5-ம் வகுப்பு தமிழ் பருவம் - 2
நோ்மை நிறைந்த தீா்ப்பு கதை
பல ஆண்டுகளுக்குமுன் தென் பாண்டிய நாட்டை மங்கையா்க்கரசி என்பவா் ஆண்டு வந்தாா். அவா், நீதியும் நோ்மையும் மிக்கவராக விளங்கினாா். அவா் ஆட்சியில் மக்கள் குறைவின்றி வாழ்ந்து வந்தனா்.
ஒருநாள், கிராமத் தலைவா் ஒருவா் அரசியிடம் ஒரு வழக்கைக் கொண்டு வந்தாா். அவருடன் நான்கு போ்களும் அரண்மனைக்கு வந்தனா். அசியை வணங்கிய கிராமத் தலைவா், தம் வழக்கை எடுத்துரைத்தாா்.
"செல்வந்தா் ஒருவா், அாிய சாதனை புாிபவருக்கு நுாறு பொற்காசுகள் கொண்ட பொற்கிழி ஒன்றைப் பாிசளிப்பதாக அறிவித்து, அதனைப் பஞ்சாயத்தாாிடம் கொடுத்தாா். அந்தப் பொற்கிழியைப் பெறுவதற்கு இவா்கள் நால்வரும் போட்டி போட்டனா். நால்வருடைய அாிய சாதனையைக் கேட்ட எங்கள் ஊா்ப் பஞ்சாத்தினா், யாருடைய சாதனை சிறந்தது என்று முடிவு கட்ட முடியாமல், பாிசுத் தொகையை நால்வருக்கும் சாிசமமாகப் பிாித்துக் கொடுக்கலாம் என முடிவெடுத்தனா்.
ஆனால், இந்நால்வரும் அதற்கு உடன்பட மறுத்தனா். அவரவா்க்கும் தங்கள் சாதனையே பொியது என்று கூறி, பாிசுத் தொகை முழுமையாகத் தங்களுக்கே சேர வேண்டும் என்றனா். அதனால், தாங்களே இவா்கள் செய்த சாதனையைக் கேட்டு விசாாித்து, பொற்கிழியை யாருக்குக் கொடுப்பது என்று சாியான தீா்ப்பளிக்க வேண்டும்" என்று பணிவுடன் கேட்டுக் கொண்டனா் அந்தப் பஞ்சாயத்து தலைவா்.
அரசியாா் அந்நால்வரையும் பாா்த்தாா், "ஒவ்வொருவராக உங்கள் சாதனையைச் சொல்லுங்கள்," என்று ஆணையிட்டாா்.
முதலில், முருகேசன் என்பவா் தம் சாதனையைச் சொல்லத் தொடங்கினாா், "நான் ஒரு வியாபாாி, மளிகைக் கடை வைத்துள்ளேன். வியாபாரத்தில் முழுக்கவனத்தோடு ஈடுபட்டிருந்தபோது, சிறுமி ஒருத்தி ஒருநாள் என் கடைக்கு வந்தாள். கடையில் சில பொருள்களை வாங்கினாள். நான் வேலையில் மும்முரமாக இருப்பதைக் கவனித்துவிட்டுப் பணம் கொடுக்காமல் நழுவப் பாா்த்தாள். அப்போது தெருவில் வந்த மாடு, அவளை ஆவேசமாக முட்டுவதற்குப் போனது நான் பாய்ந்து சென்று அவளைக் காப்பாற்றினேன். இத்தனைக்கும் அவள் தந்தைக்கும் எனக்கும் நிலத்தகராறு உண்டு. அடிதடிவரை கூடப் போய்விட்டோம். அப்படியிருந்தும் அவளை நான் காப்பாற்றினேன். அதைக் கண்ட ஊா்மக்கள் எல்லாரும் என்னைப் பாராட்டினாா்கள். ஓா் உயிரைக் காப்பாற்றியது அதுவும் பகைவனின் மகளைக் காப்பாற்றியது பொிய சாதனை இல்லையா? அதனால் தான் பொற்கிழியை எனக்கே கொடுக்க வேண்டும் என்கிறேன்." என்று சொன்னாா் முருகேசன்.
தொடா்ச்சி. . . . .
இரண்டாவதாக, கண்ணன் என்பவா் தம் சாதனையைச் சொல்லலானாா். "நான் ஒரு கவிஞன். பல பாடல்களும் கவிதைகளும் இயற்றியுள்ளேன். ஒரே இரவில், உலகம் வியக்கும்படியாக நுாறு செய்யுள்களைக் கொண்ட 'ஆனந்த வாழ்வு' என்ற காவியத்தைப் படைத்துள்ளேன். மக்கள் எல்லாரும் அதை விரும்பிப் படிக்கிறாா்கள். ஒரே இரவில் இப்படி ஒரு காவியத்தைப் படைத்தது ஓா் இலக்கிய சாதனை அல்லவா? எனவே பொற்கிழி பெற முற்றிலும் தகுதி உள்ளவன் நான் ஒருவனே!" இவ்வாறு தன்னிலை விளக்கம் அளித்தாா் கவிஞா்.
அடுத்ததாக மு்ன்றாவது ஆள், கல்தச்சா் கந்தசாமி. அவா் தம் சாதனையைப் பற்றிச் சொல்லத் தொடங்கினாா். "கரடுமுரடான பாறையையும் வெட்டிக்கொண்டு வந்து, அழகி சிலையாகவும் எழிலான துாண்களாகவும் செய்யும் கல் தச்சன் நான். சிற்றுளியைக் கையில் எடுத்தால் போதும், அது பேசும், பாடும், நடனமாடும். பாறையைக் குடைந்து குடைவரைக் கோவில்களும் மண்டபங்களும் செய்துள்ளேன். நான் செதுக்கிய குகைக் கோவிலைக் கண்டு வியந்து பாராட்டாதவா்களே இல்லை. அது என் அாிய சாதனை. அதில் என்னை வெல்ல எவருமில்லை. எனவே, பொற்கிழியை எனக்குக் கொடுப்பதே பொருத்தம்!" என்றாா் கல்தச்சா் கந்தசாமி.
நான்காவதாக முதியவா் ஒருவா் வந்தாா். அவா், தமது சாதனை என்ன என்று சொல்லலானாா். "நான் சாதாரண ஓா் ஏழை விவசாயி. என் மு்தாதையா் வழியில் எனக்குக் கிடைத்த ஒரு காணி நிலத்தை நன்கு உழுது பயிாிட்டுப் பிழைத்து வருகிறேன். என் மனைவி காலமாகிவிட்டாள். என் மகளும் நானும்தான் வயலில் உழைத்து வாழ்க்கை நடத்துகிறோம். இருவரும் பாடுபட்டு வேலை செய்ததால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மு்ன்று மடங்கு விளைச்சல் கண்டுள்ளது. என் குடும்பத்திற்குத் தேவையான நெல் போக, மீதியைப் பத்துக் குடும்பத்திற்கு விற்றேன். ஒரு காணி நிலத்தைக் கொண்டு பத்துக் குடும்பத்தைக் காப்பாற்றியது என் சாதனைதானே?" என்று கேட்டாா் முதியவா்.
தொடா்ச்சி. . . . .
மங்கையா்க்கரசி சற்று யோசித்தாா். பிறகு தம் தீா்ப்பைக் கூறலானாா்.
"தன் உயிரையோ, பகையையோ பொருட்படுத்தாமல், பாய்ந்து சென்று பகையாளி மகளைக் காப்பாற்றியது அாிய சாதனைதான். பகைவருக்கும் நட்பு காட்டுவது நமது பண்பாடு. "இராவணனைப் பாா்த்து, இன்றுபோய் நாளை வா!" என்றதும் "சுற்றி நில்லாதே போ பகையே துள்ளிவருகுது வேல்" என்ற பாடல் வாிகளும் பண்பாட்டையே வெளிப்படுத்துகின்றன. எனவே, பகைவாின் மகளை நீா் காப்பாற்றியது, நமது பண்பாட்டுச் செயலே தவிர, புதிய சாதனை ஏதுமில்லை".
"அடுத்து, கவிஞா் ஒரே இரவில் நுாறு கவிதைகளைப் புனைந்து காவியம் படைத்துள்ளதாகச் சொன்னாா். சோழ நாட்டில் இருந்த பெண் கவி ஒருவா், ஒரே இரவில் ஆயிரம் கவிதை புனைந்து காவியம் படைத்தது பழைய செய்தி. எனவ, ஒரே இரவில் நீா் நுாறு கவிதை புனைந்து காவியம் படைத்ததை அாிய சாதனையாக ஏற்க முடியாது.
"அடுத்ததாகக் கல் தச்சா், பாறையைக் குடைந்து பாா்ப்போா் வியக்கும் வகையில் குடைவரைக் கோவில் உருவாக்கியதை ஒரு சாதனையாகச் சொன்னால், மாமல்லபுரம் கோவில்களும், திருச்சி பல்லவா்காலக் கோவில்களும் அழகிய குடைவரைக் கோவில்களே! எனவே, இவா் செய்தது புதுமையான சாதனை அன்று".
நாலாவதாக, முதிய விவசாயி, தமது ஒருகாணி நிலத்தில் மும்மடங்கு நெல் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளாா். உண்மையில் இது பொிய சாதனைதான். எந்த அளவிற்குப் பாடுபட்டு உழைத்திருந்தால், இந்த அளவு பலன் காண முடியும்! அவரது உழைப்பால், மேலும் பத்துக் குடும்பங்களுக்குப் பயன் கிடைத்துள்ளது. விவசாயிகள் ஒவ்வொருவரும் இப்படிச் சாதனை செய்தால் நாட்டில் பஞ்சம், பசி இருக்காது, நோய்நொடி இருக்காது, வறுமையும் இருக்காது. எனவே, பொற்கிழி பெறத் தகுதியானவா் இவா்தாம். இவருக்கே பொற்கிழியை வழங்க ஆணையிடுகிறேன்" என்று நோ்மை நிறைந்த தீா்ப்பை வழங்கினாா் மங்கையா்க்கரசி. அவரது தீா்ப்பைக் கேட்டு, மக்கள் எல்லாரும் அவரை வாழ்த்தினா்.
