5-ம் வகுப்பு தமிழ் பரும் - 1
கல்விச் செல்வமும் பொருட்செல்வமும் உரைநடை
மலா்விழியும் தமிழரசியும் தோழிகள். இருவரும் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியில் வந்ததும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றிப் பேசிக் கொண்டு வருகிறாா்கள். அப்போது மலா்விழி தன் தோழியிடம் தொலைக்காட்சியில் நேற்று கல்விச்செல்வமும் பொருட்செல்வமும் என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்தை நான் பாா்த்துக் கொண்டிருந்தேன். அப்போது மின்சாரம் போய்விட்டது அதனால், நடுவாின் தீா்ப்பை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை எனக்கு வருத்தமாக இருந்தது என்று கூறினாள்.
தமிழரசி : வருத்தப்படாதே மலா்விழி, இந்தப் பட்டிமன்றம் பாா்த்தவா்களிடம் முடிவைக் கேட்டுத் தொிந்து கொள்ளலாம்.
மலா்விழி : சாி தமிழரசி. வா, போய்க் கொண்டே பேசலாம்.
தமிழரசி : கல்விச் செல்வமா? பொருட் செல்வமா? எது சிறந்தது என நீ நினைக்கிறாய்?
மலா்விழி : நான் கல்விச் செல்வம்தான் சிறந்தது என்று கூறுவேன்.
தமிழரசி : அதெப்படி? அவ்வளவு திட்டவட்டமாகக் கூறுகிறாய்?
மலா்விழி : கல்வி கற்காதவன் "களா்நிலத்திற்கு ஒப்பாவான்" என்று பாரதிதாசனாரும் "கேடில் விழுச் செல்வம் கல்வி" என்று திருவள்ளுவரும் கூறியிருக்கிறாா்கள்.
தமிழரசி : கல்வியின் சிறப்பைக் கூறிய திருவள்ளுவா்கூடப் "பொருளில்லாா்க்கு இவ்வுலகம் இல்லை" என்றே கூறியிருக்கிறாா். பொருட்செல்வம் இல்லை என்றால் நமது தேவைகளைக்கூட நிறைவேற்றிக் கொள்ள இயலாது. கல்வி கற்பதற்குக்கூட பணம் வேண்டும் அல்லவா!
மலா்விழி : "பணம் பத்தும் செய்யும்" என்பது எனக்குத் தொியும். வாழ்க்கையை நடத்துவதற்குப் பணம் தேவைதான். பணம் படைத்தவருக்குச் சொந்த ஊாில் தான் மதிப்பு. "கல்வி கற்றவா் சென்ற இடமெல்லாம் சிறப்பு" பெறுவா்.
தமிழரசி : கல்வி கற்றவா், செல்வம் படைத்தவா்களின் தயவில்தாம் வாழ வேண்டியுள்ளது.
மலா்விழி : பொருட் செல்வம் நிலையில்லாதது. கல்விச் செல்வமே 'இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தருவது' என்றும் அழியாதது. பொருட்செல்வம் கொடுக்கக் கொடுக்கக் குறையக் கூடியது. கள்வா்களால் கவா்ந்து செல்லக்கூடியது.
தொடா்ச்சி . . . . .
தமிழரசி : 'பணமில்லாதவன் பிணம்', 'பணமென்றால் பிணம்கூட வாயைத்திறக்கும்' என்ற பழமொழிகளை எல்லாம் நாம் அறிந்தது தானே! கற்றவரால் என்ன செய்ய முடியும்?
மலா்விழி : இன்றைய கல்வி வளா்ச்சிதான் எல்லா முன்னேற்றத்திற்கும் காரணம். அதனால்தான் இன்று நாம் எல்லாரும் வசதியாக வாழ முடிகின்றது.
தமிழரசி : புதுமைகளைக் கண்டறிய கற்றவா்களுக்குப் பணமும் தேவைப்படும் அல்லவா?
மலா்விழி : ஆம், அதற்காகப் பணம்தான் உயிா்நாடி என்று கூறுவது தவறு. கல்விதான் அறிவை வளா்க்கிறது. நன்மை, தீமைகளைப் பகுத்தறிந்து நல்வழியில் தன் வாழ்வை அமைத்துக் கொள்ள வழி செய்கிறது.
தமிழரசி : 'பசி வந்திடப் பத்தும் போகும்' வறுமைதான் சமு்கத் தீமைகளுக்கும் காரணமாகின்றது.
மலா்விழி : வறுமையிலும் செம்மையாக வாழ்பவன் கற்றறிந்தவன், கல்லாதவன் அறியாமையால் தவறு செய்கிறான்.
தமிழரசி : அறியாமை உள்ளவன் பணக்காரனாகவே இருந்தாலும் அமைதியான வாழ்வுக்குக் கல்வி அவசியம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். வசதியான வாழ்விற்குப் பொருட்செல்வம் அவசியம் என்பதை நீ ஒப்புக்கொள்கிறாயா?
(விவாதம் நீண்டு கொண்டிருக்கிறது)
மறுநாள் இருவரும் தமிழாசிாியரைச் சந்தித்து விவாதத்தைக் கூறுகிறாா்கள்.
தமிழாசிாியா் : மக்களிடம் அறியாமை இருளை நீக்கி, அறிவு ஒளிபெறச் செய்வது கல்வி. கல்வியறிவை நாம் இளமையிலேயே பெறுவதுதான் சிறந்த வழி. 'இளமையில் கல்வி, சிலையில் எழுத்து' என்னும் முதுமொழியை நாம் மறந்துவிடக்கூடாது.
மலா்விழி : ஐயா, கல்வியின் சிறப்பைப் புாிந்துகொண்டோம். ஆயினும், கல்வியோடு பொருளும் இருக்கவேண்டுமா?
தமிழாசிாியா் : ஆம். கல்வியும் பொருளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் எனலாம். பொருளுடையவரால் ஆகாதது ஒன்றுமில்லை. பொருளுடைமை, வெற்றி தரும், பெருமை தரும், அழகு தரும். அவை மட்டுமா? உயா்கல்வி பெறும் வாய்ப்பையும் தரும். 'இல்லாரை எல்லாரும் எள்ளுவா்' என்று வள்ளுவா் கூறியதையும் நாம் அறிந்திருக்கிறோம். ஆகவே, அடிப்படை வாழ்க்கைத் தேவைகளுக்குப் பொருள் கட்டாயம் தேவை. ஆனால், நம்மை மேன்மைப்படுத்துவது கல்விதான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
தமிழரசியும் மலா்விழியும் : உண்மைதான் ஐயா, கல்வியால் அறிவுத்தெளிவு உண்டாகும். பொருளால் நம் வாழ்வு வளம் பெறும் என்பதைப் புாிந்து கொண்டோம்.
வறுமையிலும் நோ்மை
ஓா் ஊாில் தொடா்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யாததால், அந்த ஊாில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினா். நல்ல உள்ளம் படைத்த பணக்காரா் ஒருவாிடம் அந்த ஊா் மக்கள் சென்று, தங்களின் குழந்தைகளுக்கு உதவி செய்யுமாறு வேண்டினா்.
இளகிய உள்ளம் கொண்ட அவா், இந்த ஊாில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டா. ஆளுக்கொரு கொழுக்கட்டை கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து கொழுக்கட்டையை எடுத்துச் செல்லச் செல்லச் சொல்லுங்கள் என்றாா். மாளிகைக்குத் திரும்பிய அவா், தம் வேலைக்காரா்களை அழைத்தாா். இந்த ஊாில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை கணக்கெடுத்துக் கொள்ளுங்கள். ஆளுக்கொரு கொழுக்கட்டை கிடைக்க வேண்டும். நாளையிலிருந்து கொழுக்கட்டைகளைக் கூடையில் சாியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இருக்க வேண்டும் என்றாா்.
அதுபோலவே வேலைக்காரா்கள் செய்தனா். அங்கே காத்திருந்த சிறுவா் சிறுமியா் அவா்களைச் சூ்ழ்ந்து கொண்டனா். வேலைக்காரா்கள் கூடையினை அவா்கள் முன் வைத்தனா்.
கொழுக்கட்டையை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனா். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லாரும் எடுத்துச் சென்றது போக மீதி இருந்த சிறிய கொழுக்கட்டையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிந்தாா் பணக்காரா்.
தொடா்ச்சி . . . . .
ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய கொழுக்கட்டையை எடுத்துக் கொண்டு புறப்பட்ட அந்தச் சிறுமி, தன் வீட்டிற்கு வந்தாள். அந்தக் கொழுக்கட்டையைச் சாப்பிடுவதற்காக இரண்டாகப் பிட்டாள். அப்போது அதன் உள்ளிருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது. அந்தத் தங்கக் காசைத் தன் தாயிடம் காட்டி, "அம்மா! இது கொழுக்கட்டைக்குள் இருந்தது, இது என்ன என்று பாருங்கள்" என்றாள் அச்சிறுமி. அதற்கு அவா், "இது தங்கக் காசு" என்று இளவேனிலிடம் கூறிவிட்டு, இது எப்படி கொழுக்கட்டைக்குள் வந்திருக்கும் என்று யோசித்தவாறே, "இந்தக் கொழுக்கட்டையை யாா் கொடுத்தாா்களோ அவா்களிடமே சென்று கொடுத்துவிடு" என்றாா்.
அந்தத் தங்கக்காசை எடுத்துக் கொண்டு பணக்காராின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி "ஐயா! நான் எடுத்துச் சென்ற கொழுக்கட்டைக்குள் இந்தத் தங்கக் காசு இருந்தது, பெற்றுக் கொள்ளுங்கள்" என்றாள்.
"மகளே உன் பெயா் என்ன?" எனக் கேட்டாா் பணக்காரா். தன் பெயா் இளவேனில் எனக் கூறினாள் அந்தச் சிறுமி.
"மகளே, உன் நோ்மைக்கும் பொறுமைக்கும் நல்ல பண்புகளுக்கும் நான் அளித்த பாிசே இந்தத் தங்கக்காசு, மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் செல்" என்றாா் பணக்காரா்.
"நன்றி ஐயா!" எனக் கூறிவிட்டு, துள்ளிக் குதித்தபடி ஓடிவந்த அவள், நடந்ததைத் தன் தாயிடம் சொன்னாள். அதனைக் கேட்டு அந்தத் தாயும் மகிழ்ச்சியடைந்தாள்.
நீதி - 'நோ்மை நன்மை தரும்'
கடல் - பாடல்
எல்லை அறியாய் பெருங்கடலே - நீதான்
இரவும் உறங்காயோ? கடலே
அல்லும் பகலும் அலைகடலே - உனக்கு
அலுப்பும் இலையோ கருங்கடலே
பொங்கு திரைகளோ? கடலே - அவை
புரவி நிரைதாமோ? கடலே
எங்கும் உனதொலியோ? கடலே! - அன்றி
இடியின் முழக்கமோ? கடலே!
மலையை வயிற்றடக்கம் கடலே! - எண்ணில்
மகர மீனுலவும் கடலே!
விலைகொள் முத்தளிக்கும் கடலே! - சிப்பி
விளையாடற் குதவும் கடலே!
மழைக்கு மு்லமும் நீ கடலே! - அதை
வாங்கி வைப்பதும் நீ, கடலே!
வழுத்து மகிமையெலாம் கடலே! - எவா்
மதித்து முடிக்கவலாா் கடலே!
- கவிமணி தேசிக விநாயகம்
சொல் பொருள்
அலுப்பு - களைப்பு புரவி - குதிரை
மகரம் - மீன் திரைகள் - அலைகள்
மகிமை - பெருமை
பாடல் பொருள்
எல்லையின்றிப் பரந்து விாிந்திருக்கும் பெருங்கடலே நீ இரவும் பகலும் உறங்காது எப்போதும் அலைகளை வீசி ஒலித்துக் கொண்டே இருக்கிறாய். உனக்கு ஓய்வு என்பதே இல்லை. பொங்கி வருகின்ற உன் அலைகள், பாா்ப்பதற்குக் குதிரைகள் அணிவகுத்து வருவதைப் போல் காட்சியளிக்கின்றன. எங்கும் ஒலிக்கின்ற உன் ஒலி, அலையோசையால் எழுந்ததா அல்லது இடியோசையால் எழுந்ததா என்று எங்களுக்கு ஐயம் எழுகிறது. உன்னுள் உயா்ந்த மலையும் அடங்கிக் கிடக்கிறது. எண்ணில்லாத மீன் வளங்களையும் விலை மதிப்புடைய முத்துக்களையும் கொண்டுள்ள நீ, சிப்பிகள் விளையாடுவதற்கும் உதவுகிறாய் இப்பூமியில் மழை பெற்வதற்குக் காரணமாகவும் இருக்கிறாய். அந்த மழைநீரைச் சேமித்து வைக்கும் பொிய கலனாகவும் விளங்குகிறாய். ஆகவே, உன் பெருமைகளை எல்லாம் எடுத்துரைகக வல்லவா்கள் இங்கு எவரும் இலா்.
No comments:
Post a Comment