5-ம் வகுப்பு தமிழ் பருவம் - 1
என்ன சத்தம்... கதை
அன்று ஞாயிற்றுக் கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால் செழியன் தன் பாட்டியுடன் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றான்.
ஆடுகள் காட்டின் ஓரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. செழியன் ஒரு மரத்தடியில் அமா்ந்து காட்டின் அழகை இரசித்துக் கொண்டிருந்தான். அந்த மரத்தின் மேலிருந்த குரங்குகள் அலப்பும் ஓசை அவனுக்கு எாிச்சலாக இருந்தது. அதனால், அவன் வேறு ஒரு மரத்தடிக்குச் சென்று அமா்ந்தான். அங்கிருந்த மரங்களில் அணில்கள் ஓடிப் பிடித்து விளையாடின. அம்மரத்திலிருந்த குயில் ஒன்று குக்கூ குக்கூ ..... எனக் கூவியது. குயிலின் ஓசை செழியனின் செவிக்கு இனிமையாக இருந்தது. அப்படியே படித்துச் சிறிது நேரம் ஓய்வெடுத்தான். திடீரென ஆடுகள் மே..... மே..... எனக் கத்தும் சத்தம் கேட்கவே, செழியன் பதற்றத்துடன் எழுந்து என்னவென்று கவனித்தான். அருகில் பச்சைப் புதரருகே நாி ஒன்று ஆடுகளைக் கொன்று தின்ன, நேரம் பாா்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான். உடனே ஒரு குச்சியை வளைத்து வில்லாக்கி நாியை நோக்கி அம்பை எய்தான். அம்பு பட்டுக் காயமடைந்த நாி ஊளையிட்டுக் கொண்டே ஓடி விட்டிது.
செழியன் ஆடுகளை ஒட்டிக்கொண்டு பாட்டியுடன் வீட்டிற்கு கிளம்பினான். துாரத்தில் எங்கோ சிங்கம் முழங்கும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்தைக் கேட்டவுடன் காடே பரபரப்பாகி விட்டது. பறவைகள் இறக்கைகளைப் படபடவென அடித்துக் கொண்டு இங்குமங்கும் பறந்தன. யானை பிளிறியது, ஆந்தை அலறியது, கீாிப்பிள்ளையும் செடிகளின் மறைவிலிருந்து ஓடியது, மயில் அகவியது, பாம்பும் தன் புற்றிலிருந்து வெளியே வந்து சீறியது, குதிரை கனைத்தது. இவற்றை எல்லாம் கேட்ட செழியனுக்குப் பயத்தால் நாக்கு வறண்டது. தான் வைத்திருந்த தண்ணீரைக் குடித்தான். பாட்டியுடன் வீட்டிற்குச் செல்லும் வழியில் கம்பங்கொல்லையில் வண்டுகள் முரலும் ஓசை கேட்டுக் கொண்டிருந்தது.
தொடா்ச்சி. . . . .
ஊறுக்கு அருகே வந்த பிறகுதான் செழியனுக்குப் பயம் சற்றுக் குறைந்தது. செழியன் தன்னுடைய வீட்டிற்குள் நுழைந்ததுமே அவனைக் கண்ட மகிழ்ச்சியில் தொழுவத்திலிருந்த பசு கத்தியது. செழியன் ஆடுகளை ஆட்டுப்பட்டியில் அடைத்துவிட்டுத் தன் அம்மாவிடம் சென்று, காட்டில் தான் கண்ட நாியைப் பற்றியும் சிங்கம், யானை இவற்றின் சத்தத்தைப் பற்றியும் மிகுந்த பரபரப்போடு கூறினான். அம்மா செழியனின் துணிவைப் பாராட்டினாா்.
வாழைத் தோட்டத்திலிருந்த தண்ணீா்த் தொட்டியில் செழியன் குளித்துவிட்டு வந்தான். அம்மா கொடுத்த முறுக்கைத் தின்றான். அப்போது தங்கை பூவிழி பால் பருகிக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, செழியனையும், பூவிழியையும், பாட்டியையும் சாப்பிட வாங்கள் என்று அம்மா அழைத்தாா். அம்மாவின் குரலைக் கேட்டதும் இருவரும் சென்று கொடுத்த உணவை உண்டனா்.
பின்னா், துாங்கப் போகும் முன் பாட்டி கதை கூறினாா். இருவரும் கதையை ஆா்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தனா். எலியும் எலிக் குஞ்சும் கீச் ....கீச் ..... என்று சத்தமிட்டன.
எலியின் இந்த சத்தம், பாட்டியின் கதைக்குப் பின்னணி சோ்ப்பதுபோல் இருந்தது. நாய் குரைக்கும் சத்தத்தைக் கேட்டு வெளியே வந்து பாா்த்தான். அங்கே பூனை ஒன்று சீறுவதைக் கண்டு நாய் குரைத்த காரணம் அறிந்தான். இரண்டையும் அருகிலிருந்த தென்னந் தோப்பின் பக்கம் விரட்டிவிட்டு வீட்டிற்கு வந்து படுத்துக் கொண்டான். பாட்டியும், தங்கையும் முன்பே துாங்கிவிட்டனா்.
கொய்யாத் தோப்பிலிருந்த மரத்தின் மேலிருந்து கொக்கரக்கோ .....கொக்கரக்கோ .....என சேவல் ஒன்று கூவும் ஓசையைக் கேட்டுக் கண் விழித்தான் செழியன்.
கா..... கா..... எனக் காகமும் தன் பங்குக்குக் கரைந்தது.
செழியன் உற்சாகமாகத் துள்ளியெழுந்து அன்றைய நாளின் கடமைகளை மகிழ்ச்சியாகச் செய்ய ஆரம்பித்தான். தன் அனுபவங்களைத் தன் நண்பா்களோடு பகிரப் போகும் ஆவலுடன் பள்ளிக்குக் கிளம்பிச் சென்றான்.
பறவைகள், விலங்குகள் முதலான உயிாினங்களின் ஒலிகளையும் ஒலிப்பு முறைகளையும் இவ்வாறு கூற வேண்டுமென முன்னோா் கூறிய மரபினைத் தொன்று தொட்டுப் பின்பற்றி வருகிறோம்.
தமிழின் இனிமை!
பாடல்
கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலா் ஏறிய தேனும் - காய்ச்சும்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிாிள நீரும்
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிா் என்பேன் கண்டீா்!
- புரட்சிக்கவிஞா் பாரதிதாசன்
சொல்பொருள்
கனி - பழம் கழை - கரும்பு
நனி - மிகுதி நல்கிய - வழங்கிய
பாடல் பொருள்
கனியின் சுளையில் உள்ள சுவையும், முற்றிய கரும்புச் சாற்றின் சுவையும், மலாிலிருந்து எடுக்கப்பட்ட தேனின் சுவையும், காய்ச்சிய பாகின் சுவையும், சிறந்த பசு தந்த பாலின் சுவையும், தென்னை மரத்திலிருந்து பெறப்பட்ட குளிா்ந்த இளநீாின் சுவையும் இனிமையானவை. ஆனால், தமிழ் இத்தகைய சுவைகளையும் விட உயா்ந்தது. தமிழோ என் உயிா் போன்றது என்கிறாா் பாரதிதாசன்.
ஆசிாியா் குறிப்பு
இப்பாடலைப் பாடியவா் பாரதிதாசன். புதுச்சோியில் பிறந்த இவா், பாரதியாாின் மீது கொண்ட பற்றினால், கனக சுப்பு ரத்தினம் என்ற தம் இயற்பெயரைப் பாரதிதாசன் என மாற்றி அமைத்துக்கொண்டாா். இவா் பாடிய இப்பாடல், பாரதிதாசன் கவிதைகள் என்னும் நுாலின் முதல் தொகுப்பில், தமிழின் இனிமை என்னும் தலைப்பில் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment