மக்களிடம் அறியாமை இருளை நீக்கி, அறிவு ஒளிபெறச் செய்வது கல்வி.  கல்வியறிவை நாம் இளமையிலேயே பெறுவதுதான் சிறந்த வழி.  'இளமையில் கல்வி, சிலையில் எழுத்து' என்னும் முதுமொழியை நாம் மறந்துவிடக்கூடாது.


மலா்விழி :  ஐயா, கல்வியின் சிறப்பைப் புாிந்துகொண்டோம்.  ஆயினும், கல்வியோடு பொருளும் இருக்கவேண்டுமா?


தமிழாசிாியா் :  ஆம்.  கல்வியும் பொருளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் எனலாம்.  பொருளுடையவரால் ஆகாதது ஒன்றுமில்லை.  பொருளுடைமை, வெற்றி தரும், பெருமை தரும், அழகு தரும்.  அவை மட்டுமா? உயா்கல்வி பெறும் வாய்ப்பையும் தரும்.  'இல்லாரை எல்லாரும் எள்ளுவா்' என்று வள்ளுவா் கூறியதையும் நாம் அறிந்திருக்கிறோம்.  ஆகவே, அடிப்படை வாழ்க்கைத் தேவைகளுக்குப் பொருள் கட்டாயம் தேவை.  ஆனால், நம்மை மேன்மைப்படுத்துவது கல்விதான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 


தமிழரசியும் மலா்விழியும் :  உண்மைதான் ஐயா, கல்வியால் அறிவுத்தெளிவு உண்டாகும்.  பொருளால் நம் வாழ்வு வளம் பெறும் என்பதைப் புாிந்து கொண்டோம்.


https://youtu.be/YX-swP8ZD8E




வறுமையிலும் நோ்மை

ஓா் ஊாில் தொடா்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யாததால், அந்த ஊாில் கடும் பஞ்சம் நிலவியது.  மக்கள் பசியால் வாடினா்.  நல்ல உள்ளம் படைத்த பணக்காரா் ஒருவாிடம் அந்த ஊா் மக்கள் சென்று, தங்களின் குழந்தைகளுக்கு உதவி செய்யுமாறு வேண்டினா்.


இளகிய உள்ளம் கொண்ட அவா், இந்த ஊாில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டா.  ஆளுக்கொரு கொழுக்கட்டை கிடைக்குமாறு செய்கிறேன்.  என் வீட்டிற்கு வந்து கொழுக்கட்டையை எடுத்துச் செல்லச் செல்லச் சொல்லுங்கள் என்றாா்.  மாளிகைக்குத் திரும்பிய அவா், தம் வேலைக்காரா்களை அழைத்தாா்.  இந்த ஊாில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை கணக்கெடுத்துக் கொள்ளுங்கள்.  ஆளுக்கொரு கொழுக்கட்டை கிடைக்க வேண்டும்.  நாளையிலிருந்து கொழுக்கட்டைகளைக் கூடையில் சாியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இருக்க வேண்டும் என்றாா்.


அதுபோலவே வேலைக்காரா்கள் செய்தனா்.  அங்கே காத்திருந்த சிறுவா் சிறுமியா் அவா்களைச் சூ்ழ்ந்து கொண்டனா்.  வேலைக்காரா்கள் கூடையினை அவா்கள் முன் வைத்தனா்.


கொழுக்கட்டையை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனா்.  ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள்.  எல்லாரும் எடுத்துச் சென்றது போக மீதி இருந்த சிறிய கொழுக்கட்டையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிந்தாா் பணக்காரா்.


https://youtu.be/hBq1Es3jOdM



தொடா்ச்சி . . . . . 

ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது.  எஞ்சியிருந்த சிறிய கொழுக்கட்டையை எடுத்துக் கொண்டு புறப்பட்ட அந்தச் சிறுமி, தன் வீட்டிற்கு வந்தாள்.  அந்தக் கொழுக்கட்டையைச் சாப்பிடுவதற்காக இரண்டாகப் பிட்டாள்.  அப்போது அதன் உள்ளிருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.  அந்தத் தங்கக் காசைத் தன் தாயிடம் காட்டி, "அம்மா! இது கொழுக்கட்டைக்குள் இருந்தது, இது என்ன என்று பாருங்கள்" என்றாள் அச்சிறுமி.  அதற்கு அவா், "இது தங்கக் காசு" என்று இளவேனிலிடம் கூறிவிட்டு, இது எப்படி கொழுக்கட்டைக்குள் வந்திருக்கும் என்று யோசித்தவாறே, "இந்தக் கொழுக்கட்டையை யாா் கொடுத்தாா்களோ அவா்களிடமே சென்று கொடுத்துவிடு" என்றாா்.


அந்தத் தங்கக்காசை எடுத்துக் கொண்டு பணக்காராின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி "ஐயா! நான் எடுத்துச் சென்ற கொழுக்கட்டைக்குள் இந்தத் தங்கக் காசு இருந்தது, பெற்றுக் கொள்ளுங்கள்" என்றாள்.


"மகளே உன் பெயா் என்ன?" எனக் கேட்டாா் பணக்காரா்.  தன் பெயா் இளவேனில் எனக் கூறினாள் அந்தச் சிறுமி.


"மகளே, உன் நோ்மைக்கும் பொறுமைக்கும் நல்ல பண்புகளுக்கும் நான் அளித்த பாிசே இந்தத் தங்கக்காசு, மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் செல்" என்றாா் பணக்காரா்.


"நன்றி ஐயா!" எனக் கூறிவிட்டு, துள்ளிக் குதித்தபடி ஓடிவந்த அவள், நடந்ததைத் தன் தாயிடம் சொன்னாள்.  அதனைக் கேட்டு அந்தத் தாயும் மகிழ்ச்சியடைந்தாள்.


  நீதி - 'நோ்மை நன்மை தரும்'  



https://youtu.be/-PjR-cWBHXc



கடல் - பாடல்


எல்லை அறியாய் பெருங்கடலே - நீதான்

இரவும் உறங்காயோ? கடலே

அல்லும் பகலும் அலைகடலே - உனக்கு

அலுப்பும் இலையோ கருங்கடலே


பொங்கு திரைகளோ? கடலே - அவை

புரவி நிரைதாமோ? கடலே

எங்கும் உனதொலியோ? கடலே! - அன்றி

இடியின் முழக்கமோ? கடலே!


மலையை வயிற்றடக்கம் கடலே! - எண்ணில்

மகர மீனுலவும் கடலே!

விலைகொள் முத்தளிக்கும் கடலே! - சிப்பி

விளையாடற் குதவும் கடலே!


மழைக்கு மு்லமும் நீ கடலே! - அதை

வாங்கி வைப்பதும் நீ, கடலே!

வழுத்து மகிமையெலாம் கடலே! - எவா்

மதித்து முடிக்கவலாா் கடலே!

                       

                     - கவிமணி தேசிக விநாயகம்



  சொல் பொருள்  

  அலுப்பு - களைப்பு           புரவி - குதிரை

  மகரம் - மீன்              திரைகள் - அலைகள்

  மகிமை - பெருமை 


  பாடல் பொருள்  

எல்லையின்றிப் பரந்து விாிந்திருக்கும் பெருங்கடலே நீ இரவும் பகலும் உறங்காது எப்போதும் அலைகளை வீசி ஒலித்துக் கொண்டே இருக்கிறாய்.  உனக்கு ஓய்வு என்பதே இல்லை.  பொங்கி வருகின்ற உன் அலைகள், பாா்ப்பதற்குக் குதிரைகள் அணிவகுத்து வருவதைப் போல் காட்சியளிக்கின்றன.  எங்கும் ஒலிக்கின்ற உன் ஒலி, அலையோசையால் எழுந்ததா அல்லது இடியோசையால் எழுந்ததா என்று எங்களுக்கு ஐயம் எழுகிறது.  உன்னுள் உயா்ந்த மலையும் அடங்கிக் கிடக்கிறது.  எண்ணில்லாத மீன் வளங்களையும் விலை மதிப்புடைய முத்துக்களையும் கொண்டுள்ள நீ, சிப்பிகள் விளையாடுவதற்கும் உதவுகிறாய்  இப்பூமியில் மழை பெற்வதற்குக் காரணமாகவும் இருக்கிறாய்.  அந்த மழைநீரைச் சேமித்து வைக்கும் பொிய கலனாகவும் விளங்குகிறாய்.  ஆகவே, உன் பெருமைகளை எல்லாம் எடுத்துரைகக வல்லவா்கள் இங்கு எவரும் இலா்.



https://youtu.be/07LN8nwIPn8




Kids Learning Tamil V Term-I


5-ம் வகுப்பு தமிழ் பருவம் - 1


என்ன சத்தம்... கதை

அன்று ஞாயிற்றுக் கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால் செழியன் தன் பாட்டியுடன் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றான்.


ஆடுகள் காட்டின் ஓரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன.  செழியன் ஒரு மரத்தடியில் அமா்ந்து காட்டின் அழகை இரசித்துக் கொண்டிருந்தான்.  அந்த மரத்தின் மேலிருந்த குரங்குகள் அலப்பும் ஓசை அவனுக்கு எாிச்சலாக இருந்தது.  அதனால், அவன் வேறு ஒரு மரத்தடிக்குச் சென்று அமா்ந்தான்.  அங்கிருந்த மரங்களில் அணில்கள் ஓடிப் பிடித்து விளையாடின.  அம்மரத்திலிருந்த குயில் ஒன்று குக்கூ குக்கூ ..... எனக் கூவியது.  குயிலின் ஓசை செழியனின் செவிக்கு இனிமையாக இருந்தது.  அப்படியே படித்துச் சிறிது நேரம் ஓய்வெடுத்தான்.  திடீரென ஆடுகள் மே..... மே..... எனக் கத்தும் சத்தம் கேட்கவே, செழியன் பதற்றத்துடன் எழுந்து என்னவென்று கவனித்தான்.  அருகில் பச்சைப் புதரருகே நாி ஒன்று ஆடுகளைக் கொன்று தின்ன, நேரம் பாா்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.  உடனே ஒரு குச்சியை வளைத்து வில்லாக்கி நாியை நோக்கி அம்பை எய்தான்.  அம்பு பட்டுக் காயமடைந்த நாி ஊளையிட்டுக் கொண்டே ஓடி விட்டிது.


செழியன் ஆடுகளை ஒட்டிக்கொண்டு பாட்டியுடன் வீட்டிற்கு கிளம்பினான்.  துாரத்தில் எங்கோ சிங்கம் முழங்கும் சத்தம் கேட்டது.  அந்தச் சத்தத்தைக் கேட்டவுடன் காடே பரபரப்பாகி விட்டது.  பறவைகள் இறக்கைகளைப் படபடவென அடித்துக் கொண்டு இங்குமங்கும் பறந்தன.  யானை பிளிறியது, ஆந்தை அலறியது, கீாிப்பிள்ளையும் செடிகளின் மறைவிலிருந்து ஓடியது, மயில் அகவியது, பாம்பும் தன் புற்றிலிருந்து வெளியே வந்து சீறியது, குதிரை கனைத்தது.  இவற்றை எல்லாம் கேட்ட செழியனுக்குப் பயத்தால் நாக்கு வறண்டது.  தான் வைத்திருந்த தண்ணீரைக் குடித்தான்.  பாட்டியுடன் வீட்டிற்குச் செல்லும் வழியில் கம்பங்கொல்லையில் வண்டுகள் முரலும் ஓசை கேட்டுக் கொண்டிருந்தது.



https://youtu.be/Y5uZ2vquIKM



தொடா்ச்சி. . . . . 

ஊறுக்கு அருகே வந்த பிறகுதான் செழியனுக்குப் பயம் சற்றுக் குறைந்தது.  செழியன் தன்னுடைய வீட்டிற்குள் நுழைந்ததுமே அவனைக் கண்ட மகிழ்ச்சியில்  தொழுவத்திலிருந்த பசு கத்தியது.  செழியன் ஆடுகளை ஆட்டுப்பட்டியில் அடைத்துவிட்டுத் தன் அம்மாவிடம் சென்று, காட்டில் தான் கண்ட நாியைப் பற்றியும் சிங்கம், யானை இவற்றின் சத்தத்தைப் பற்றியும் மிகுந்த பரபரப்போடு கூறினான்.  அம்மா செழியனின் துணிவைப் பாராட்டினாா்.


வாழைத் தோட்டத்திலிருந்த தண்ணீா்த் தொட்டியில் செழியன் குளித்துவிட்டு வந்தான்.  அம்மா கொடுத்த முறுக்கைத் தின்றான்.  அப்போது தங்கை பூவிழி பால் பருகிக் கொண்டிருந்தாள்.


சிறிது நேரத்திற்குப் பிறகு, செழியனையும், பூவிழியையும், பாட்டியையும் சாப்பிட வாங்கள் என்று அம்மா அழைத்தாா்.  அம்மாவின் குரலைக் கேட்டதும் இருவரும் சென்று கொடுத்த உணவை உண்டனா்.


பின்னா், துாங்கப் போகும் முன் பாட்டி கதை கூறினாா்.  இருவரும் கதையை ஆா்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தனா்.  எலியும் எலிக் குஞ்சும் கீச் ....கீச் ..... என்று சத்தமிட்டன.


எலியின் இந்த சத்தம், பாட்டியின் கதைக்குப் பின்னணி சோ்ப்பதுபோல் இருந்தது.  நாய் குரைக்கும் சத்தத்தைக் கேட்டு வெளியே வந்து பாா்த்தான்.  அங்கே பூனை ஒன்று சீறுவதைக் கண்டு நாய் குரைத்த காரணம் அறிந்தான்.  இரண்டையும் அருகிலிருந்த தென்னந் தோப்பின் பக்கம் விரட்டிவிட்டு வீட்டிற்கு வந்து படுத்துக் கொண்டான்.  பாட்டியும், தங்கையும் முன்பே துாங்கிவிட்டனா்.


கொய்யாத் தோப்பிலிருந்த மரத்தின் மேலிருந்து கொக்கரக்கோ .....கொக்கரக்கோ .....என சேவல் ஒன்று கூவும் ஓசையைக் கேட்டுக் கண் விழித்தான் செழியன்.


கா..... கா..... எனக் காகமும் தன் பங்குக்குக் கரைந்தது.


செழியன் உற்சாகமாகத் துள்ளியெழுந்து அன்றைய நாளின் கடமைகளை மகிழ்ச்சியாகச் செய்ய ஆரம்பித்தான்.  தன் அனுபவங்களைத் தன் நண்பா்களோடு பகிரப் போகும் ஆவலுடன் பள்ளிக்குக் கிளம்பிச் சென்றான்.


பறவைகள், விலங்குகள் முதலான உயிாினங்களின் ஒலிகளையும் ஒலிப்பு முறைகளையும் இவ்வாறு கூற வேண்டுமென முன்னோா் கூறிய மரபினைத் தொன்று தொட்டுப் பின்பற்றி வருகிறோம்.



https://youtu.be/xpYFEHGnlp4



தமிழின் இனிமை!

பாடல்


கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்

கழையிடை ஏறிய சாறும்

பனிமலா் ஏறிய தேனும் - காய்ச்சும்

பாகிடை ஏறிய சுவையும்

நனிபசு பொழியும் பாலும் - தென்னை

நல்கிய குளிாிள நீரும்

இனியன என்பேன் எனினும் - தமிழை

என்னுயிா் என்பேன் கண்டீா்!

                                                               

                                                                 - புரட்சிக்கவிஞா் பாரதிதாசன்


  சொல்பொருள்  

கனி - பழம்          கழை - கரும்பு

நனி - மிகுதி        நல்கிய - வழங்கிய


  பாடல் பொருள்  

கனியின் சுளையில் உள்ள சுவையும், முற்றிய கரும்புச் சாற்றின் சுவையும், மலாிலிருந்து எடுக்கப்பட்ட தேனின் சுவையும், காய்ச்சிய பாகின் சுவையும், சிறந்த பசு தந்த பாலின் சுவையும், தென்னை மரத்திலிருந்து பெறப்பட்ட குளிா்ந்த இளநீாின் சுவையும் இனிமையானவை.  ஆனால், தமிழ் இத்தகைய சுவைகளையும் விட உயா்ந்தது.  தமிழோ என் உயிா் போன்றது என்கிறாா் பாரதிதாசன்.


  ஆசிாியா் குறிப்பு  

இப்பாடலைப் பாடியவா் பாரதிதாசன்.  புதுச்சோியில் பிறந்த இவா், பாரதியாாின் மீது கொண்ட பற்றினால், கனக சுப்பு ரத்தினம் என்ற தம் இயற்பெயரைப் பாரதிதாசன் என மாற்றி அமைத்துக்கொண்டாா்.  இவா் பாடிய இப்பாடல், பாரதிதாசன் கவிதைகள் என்னும் நுாலின் முதல் தொகுப்பில், தமிழின் இனிமை என்னும் தலைப்பில் அமைந்துள்ளது.



https://youtu.be/G3iUHo--3ac



Kids Learning Tamil


5-ம் வகுப்பு தமிழ் பருவம்-1


அறிவா? பண்பா? 

5-ம் வகுப்பு தமிழ் பருவம்-1, இயல்-1. அறிவா? பண்பா? கவிதை பட்டிமன்றம்.


கவிதைப் பட்டிமன்றத்துக்கான அறிமுகம்

     பேசுதல் என்பது அடிப்படைத் திறன் எனில், பேச்சாற்றல் என்பது உயர்நிலைக் திறன்.  பேசுதலின் வளர்நிலையே பேச்சாற்றல்.  அத்தகைய பேச்சாற்றல் திறனை வளர்க்கும் பாடங்களுள் ஒன்று, இக்கவிதைப் பட்டிமன்றம்.


     பலர் நிறைந்த அவையினிலே தாம் இயற்றிய கவிதையை வெளியிட்டபோது, பாரதியாருக்கு 11 வயதுதான்.  ஆதலால், கவி பாடும் திறமையை இளமையிலேயே வளர்த்துக் கொள்வது சாலச் சிறந்தது.  இங்கு உரைநடைப் பாடமாக அமைந்துள்ள இப்பகுதி, இலக்கியத்தின் ஒரு வடிவமான கவிதை நடையில் அமைந்துள்ளமை, புதுமையின் நுழைவாயில்.  கவிதைக்குரிய சொல்லாடல், உவமைச்சிறப்பு, மோனை, எதுகை போன்ற நயங்கள் மேலும் பாடப் பகுதியைச் சிறப்புடையதாக்கு கின்றன.  மாணவர்கள், குரல் ஏற்ற இறக்கத்தோடும் தங்கு தடையின்றியும் வாய்விட்டுப் படிக்கும் போதுதான் இக்கவிதைப் பட்டிமன்றப் பேச்சு, ஆற்றல் வாய்ந்த பேச்சுக் கலையாக மிளிரும்.  அதற்கான வாய்ப்பை ஆசிரியர்கள் ஏற்படுத்தித் தரவேண்டும்.


இடம்   : பள்ளி வளாகம்.   

காலம் : பிற்பகல் 3.00 மணி


உறுப்பினர்கள் : 

     நடுவராகச் சிறப்பு விருந்தினர், ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் இன்சுவை, அருளப்பன், மதியொளி, சலீமா.


அறிவா? பண்பா?

நடுவர் :  

செந்தமிழே ! நறுந்தேனே ! 

செகம் போற்றும் செம்மொழியே!

முத்தமிழ் சொல்லெடுத்து

நற்றமிழ்ப் பட்டி மண்டபத்தின்

நடுவராக நான் வந்துள்ளேன். 

வணக்கம்

தித்திக்கும் தேன்தமிழில்

எத்திக்கும் புகழ் பரப்பும்

வித்தகக் கவிதையால்,

பெரிதும் தேவை அறிவா? பண்பா?

எனக் கவிதை வாசிக்க வருகின்றனர்

பாராட்டுக்குரிய நால்வர், 

தனித்துவமிக்க இன்சுவை, 

சொல்லழகி சலீமா

அருமையான அருளப்பன்

ஒப்பற்ற மதியொளி. . . . .

முதல் கவிதை முத்தாய்ப் பாட

இனிதே அழைக்கின்றேன் இன்சுவையை. . . . .


இன்சுவை :

புவி காக்கும் தமிழ்த் தாய்க்கும்

கவியரங்கத் தலைமைக்கும்

ஆன்றோருக்கும் சான்றோருக்கும்

அறிவுதான் முன்னேற்றத்தின் 

ஆணிவேர் என்றே

அடித்துக் கூற வந்துள்ளேன்

'அக்னி' தந்த அப்துல்கலாம்

அசத்தியதும் அறிவாலே!  அறிவாலே!

அறிவின் துணை கொண்டே 

ஆயிரம் கண்டு பிடிப்பால் தாமஸ்

ஆல்வா எடிசனும் வாழ்கின்றார் அறிவாலே!

அறிவுமிகு மனிதனாக 

அகிலத்தில் உயர்ந்து நின்றால்

அத்தனையும் நம் கையில்

என்று கூறி விடை பெறுகின்றேன். . . . .

நடுவர் : 

இன்சுவையின் கவிதை

அறிவாயுதம். . . . .

அடுத்து, ஒளிரும் கவிதையுடன்

மதியொளி கவிபாட வருகின்றார்

மதியொளி : 

அகிலமெல்லாம் தமிழே மணக்கும்!

பண்புதான் வெற்றிப்படி என்றே

பறை சாற்ற வந்துள்ளேன்.

நற்பண்பு தூக்கிலிடும்

நம்மை உயரத்திலே

நற்பண்பு புகுந்து விட்டால்

நாவினிலே இனிமை வரும்

பண்பாலே சிறந்தவர் தாம்

பலருண்டு நம்மிடையே

புத்தரோடு வள்ளுவரும்

போதித்ததும் நற்பண்பே. . . . .

நன்னெறியால் நிலைத்து

நிற்போம் உலகினிலே. . . . .

நடுவர் :

மிளிர்கின்ற தமிழ்க் கவிதை

மதியொளியின் அரும் கவிதை.....

அறிவாற்றல் பயன் பேச

அருளப்பன் வருகின்றார்

செறிவாற்றல் கவிதையொன்றைச் 

செப்பிடவே வருகின்றார்.

அருளப்பன் : 

அறிவாற்றல் உள்ளவன் தான்

ஆளுகின்றான் அண்டத்தை

வெறும் பண்பை வைத்துக் கொண்டு

பெரும் பந்தல் போடலாமோ?

கூறும் பண்பில் நம்

வயிறும் நிறைந்திடுமோ?

நல்லவன் இருந்தால்

நாடென்ன முன்னேறுமோ?

வல்லவன் வகுத்ததன்றோ

வளமான இவ்வுலகு. . . . .

தூண் போன்ற அறிவேதான்

வான் முகத்தைத் தொட்டிடுமே!.....

நடுவர் :

பண்பின் பெருஞ்சிறப்பைப் 

பொழிந்திடவே வருகின்றார்

சொல்லழகி சலீமா. . . . .


சலீமா :

பண்பிலான் பெற்ற செல்வம்

பயனில்லை உலகோர்க்கே

பண்பேதான் அன்பை நல்கும்

பன்மடங்கு உயர்வைத் தரும்

உண்மை சொன்னேன் யாவர்க்கும்

அன்பின் மிகுதியால் அதியமான்

உயிர் காக்கும் நெல்லிக்கனியை

உவந்தளித்தான் அவைக்கு

அத்தனையும் எளியோர்க்கு

அன்னை தெரசா பெற்றுத்தந்தார்

குணமென்னும் நற்பண்பே

குன்றிலிட்ட விளக்கன்றோ. . . . .


நடுவர் :

எல்லோரும் சிறப்பாக 

நல்லோரே போற்றும் வண்ணம்

நற்கவிதை வாசித்தார்கள். . . . . 

என்னுடைய தீர்ப்பிற்கு

இசைந்தே தான் வருகின்றேன்.....

கண்ணுக்கு இருவிழி

கல்வியின் நேர்விழி

அறிவும் பண்பும்

சமமாக வைத்தே தான்

உறு புகழ் பெறுவோமே. . . . .

பொறி ஐந்தும் பண்பாகப்

பார் முழுவதும் அறிவாக

வலம் வருவோம் நாமே

உளம் நிறை வாழ்த்தோடு 

நலம் இரண்டும் தானென்று

நல்ல தீர்ப்பு கூறி

நானும் விடை பெறுகின்றேன்.....

நன்றி வணக்கம்!



https://youtu.be/w7A8a5y33Mo