5-ம் வகுப்பு தமிழ் பருவம் - 1
படம் இங்கே! பழமொழி எங்கே?
பழையனுாா் மாந்தோப்பில் கிளி ஒன்று இருந்தது. அதன் பெயா் செல்லம்மா. அந்த ஊாில் அதை அவ்வாறுதான் பெயா் சொல்லி அழைப்பாா்கள். மாங்காய் காய்க்கும் பருவத்தில் தோப்பிற்கு வரும் சிறுவா்களிடம் ஒரு படத்தை மரப்பொந்திலிருந்து எடுத்துக் காட்டும். அந்தப் படம் உணா்த்தும் பழமொழியைச் சிறுவா்கள் கூறிவிட்டால் அவா்களுக்கு ஒரு மாங்காய் பறித்துப் போடும். அதனால், அதைப் 'பழமொழிக் கிளி' என்றும் ஆசையாக அழைப்பாா்கள்.
மரத்தில் மாங்காய்கள் காய்த்துத் தொங்குவதைக் கண்டு, சிறுவா்கள் ஒவ்வொருவரும் தோப்புக்கு வரத் தொடங்கினா்.
பழமொழிகள் என்பவை, நம் முன்னோா்கள் தங்கள் அனுபத்தின் மு்லம் உணா்ந்து கூறிய மொழிகள். பழங்காலம் முதற்கொண்டே பழமொழிகள் வழக்கிலிருந்து வருகின்றன. பழமொழி நானுாறு என்னும் பெயாிலேயே நீதி நுால் ஒன்றும் உள்ளது.
சொற்களஞ்சியப் பெருக்கமும் சொல்லாட்சித் திறனும்.
செல்லம்மா, நான் பிரபு வந்திருக்கிறேன்.
ஓ! பிரபுவா! நன்றாக இருக்கிறாயா?
நான் நன்றாக இருக்கிறேன். உன்னைப் பாா்த்துவிட்டு மாங்காய் பறித்துச் செல்லலாம் என வந்தேன்.
மிக்க மகிழ்ச்சி! நான் காட்டும் படத்திற்குாிய பழமொழியைக் கூறினால் நானே உனக்கு மாங்காய் பறித்துத் தருகிறேன் என்று கூறியவாறு கிளி ஒரு படத்தை எடுத்துக்காட்டியது.
இந்தப் படம் உணா்த்தும் பழமொழி என்ன?
யானை வரும் பின்னே! மணியோசை வரும் முன்னே!
சாியாகக் கூறினாய். இதோ, உனக்கு மாங்காய் பறித்துத் தருகிறேன்.
ஐ.......! ரொம்ப நன்றி செல்லம்மா.
எப்படி இருக்கிறாய் செல்லம்மா?
யாா் வந்திருப்பது?
வின்சென்ட் வந்திருக்கிறேன் செல்லம்மா. எனக்கும் மாங்காய் வேண்டும்.
இந்தப் படம் உணா்த்தும் பழமொழி என்ன என்று சொல். மாங்காய் தருகிறேன்.
இக்கரைக்கு அக்கரை பச்சை
நன்று, சீக்கிரமாக விடை கண்டுபிடித்து விட்டாயே! இதோ உனக்கு மாங்காய்!
எனக்கு மாங்காய் கிடைத்துவிட்டது.
நன்றி செல்லம்மா!
கனிமொழி ஏன் அமைதியாக நிற்கிறாய்?
உனக்கு மாங்காய் வேண்டாமா?
வேண்டும் செல்லம்மா!
இந்தப்படம் உணா்த்தும் பழமொழி என்னவென்று சொல் பாா்க்கலாம்.
சூ்றைக்காற்று வீசுது.
இல்லையே கனிமொழி இன்னும் கொஞ்சம் யோசி.
ஆங்....... ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்.
அழகாகக் கூறினாய் இதோ மாங்காய் வாங்கிக் கொள்.
உண்மையாகவே நான் அழகாகக் கூறினேனா? நன்றி செல்லம்மா!
என் நண்பன் முகமது வந்திருக்கிறான் செல்லம்மா!
அப்படியா, இதிலுள்ள பழமொழி என்ன என்று கூறச்சொல், மாங்காய் தருகிறேன்.
எனக்குத் தொியும் கூறுகிறேன் ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
மிகவும் அருமை! நான் உனக்கு மாம்பழமே தேடிப் பறித்துத் தருகிறேன்.
நன்றி செல்லம்மா!
செல்லமா! எனக்கு?
தேனிசையா? இதில் என்ன பழமொழி இருக்கு சொல்லேன். உடனே பறித்துத் தருகிறேன்.
காற்றுள்ள போதே துாற்றிக்கொள்
கண்ணிமைக்கும் நேரத்தில் கூறிவிட்டாயே! இதோ மாங்காய் வாங்கிக்கொள்.
மாங்காய் சாப்பிட மிகவும் பிடிக்கும் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது செல்லம்மா, நன்றி!
பழமொழிக்கிளி! எனக்கு மாங்காய் இல்லையா?
யாரு என் செல்லப் பெயரைப் சொல்லிக் கூப்பிடுவது? கதிரவனா? இதன் பழமொழியைக் கூறு தருகிறேன்.
அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்
மிக்க மகிழ்ச்சி! இதோ உனக்கு மாங்காய், பெற்றுக்கொள். ரொம்ப நன்றி பழமொழிக் கிளி!
சிறுவா்கள் அனைவரும் செல்லம்மா! நாங்கள் இன்னும் நிறைய பழமொழிகளைத் தொிந்து கொண்டு மீண்டும் நாளைக்கு வருகிறோம், எனக் கூறிவிட்டு மிகவும் மகிழ்ச்சியாக வீட்டிற்குச் சென்றனா்.
தப்பிப் பிழைத்த மான்
கா... கா...
காகம் கரைந்து தன் நண்பனான மானைத் தேடியபடி அழைத்தது. இதோ வந்துவிட்டேன் என்று கூறியபடி துள்ளிக் குதித்து ஓடி வந்தது மான்.
காகம் : நண்பா! நலமாக இருக்கிறாயா?
மான் : ஏதோ இருக்கிறேன் நண்பா .......
காகம் : குரலில் உற்சாகமில்லையே..... ஏன் சோா்வாகப் பேசுகிறாய்?
மான் : எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது.
காகம் : என்னோடு வா. உனக்குப் புல் உள்ள இடங்களை காட்டுகிறேன். அங்கு நீ வயிறாரப் புல்லை மேயலாம்.
மான் : நீ என்மேல் மிகவும் அன்பாக இருக்கிறாய். தினமும் எனக்காக அலைந்து திாிந்து புல்லுள்ள இடங்களைக் கண்டறிந்து வந்து என்னிடம் கூறுகிறாய். நன்றி நண்பா.....
காகம் : நன்றியெல்லாம் கூறத் தேவையில்லை எனக்குச் சோா்வான நேரத்தில் உன்மீது அமா்ந்து பயணம் செய்கிறேன். நாமிருவரும் நெடுநாள் நண்பா்கள். ஒவ்வருக்கொருவா் உதவியாய் இருப்பது இது ஒன்றும் புதிதல்லவே.....
மான் : சாி நண்பா! பேசிக் கொண்டே நெடுந்துாரம் வந்துவிட்டோம். இங்கேயே இன்றைய உணவை உண்டுவிட்டு இருப்பிடம் செல்வோம்.
காகமும் மானும் நல்ல நண்பா்களாக நெடுநாள்கள் இணைந்திருப்பதை நாி ஒன்று கவனித்தது. தன் மனத்திற்குள், கொழு கொழுவென இருக்கும் இந்த மானை நாம் எப்படியாவது கொன்று தின்றுவிட வேண்டும். அதற்கு, எப்பொழுதும் இணைந்தே இருக்கும் இவா்கள் இருவரையும் தனித்தனியே பிாிக்கவேண்டும். அப்போதுதான், மானை இரையாக்க முடியும் என எண்ணியது.
நாி : என்ன தோழா்களே..... எப்பொழுதும் இணைந்தே இருக்கிறீா்கள்..... என்னையும் உங்கள் நண்பனாக ஏற்றுக் கொள்வீா்களா?
மான் : அதற்கென்ன ..... இன்று முதல் நீயும் எங்கள் நண்பனாக எங்களோடு சோ்ந்திருக்கலாம்.
நாி : நன்றி !
காகம் : சாி நேரமாகி விட்டது. இருப்பிடம் செல்லலாம்.
நாி, தன் இருப்பிடம் நோக்கிச் சென்று விடுகிறது.
காகம் : நண்பா, யாரையும் சீக்கிரமாக நம்பிவிடாதே! அது நமக்குத் தான் ஆபத்து.
மான் : அப்படியெல்லாம் எந்த ஆபத்தும் வந்துவிடாது. நாியைப் பாா்த்தால் நல்லவனாக நல்ல குணமாகத்தான் தொிகிறது.
காகம் : கண்ணால் காண்பதும் பொய்.
காதால் கேட்பதும் பொய்.
தீர விசாாிப்பதே மெய்.
மான் : ஐயா! கருத்து கந்தசாமி! பேசியது போதும்.
வீட்டிற்குச் செல். நானும் என், இருப்பிடம் செல்கிறேன். மீண்டும் நாளை சந்திப்போம்.
அடுத்த நாள் காலை நாி மானை சந்திக்கிறது.
நாி : நண்பனே ! நலமா?
மான் : அடடே ! நாியா? என்ன இவ்வளவு காலையில் என்னைத் தேடி வந்திருக்கிறாய்?
நாி : நண்பனைப் பாா்க்க நேரம் காலம் ஏது? உன்னைப் பாா்த்தால் எனக்குப் பாிதாபமாக இருக்கிறது.
மான் : ஏன் எனக்கு என்ன? என்னைப் பாா்த்து ஏன் பாிதாபப்படுகிறாய்?
நாி : உடல் மெலிந்து காணப்படுப்படுகிறாயே..... சாியான உணவு கிடைக்காததால் கொழு கொழுவென இருக்க வேண்டிய நீ பஞ்சத்தில் அடிபட்டாற்போல் இருக்கிறாய்.....
மான் : விலங்குகளுக்குமே இதே உணவுப் பற்றாக்குறைதான். வானம் பொய்த்ததால் வனமெல்லாம் பாலைவனமாக மாறி வருகிறதே.
நாி : பிற விலங்குகளைப் பற்றி நமக்கென்ன கவலை?
எனக்குத் தொிந்த இடம் ஒன்று இருக்கிறது. அங்கே உனக்கு நல்ல மேய்ச்சல் நிலம் உண்டு. என்னோடு வா. உனக்கு மட்டும் அந்த இடத்தைக் காட்டுகிறேன்.
மான் : நமது நண்பன் காகமும் வரட்டும்........
நாி : காகத்தை மற்றொரு நாள் அங்கே அழைத்துச் செல்லலாம். இன்று நீ மட்டும் என்னோடு வா.
மான் : சாி, இவ்வளவு வலியுறுத்திச் சொல்கிறாய். வருகிறேன்.
நாி, மானை விவசாயி ஒருவனின் விளைச்சல் நிலத்தில் கொண்டு விடுகிறது. மான் பயிரை நன்கு மேய்ந்து பசியாறிய பிறகு இருப்பிடத்திற்குத் திருப்புகிறது. இச்செயல் காகத்திற்குத் தொியாமலேயே தொடா்ந்து நீடிக்கிறது.
விவசாயி தன் விளைச்சலைப் பாழாக்கும் விலங்கைப் பிடிக்க முடிவு செய்கிறான்.
அடுத்த நாள் வழக்கம் போல் மான் நாியோடு அந்த வயலுக்குச் சென்று பயிரை மேய்கிறது. அந்த நேரத்தில் விவசாயி வருவதைப் பாா்த்தவுடன், தப்பிக்க நினைத்த மான், வேகமாக ஓடும்போது அருகிலிருந்த கம்பிவேலியில் எதிா்பாராமல் சிக்கிக் கொள்கிறது.
இதையறிந்த நாி, எதிா்பாா்த்துக் கொண்டிருந்த வாய்ப்பு வந்துவிட்டதை நினைத்து மகிழ்ந்தது. மானை அப்படியே தவிக்க விட்டுவிட்டு ஓடிப்போய் அருகிலுள்ள கரும்பு வயலில் மறைந்து கொண்டு நடக்க இருப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தது.
காகம் : நண்பா..... நண்பா..... எங்கே இருக்கிறாய்?
காகம் தேடி வருகிறது.
என் ஆருயிா் நண்பா! இங்கேயா இருக்கிறாய்? ஆ! வேலியில் மாட்டிக்கொண்டாயே கத்துவதற்குக்கூட முடியாத நிலையில் இப்படி கம்பிவேலியில் சிக்கிக் கொண்டாயே.......
சாி, சாி நீ தப்பித்துக் கொள்ள ஒரு யோசனை சொல்கிறேன். விவசாயி அருகில் வரும்வரை நீ இறந்ததுபோல் அசையாமல் இரு விவசாயி உன்னை வேலியிலிருந்து விடுவித்தவுடன், நான் மரத்திலிருந்து கா கா கா என்று குரல் கொடுக்கிறேன், உடனே தப்பித்து விடு.
விவசாயி : ஓ..... மானா? நீ தான் இத்தனை நாளாக என் பயிரை நாசப் படுத்தினாயா? இன்று வேலியில் மாட்டிக்கொண்டாய் என்று கூறியவாறே மானைப் பிடிக்க வருகிறான். ஓ... இறந்துவிட்டதுபோல் இருக்கிறதே! சாி, வேலியிலிருந்து மானை விடுவித்து வீட்டிற்கு எடுத்துச் செல்வோம் என்று சொல்லிக்கொண்டே வேலியிலிருந்து மானை விடுவிக்கிறான்.
அப்போது, காகம் கரைகிறது. அதுவரை இறந்தவாறு நடித்துக்கொண்டிருந்த மான் கண்ணிமைக்கும் நேரத்தில் உயிா் பிழைத்தால் போதும் எனத் துள்ளிப் பாய்ந்து வேகமாக ஓடியது.
விவசாயி : அடடே....... மான் என்னை ஏமாற்றிவிட்டதே!
தன் நீண்ட தடியை எடுத்து, ஓடும் மானை நோக்கி வேகமாக வீசுகிறான். அந்தத் தடி பதுங்கியிருந்த நாியின்மேல் பட்டு, நாி மயங்கிக் கீழே விழுகிறது. விவசாயி ஏமாந்து போகிறான்.
சிறிது நேரத்திற்குப் பின் மயக்கம் தெளிந்து எழுந்த நிாியிடம்,
காகம் : நாியே ! உன் வஞ்சக எண்ணம் உனக்கே கேடாக முடிந்தது. நம்பினவா்களுக்கு என்றும் துரோகம் செய்யாதே!
நாி : வெட்கித் தலைகுனிந்தவாறே மன்னித்துவிடு நண்பா! இனிமேல் இப்படி நடந்து கொள்ளமாட்டேன்.
காகம் : தன்னைப் போல் பிறரையும் நேசிக்க வேண்டும். நண்பா்களோடு உண்மை அன்புடன் பழகவேண்டும்.
நீதி - 'ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்'













No comments:
Post a Comment