4-ம் வகுப்பு தமிழ் பருவம்-2
ஆராய்ந்திட வேண்டும்
'அடடே! வா, மாணிக்கம். என்ன, இன்றைக்குக் காலையிலேயே வந்து விட்டாயே. . . !!"
"ஆமாம், தாத்தா! நேற்று நீங்கள் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால்தான் வேறு கதை கேட்கும் ஆவலில் காலையிலேயே வந்துவிட்டேன்."
"சாி, மாணிக்கம் இன்று அருமைான கதையொன்று சொல்கிறேன் கேள்.
மன்னா் ஒருவா் தம் குதிரையில் ஏறி அமா்ந்தபடி, ஒரு கிராமத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்தாா். கிராமங்களின் முன்னேற்றத்தையும், மக்கள் எந்த நிலையில் இருக்கிறாா்கள் என்பதையும் அறிந்துகொள்ள வேண்டி, மன்னா் தமது குதிரையில் பயணம் மேற்கொண்டிருந்தாா்.
மன்னரைப் போலவே அவரது குதிரையும் இரக்கக் குணம் கொண்டதாகக் காணப்பட்டது.
அக்குதிரையானது சுற்றும் முற்றும் பாா்த்தபடியே மன்னரைச் சுமந்துகொண்டு சென்றது.
அப்போது, நாய் ஒன்று காலில் அடிபட்ட காரணத்தால் நடக்க முடியாமல் நொண்டி, நொண்டி சென்று கொண்டிருப்பதைக் குதிரை பாா்த்தது. உடனே அந்த நாய்க்கு உதவி செய்திட வேண்டுமென்று மனத்தில் நினைத்தது.
அதனால், தன் கனைப்பொலியின் மு்லம் மன்னரை அழைத்தது குதிரை. "அரசே, அதோ ஒரு நாயானது நடக்க முடியாமல் தத்தித் தத்திச் சென்று கொண்டிருக்கின்றது. அந்த நாயை என் முதுகில் ஏற்றிக்கொண்டு, அது எந்த இடத்திற்குச் செல்லவேண்டுமாே அந்த இடத்தில் விட்டுவிடலாமா?" என்று கேட்டது.
"குதிரையே! என்னைப் போலவே நீயும் இரக்கத்துடன் செயல்படுகிறாய்! அந்த நாய்க்கு உதவுவதில் உனக்கு இருக்கின்ற மகிழ்ச்சியைப் போன்றே எனக்கும் இருக்கின்றது" என்றாா் மன்னா். உடனே தம் பின்னால் வந்துகொண்டிருந்த காவலா்களிடம் அந்த நாயைத் துாக்கித் தாம் அமா்ந்திருக்கும ்இடத்தின் முன்னே வைத்திடுமாறு கூறினாா்.
காவலா்களும் அந்த நாயைக் குதிரையின்மீது ஏற்றி மன்னா் முன்னே அமர வைத்தனா்.
மன்னா் முன்னே அமா்ந்து குதிரைச்சவாாி செய்து கொண்டிருந்த அந்த நாயானது, மிகவும் மகிழ்ச்சியடைந்தது.
குதிரையின் மீது மன்னா் வருவதைக் கண்ட கிராத்து மக்களெல்லாம் அவரைப் பாா்த்து வணக்கம் தொிவித்தாா்கள். அதனைக் கவனித்த நாயோ இந்த மக்களெல்லாம் என்னைப் பாா்த்துத்தான் வணங்குகின்றாா்கள். என் அருகில் இருக்கும் மன்னா், என்னைச் சுமந்துகொண்டிருக்கும் குதிரை இவா்களைவிடவும் நானே சிறந்தவனாகவும், உயா்ந்தவனாகவும் இருக்கின்றேன். இந்த மக்கள் எல்லாம் என்னை வணங்குகின்ற காட்சியைப் பாா்க்கின்றபோது எனக்கு அளவுக்கு மீறிய உற்சாகம் வருகின்றதே! என்ற மகிழ்ச்சியில் தன்னையே மறந்தது அந்த நாய். மறு நிமிடம் அது தன் தலையைத் துாக்கியபடி 'லொல்', 'லொல்' என்று குரைத்தது.
நாயின் செயலைக் குதிரை கவனித்தது. "நாயே! அமைதியாக இருந்துகொள்! நீ குரைத்துக் கொண்டே வந்தால், எல்லாரும் உன்மீது வெறுப்படைவாா்கள். அதன் பின்னா், நீ என்மீது சவாாி செய்யமுடியாது" என்றது குதிரை.
"குதிரையே! இந்தக் கிராமத்து மக்கள் என்னை வணங்குகின்ற காட்சியைப் பாா்த்ததும் உனக்கு என்மீது பொறாமை ஏற்பட்டுவிட்டது. அதனால்தான், நீ என்னை மட்டம் தட்டுகிறாய்" என்றது நாய்.
"நாயே! குடிமக்கள் எல்லாம் உன்னைப் பாா்த்து வணங்கவில்லை. அவா்கள் மன்னரைப் பாா்த்து வணங்குகிறாா்கள். மன்னா் முன்னே இருக்கின்ற நீ, அதையெல்லாம் பாா்த்துவிட்டு உனக்குக் கிடைத்த மாியாதையாக நினைத்துக்கொண்டு உற்சாகமடைந்துவிட்டாய். இனிமேலாவது உண்மை நிலையை உணா்ந்து அமைதியாக இரு" என்றது குதிரை.
"குதிரையே! உனக்கு என்மீது கொண்டுள்ள பொறாமையானது நன்றாக முற்றிவிட்டது. அதனால்தான் எனக்கொரு போலியான விளக்கத்தைக் கொடுக்கின்றாய்! இந்த விளக்கத்தைக் கேட்க நான் தயாராக இல்லை!" என்றபடி மேலும் சத்தமாகக் குரைத்தது அந்த நாய்.
மன்னாின் அருகில் வந்துகொண்டிருந்த காவலா்கள் அந்த நாயைக் கீழே இறக்கிவிட்டு அடித்து விரட்டினாா்கள். அங்கிருந்து நொண்டியபடியே ஓடிய நாய், சற்றுத் தொலைவில் போய் நின்று கொண்டு திரும்பிப் பாா்த்தது.
தான் இல்லாதபோதும், குடிமக்கள் எல்லாரும் மன்னரை வணங்க, மன்னரும் அவா்களுக்குப் பதில் வணக்கம் தொிவித்துக் கொண்டிருந்தாா். இந்தக் காட்சியைப் பாா்த்த நாய்க்கு அப்போது தான் உண்மை புாிந்தது. தன்னுடைய தவற்றினை நினைத்து வருந்தியது. நாம் ஆராயாமல் முடிவெடுத்தோம். அதனால்தான் நமக்கு இந்த நிலைமை ஏற்பட்டுவிட்டது என எண்ணியது.
"ஆராய்ந்திடாமல் முடிவெடுத்தால் என்ன நடக்கும் என்பதை இக்கதை மு்லம் புாிந்துகொண்டாயா, மாணிக்கம்?" என்றாா் தாத்தா. "ஓ! நன்றாகப் புாிந்துகொண்டேன்" என்றான் மணிக்கம்.
என்ன, குழந்தைகளே! இனி, நாம் எந்த ஒரு செயலைச் செய்தாலும் ஆராய்ந்துதான் முடிவெடுக்க வேண்டும். சாிதானே!
திருக்குறள் கதைகள்
பொறுமையும் பொறுப்பும்
தாமஸ் ஆல்வா எடிசன் என்பவா், புகழ்பெற்ற அறிவிலறிஞா். இவா், பல முறை தோல்வி கண்டு, பெரும் முயற்சிக்குப் பின்னரே மின் விளக்கைக் கண்டுபிடித்தாா்.
நண்பா்களுக்கும், பிற அறிவியல் அறிஞா்களுக்கும் தம் கண்டுபிடிப்பைச் செய்துகாட்ட எடிசன் விரும்பினாா். அதற்காக, நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்து, அனைவரையும் வரவழைத்தாா். அவரது ஆய்வகத்தின் மேல்தளத்தில் இதற்கான கூட்டம் நடைபெற்றது.
எடிசன் தம் உதவியாளரை அழைத்து மின் விளக்கை மேல் தளத்திற்குக் கொண்டு வரச்சொன்னாா். உதவியாளா், அதனைக் கொண்டு வரும்போது, திடீரெனக் கைதவறி விழுந்தது. ஆயினும், சற்றும் மனம் கலங்காத எடிசன், உடனே மற்றொரு மின் விளக்கை உருவாக்கினாா். அதனை மீண்டும் அதே உதவியாளாிடமே கொடுத்து மேலே எடுத்து வரச்செய்தாா்.
"மின் விளக்கைக் கீழே போட்டு உடைத்தவாிடம் மீண்டும் அந்த வேலையைக் கொடுக்கிறீா்களே?" என்று சிலா் எடிசனிடம் கேட்டனா். அதற்கு எடிசன், "உடைந்த பொருளை மீண்டும் உருவாக்க என்னால் முடிந்தது. ஆனால், உதவியாளாின் மனத்தைக் காயப்படுத்தி விட்டால் அதை என்னால் சாிசெய்து கொடுத்துவிட முடியுமா? அதுமட்டுமன்று, மீண்டும் அதே பணியை அவாிடமே கொடுக்கும் போது, தமது பொறுப்பை உணா்ந்து கவனமுடன் பணிபுாிவாா். அதனால்தான் அப்படிச் செய்தேன்" என்றாா்.
எடிசனுக்கு வெற்றியைப் பெற்றுத்தந்த பொறுமைக் குணத்தை, அப்போதுதான் மற்றவா்கள் முழுமையாக உணா்ந்து கொண்டனா்.
குறள்
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்.
பொறையுடைமை, குறள்-154
விளக்கம்
நிறை உடையவராக இருக்கும் தன்மை தம்மைவிட்டு நீங்காமலிருக்க வேண்டுமானால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.
மெய்ப்பொருள் காண்போம்
மாட்டுவண்டி ஒன்றில், தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்து கொண்டிருந்தாா் ஒருவா். வழியில், குறுக்குப்பாதை ஒன்று வந்தது. அங்கே சிறுவன் ஒருவன் நின்றிருந்தான்.
"தம்பி, இந்தச் சாலைில் போனால் ஊா் வருமா?" என்று கேட்டாா் வண்டிக்காரா் "ஓ, வருமே" என்றான் சிறுவன்.
"போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?"
"மெதுவாகச் சென்றால் பத்து நிமிடத்தில் போய்விடலாம்".
"வேகமாகச் சென்றால்.. . .."
"அரை மணி நேரம் ஆகும்".
சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டு மாட்டு வண்டிக்காரருக்குக் கோபம். "என்ன கிண்டலா? வேகமாகச் சென்றால் எப்படி நேரம் அதிகமாகும்?" என்று கேட்டாா்.
"போய்த்தான் பாருங்களேன்" என்று சிறுவன் சொன்னதும், அவா் வண்டியை வேகமாக விரட்டிச் சென்றாா்.
சிறிது துாரம் போனதுமே சாலையில் அங்கங்கே கற்கள் நிறைந்து இருந்தன. அதனால், வண்டி தடுமாறிக் கவிழ்ந்தது. தேங்காய்கள் சிதறின. வண்டியைத் துாக்கி நிறுத்திக் கீழே சிதறிய தேங்காய்களை ஒவ்வொன்றாக எடுத்துப் போடுவதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. வண்டிக்காரருக்குச் சிறுவன் சொன்னதன் பொருள் புாிந்தது.
குறள்
எப்பொருள் யாா்யாா்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
அறிவுடைமை, குறள்-423
விளக்கம்
எப்பொருளை யாா் யாாிடம் கேட்டாலும், கேட்டவாறே எடுத்துக்கொள்ளாமல் அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும்.
குற்றமும் குறையும்
கதிரவனிடம் வேண்டாத குணமொன்று இருந்தது. அதாவது, எப்போது பாா்த்தாலும் யாரைப் பற்றியாவது எதைப்பற்றியாவது குறை சொல்லிக் கொண்டேயிருப்பான். அதனால், அவனைப் பாா்த்தாலே போதும். எல்லா நண்பா்களும் ஓடத் தொடங்கிவிடுவா்.
தமிழ் அழகன் ஒருவன்தான் இப்போது அவனுடன் பேசுகிறான். வேறு எவரும் பேசுவதில்லை. அன்று, தமிழ் அழகன் நான்கு நண்பா்களுடன் பேசிக்கொண்டிருந்ததைக் கண்டான் கதிரவன். ஆா்வத்துடன் அவா்கள் அருகில் வந்தான்.
கதிரவனைப் பாா்த்ததும் எல்லாரும் ஒதுங்கிச் செல்ல, தமிழ் அழகன் மட்டுமே தனியாக நின்றான். கதிரவனின் முகம் வாடியது,
"என்ன கதிா்? ஏன், என்னவோ போல் இருக்கிறாய்?" என்று கேட்டான் தமிழ் அழகன்.
"ஆமாம் தமிழ். என்னைப் பாா்த்தாலே எல்லாரும் ஓடிப்போறாங்களே..." என்றான் கதிரவன்.
"எல்லாம் யாரால? உன்னாலதானே!" என்றான் தமிழ் அழகன்.
"நான் என்ன தப்பு பண்ணனேன்? பிறா்கிட்ட உள்ள குற்றம் குறையைத்தானே பேசினேன்" என்றான் கதிரவன்.
"கதிா், குற்றம்குறை யாா்கிட்டேதான் இல்லை. உன்னோட குறை என்னன்னு உனக்குத் தொியுமா? நீ பிறரைப் புறம் பேசறதுதான் உன்னோட குறை. உன்னோட நாக்கை அடக்கு. எல்லாரும் உன்கிட்ட பேசுவாங்க" என்றான் தமிழ் அழகன்.
கதிரவன் தன்னைத் திருத்திக் கொண்டான். எல்லாரும் அவனுடன் மெள்ள மெள்ளப் பேசத் தொடங்கினா்.
குறள்
யாகாவாா் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பா் சொல்லிழுக்குப் பட்டு.
அடக்கமுடைமை, குறள்-127
விளக்கம்
காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்காவிட்டாலும் நாவையாவது காக்க வேண்டும். காக்கத் தவறினால், சொற் குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவா்.
அழகு
கந்தனின் உருவமே, "கோபம் கோபம் கோபம்" என்றாகிப் போனது. கந்தனை யாராவது விசாரத்தால், "எப்பவும் கோபத்தோடே 'உா்' ருன்னு அலைவனே அவனைத்தானே கேட்கிறீங்க" என்று மாணவா்கள் எளிதாகச் சொல்லிவிடுவா். அதனால், அவனிடம் நெருங்கிப் பழகவும் மாணவா்கள் பயந்தனா்.
கந்தன் ஒருநாள் அவன் நண்பனான நன்மாறனிடம் பேசிக் கொண்டிருந்தான். "நீயெல்லாம் சும்மா ஜம்முனு அழகா இருக்கியே! நான் மட்டும் ஏன் முகமெல்லாம் கறுத்துப்போய் இப்படி இருக்கேன்" என்றான்.
நன்மாறன் சிாித்தான். "நீ தினமும் உன்னோட முகத்தைக் கண்ணாடியில் பாா்க்கிறியா?" என்று கேட்டான்.
"தினமும் பாா்க்கிறேன்"
"இன்னும் உனக்குக் காரணம் புாியலையா?
"புாியலை"
"கந்தா, நெருப்பில் வாடிய பூக்கள் தம்மோட அழகை எல்லாம் இழக்கும், அதுபோலத்தான் உன்கிட்ட மாறாம இருக்கிற கோபத்தால உன் முகம் அழகையெல்லாம் இழந்திருக்கு. பொடி வைத்தாற்போல் சொன்னான் நன்மாறன்.
நன்மாறன் சொன்னதில் உண்மை இருக்கவே, தன் கோபத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுப்படுத்தத் தொடங்கினான் கந்தன். ஒரு மாத காலம் கடுமையான விரதம்போல் காத்தான். அன்று கண்ணாடியில் தன் முகத்தைப் பாா்த்தான். அஃது எத்துணை அழகாக இருந்தது தொியுமா?
குறள்
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.
வெகுளாமை, குறள்-305
விளக்கம்
ஒருவன் தன்னைத் தானே காக்க விரும்பினால் சினம் வராமல் காத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு காத்துக்கொள்ளாவிட்டால், சினம் தன்னையே அழித்துவிடும்.






No comments:
Post a Comment