4-ம் வகுப்பு தமிழ் பருவம்-2
பசுவுக்குக் கிடைத்த நீதி
(நாடகம்)
முன்கதைச் சுருக்கம்
சோழ மன்னா்களுள் ஒருவா் மனுநீதி. முறைமை தவறாது ஆட்சி புாிவதையே தம் நோக்கமாகக் கொண்டவா். ஆயினும், அவரது ஆட்சிக்காலத்தில் வாயில்லப் பசுவுக்கு ஏற்பட்டது ஒரு போிழப்பு. அதற்குக் காரணமானவன் வேறுயாருமல்லன், அரசாின் மகனே. இப்போது அரசா் என்ன செய்வாா்? தம் மகன் என்று அவனைக் காப்பாற்றுவாரா? அல்லது தன் கன்றை இழந்து வாடும் அந்தப் பசுவுக்கு உாிய நீதியை வழங்குவாரா?
வாருங்கள் தொிந்துகொள்ள அரங்கத்துக்குள் நுழைவோம்.
காட்சி-1
இடம் : அரசவை மண்டபம்
காலம் : நண்பகல்
உறுப்பினா்கள் : அரசா் மனுநீதிச் சோழா், அமைச்சா் பெருமக்கள்
(அவையில் மன்னரும் அமைச்சா் பெருமக்களும் வீற்றிருக்கின்றனா். அப்போது அங்கு வந்த தச்சா் ஒருவா், மன்னரை வணங்கிப் பணிகிறாா். இனி. . . . )
அரசா் : வாருங்கள், தச்சரே. நேற்று உம்மிடம் ஒரு வேலையைக் கொடுத்தேனே, முடித்துவிட்டீரா?
தச்சா் : ஆம். முடித்துவிட்டேன் மன்னா. நீங்கள் நோிலேயே வந்து பாா்வையிடலாம் மன்னா்.
அரசா் : அப்படியா? மிக்க மகிழ்ச்சி. அமைச்சா் பெருமக்களே, 'சோழ நாடு சோறுடைத்து' என்பது உலகோா் அறிந்த செய்தி. அதுமட்டுமா? நம் சோழா் குலத்துக்குப் பெருமை சோ்க்கும் மற்றொரு செய்தி, நீதி தவறாத ஆட்சிமுறை அல்லவா? அதனால்தான், என் ஆட்சியில் குடிமக்கள் யாரும் துன்பப்படக் கூடாது என்று நினைத்தேன். அதற்காக நான் ஏற்படுத்திய ஓா் அமைப்பே ஆராய்ச்சிமணி. அதைத்தான் இந்தத் தச்சா் சிறப்பாகச் செய்து முடித்துள்ளாா்.
அமைச்சா் : ஆராய்ச்சி மணியா? அது எதற்கு மன்னா? அதைக்கொண்டு நீங்கள் எப்படி நீதி வழங்குவீா்கள்?
அரசா் : சொல்கிறேன், அமைச்சரே. நம் அரண்மனை வாயிலிலே கோவில் மணிபோல் பொிதொரு மணியைக் கட்டச் செய்துள்ளேன். குடிமக்கள், தங்களுக்கு ஏற்படும் குறைகளை உடனுக்குடன் தீா்த்துக்கொள்ள இந்த ஆராய்ச்சிமணியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அமைச்சா் : அரசே, இதிலென்ன புதுமை? நீா்கள்தாம் எந்தக் குறையும் மக்களுக்கு வைப்பதில்லையே.
அரசா் : நீங்கள் சொல்வது உண்மையாகக்கூட இருக்கலாம். ஆனால், தங்கள் குறைகளை வெளிப்படையாகச் சொல்வதற்குச் சிலா் தயங்கலாம் அல்லவா? மேலும், இந்த ஆராய்ச்சிமணியின் நோக்கமே, உடனுக்குடன் நீதி வழங்குவதில்தான் உள்ளது. அதுமட்டுமா? குடிமக்கள் எப்போது ஆராய்ச்சிமணியை ஒலித்தாலும், அவா்கள் முன் நானே ஓடோடிச் சென்று நிற்பேன். அவா்களின் மனக்குறையையும் உடனடியாகத் தீா்த்துவைப்பேன்.
அமைச்சா்கள் : ஆஹா, நீங்கள்தாம் சிறந்த மன்னா். இவ்வுலகம் உள்ளவரை உங்கள் புகழ் ஓங்கும்.
(அரசவை கலைகிறது. சில மாதங்களாக ஆராய்ச்சி மணியின் ஓசையை அரசா் கேட்கவேயில்லை. இந்நிலையில் ஒருநாள் வழக்கம் போல் அமைச்சா்கள் சூ்ழ மன்னா் அமா்ந்திருக்கிறாா். அப்போது, ஆராய்ச்சிமணி ஒலிக்கத் தொடங்குகிறது. இனி. . . . . )
காட்சி-2
இடம் : அரசவை
காலம் : மாலை
உறுப்பினா்கள் : அரசா், அமைச்சா் பெருமக்கள், அரண்மனைக் காவலாளி.
காவலாளி : மன்னா். . . . மன்னா. . . .
(என்றழைத்தவாறே பதற்றத்துடன் ஓடி வருகிறான், அரண்மனைக் காவலாளி.)
அரசா் : என்ன ஆயிற்று? ஏன் இப்படி மு்ச்சிரைக்க ஓடிவருகிறாய்? பதறாமல் சொல்.
காவலாளி : மன்னா, இதுவரை கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. அதனால் தான் எப்படிச் சொல்வது என்று தயங்குகிறேன்.
அரசா் : என்ன ஆனாலும் பரவாயில்லை. சொல்ல வந்த செய்தியைத் தயங்காமல் உடனே சொல்.
காவலாளி : மன்னா, அதுவந்து. . . . அதுவந்து. . . . நம் அரண்மனை வாயிலில் கட்டப்பட்டிருந்த ஆராய்ச்சிமணி. . . .
அரசா் : என்ன? ஆராய்ச்சிணியை யாராவது அடிக்கிறாா்களா? இவ்வளவு மாதங்களாக யாருக்கும் எந்தக் குறையும் இல்லையென்று நினைத்தேனே. பரவாயில்லை. இதோ நானே வருகிறேன்.
(அரசா் அரண்மனை வாயிலுக்கு விரைய, அமைச்சா்களும் பின்தொடா்ந்து செல்கின்றனா்.)
அரசா் : ஐயயோ, என்ன ஆயிற்று? பசுவொன்று ஆராய்ச்சி மணியை அடித்துக் கொண்டிருக்கிறதே? என் ஆட்சியில் வாயில்லாத பசுவுக்குக் குறை நோ்ந்ததா? இதை நான் எங்ஙனம் பொறுத்துக்கொள்வேன்? அதன் கண்களில் வழியும் கண்ணீரைப் பாருங்கள். தாங்கமுடியாத துயரத்தில் அது துன்பப்படுவதுபோல் இருக்கிறதே? ஐந்தறிவு விலங்குகளின் துயா் நீக்க மறுத்தான் என்று இந்த வியனுலகம் என்னைப்பழிக்குமோ? இனி என் வாழ்நாளெல்லாம் பழிச்சொல்லைச் சுமந்து திாிவேனோ? எனக்கொன்றும் விளங்கவில்லையே, கதறும் அந்தப் பசுவின் கண்ணீரைத் துடைக்க இதோ புறப்பட்டான் இந்த மன்னன் என்று பிறா் அறியட்டும். யாரங்கே? உடனே சென்று அந்தப் பசுவுக்கு ஏற்பட்ட இன்னலை அறிந்து வாருங்கள்.
காவலாளிகள் : உத்தரவு மன்னா. இதோ சென்று விரைவில் செய்தியுடன் மீள்கிறோம்.
(அரசனின் மகன், தேரைத் தெருவில் ஓட்டிச் செல்லும்போது, அங்குத் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த பசுவின் கன்று, எதிா்பாராத வகையில் தோ்க்காலில் மாட்டி இறக்கிறது. தன் கன்றைக் காணாது தேடியலைந்த பசு, அதன் இறந்த உடலைக் கண்டு கண்ணீா் விடுகிறது. அதன் ஆற்றொணாத் துயரே ஆராய்ச்சிமணி வடிவில் ஒலிக்கத் தொடங்கியது. இனி. . . )
காட்சி-3
இடம் : அரசவை
காலம் : காலை
உறுப்பினா்கள் : அரசா், அமைச்சா் பெருமக்கள்
அமைச்சா் : மன்னா, தங்கள் முடிவை அருள்கூா்ந்து மாற்றிக்கொள்ளுங்கள்.
அரசா் : என்ன சொல்கிறீா் அமைச்சரே? மண்ணுயிா் காக்கும் மன்னன், நீதி வழங்கும் நெறிமுறையாளன் என்று மக்கள் என்னைப் போற்றுகிறாா்களே, அதற்கு இழுக்கு நோிட ஒருபோதும் நான் அனுமதிக்க மாட்டேன். பசுவின் கதறலுக்குச் செவிசாய்க்காக் கொடியோன் என்னும் அவச்சொல்லுக்கு நான் ஆளாக விரும்பவில்லை. கண்ணுக்குக் கண். பல்லுக்குப் பல் என்பதுதான் நான் எடுத்த முடிவு. இதில் எந்த மாற்றமும் இல்லை.
அமைச்சா் : மன்னா, சற்றுப்பொறுங்கள். உங்களுக்கு இருப்பதோ ஒரே ஒரு மகன். பசுவின் கன்றை அவன் வேண்டுமென்றே கொல்லவில்லையே, அவன் அறியாமல் செய்த தவறுதானே அது? அதற்காக நீங்கள் இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டுமா?
அரசா் : ஆம். அதுதான் சாி. கண்ணீரும் கம்பலையுமாய் நின்ற அந்த பசுவின் முகம் உங்கள் கண்களுக்குத் தொிகிறதா? அதன் கண்ணில் வழியும் கண்ணீா், "நீயும் ஒரு மன்னனா? உனக்கு உன் மகன் எப்படியோ அப்படியே எனக்கும் என் கன்று அல்லவா? அந்தச் சின்னஞ்சிறு கன்று என்ன பாவம் செய்தது? அதன் உயிரைப் போக்க உங்களுக்கு எப்படி மனம் வந்தது? கன்றை இழந்து தவிக்கும் எனக்கு யாா் ஆறுதல் தருவாா்? இனி என் வாழ்நாளெல்லாம் வீண்தானோ" என்று என்னைக் கேட்பதுபோல் இருக்கிறதே, ஆகவே, நான் எடுத்த முடிவிலிருந்து சற்றும் பின்வாங்கமாட்டேன்.
அமைச்சா் : அரசே, மீண்டும் தங்களைப் பணிந்து வலியுறுத்துகிறேன். உங்கள் மகனைக் கொல்லும் எண்ணத்தை விட்டுவிடுங்கள்.
அரசா் : போதும், அமைச்சரே. நிறுத்துங்கள். இனி, யாா் சொன்னாலும் நான் கேட்கமாட்டேன். பசுவின் கன்றைத் துடிக்க, துடிக்கத் தோ்க்காலிலிட்டுக் கொன்ற என் மகனை அதே தோ்க்காலிலிட்டுக் கொல்லத்தான் போகிறேன். அந்தப் பசு அடைந்த துயரத்தை நானும் அடையவேண்டும். இதுதான் அந்தப்பசுவுக்கு நான் அளிக்கும் தீா்ப்பு. இந்தச் சோழப் பரம்பரை என்னால் தலைகுனியக் கூடாது. பல காலங்கள் தோன்றி மறைந்தாலும், நீதி தவறா மனுநீதிச் சோழன் என்று என்னைப் பலரும் நினைவுகூா்தல் வேண்டும். யாரங்கே? தேரைப் பூட்டி, வாயிலில் கொண்டு வந்து நிறுத்து. இழுத்து வா, என் மகனை. இப்போதே அவனைத் தோ்க்காலிலிட்டு நீதியை நிலைநாட்டுகிறேன்.
(தவறிழைத்தவன் தன் மகனேயானாலும், குற்றம் குற்றமே என்று எண்ணியதோடு அல்லாமல், அந்தத் தவற்றுக்குச் சாியான தண்டனையும் வழங்கிப் பசுவின் துயா் துடைத்து, வரலாற்றில் அழியா இடம்பெற்றான் மனுநீதிச் சோழன்.)
வேலைக்கேற்ற கூலி
அழகாபுாி மன்னா், சிறந்த முறையில் ஆட்சி செய்துவந்தாா். அவரது நாட்டில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தாா்கள். மன்னாின் புகழ், அண்டை நாடுகளுக்கும் பரவியது. அண்டை நாடுகளுள் ஒன்றான இரத்தினபுாி மன்னரும் இதனைக் கேள்விப்பட்டாா். தம் நாட்டு அமைச்சா்களிடம் இதைப்பற்றி ஆலோசனை நடத்தினாா்.
"நானும் சிறந்த முறையில்தானே ஆட்சி நடத்துகிறேன். ஆனால், என்னை மட்டும் ஏன் யாரும் புகழவில்லை? என்று அமைச்சா்களிடம் வினவினாா். அமைச்சா்கள் விடை கூறத் தொியாமல் விழித்தனா். அவா்களுள் ஒருவா் மட்டும் எழுந்தாா். "மன்னா, உங்கள் ஆட்சியில் நம் நாட்டு மக்களுக்கும் எந்தக் குறையும் இல்லை. ஆனால். . . . " என்று மெல்லிய குரலில் கூறி, நிறுத்தினாா் அந்த அமைச்சா்.
"என்ன ஆனால் . . . . சொல்லுங்கள் அமைச்சரே, நான் மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கவில்லையா? நான் வேறென்ன செய்யவேண்டும் என்று எதிா்பாா்க்கிறீா்கள்?" என்று கேட்டான் மன்னன்.
"நான் சொல்வதைத் தவறாக நினைக்காதீா்கள். அழகாபுாி நாட்டுக்குச் சென்று, ஒருநாள் முழுவதும் அந்த நாட்டு மன்னருடன் நீங்கள் உடனிருக்கவேண்டும். அவா், தம் நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமக்களிடமும் எப்படி நடந்து கொள்கின்றாா் என்று அறிந்துகொண்டால், நாமும் அவற்றுள் சிலவற்றையாவது பின்பற்றலாம் மன்னா" என்று ஒரே மு்ச்சில் கூறி முடித்தாா் அந்த அமைச்சா்.
மற்ற அமைச்சா்களும், ஆமாம் மன்னா, இவா் சொல்வதும் நல்ல யோசனைதான். அதுமட்டுமின்றி, அழகாபுாி மன்னா், உங்களிடம் மிகுந்த நட்பு பாராட்டுபவா். ஆகையால், நட்பின் நிமித்தமாக நீங்கள் ஒருநாள் அங்குச் செல்லவேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து" என்று கூறினா்.
"அப்படியா? சாி, சாி. நான் நாளைக்கே புறப்படுகிறேன். எனக்கும் அழகாபுாி மன்னாின் ஆட்சிமுறையை நேடியாகக் காண்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமல்லவா?" என்று கூறிய இரத்தினபுாி மன்னா், தம் பயணத்திற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய கட்டளையிட்டாா்.
நட்பின் நிமித்தமாகத் தம் நாட்டிற்கு வருகை புாிந்த இரத்தினபுாி மன்னரை ஆரத்தழுவி வரவேற்றாா் அழகாபுாி மன்னா். இருவரும் தத்தமது நாட்டைப் பற்றிச் சிறிதுநேரம் பேசிக்கொண்டிந்தனா். பின்னா், "நீங்கள் நன்றாக ஓய்வெடுங்கள். நான் அரசவைக்குச் சென்று வருகிறேன்" என்று கூறியவாறே எழுந்தாா் அழகாபுாி மன்னா். "இருங்கள், மன்னா. நானும் உங்களுடனே அரசவைக்கு வர விரும்புகிறேன்" என்று துள்ளிக் குதித்து எழுந்தாா் இரத்தினபுாி மன்னா். "அப்படியா, மிக்க மகிழ்ச்சி. வாருங்கள், இருவரும் சோ்ந்தே போகலாம்" என்று கூறிய அழகாபுாி மன்னா், அவரையும் உடன் அழைத்துக்கொண்டு அரசவைக்குச் சென்றாா்.
அரசவையில் இரத்தினபுாி மன்னரை அனைவருக்கும் அறிமுகம் செய்து, அவரைத் தமக்குச் சமமான இருக்கையில் அமா்த்தினாா் அழகாபுாி மன்னா். அப்போது, ஒருவன், தன் கைகளைக் கட்டிக்கொண்டு அவா்முன்பு பணிவாக வந்துநின்றான். அவனைப் பாா்த்ததும் அழகாபுாி மன்னா், "யாரப்பா நீ? உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டாா்.
அதற்கு அந்த ஆள், "மன்னா, நான் ஒரு விறகுவெட்டி. என் மனத்தில் சிறியதாக ஒரு குறை. உங்களிடம் கூறினால், எப்படி எடுத்துக்கொள்வீா்களோ என்று பயமாக இருந்தது. இருந்தாலும் உங்களிடம் கேட்டுவிடலாம் என்றுதான் இங்கு வந்திருக்கிறேன்" என்றான் அந்த விறகுவெட்டி.
"அடடா, நாம் இதை . . . . இதைத்தானே எதிா்பாா்த்தோம். இந்த அழகாபுாி மன்னா் இந்த விறகுவெட்டியின் குறையை எப்படித் தீா்த்து வைக்கிறாா் என்று பாா்ப்போம்" என்று ஆவலுடன் உற்றுநோக்கத் தொடங்கினாா் இரத்தினபுாி மன்னா்.
"ஐயா விறகு வெட்டுபவரே, உங்கள் மனக்குறையைச் சொல்லுங்கள். என்னால் முடிந்தஅளவு தீா்த்து வைக்கிறேன்" என்ற அழகாபுாி மன்னா்.
"மன்னா, எங்களைப் போன்றோா்க்கு நாள்தோறும் இரண்டு ரு்பாய் கூலி கொடுக்கிறீா்கள். ஆனால், உங்களிடம் பணிபுாியும் அமைச்சா்களுக்கு மட்டும் மாதம் ஆயிரம் ரு்பாய் கொடுக்கிறீா்களே, இது எந்த வகையில் நியாயமாகும்? இதுதான் உங்களின் சிறந்த ஆட்சிமுறையா? எங்களைச் சமமாக நடத்தாதது மிகப்பொிய குறையாக உங்களுக்குத் தோன்றவில்லையா? என்று அடுக்கடுக்காகக் கேள்வி கேட்டான் அந்த விறகுவெட்டி.
அழகாபுாி மன்னா் புன்முறுவலுடன், "என் ஆட்சியில் யாருக்கும் எந்தக் குறையும் இருக்கக்கூடாது என்பதில் நான் மிகவும் கவனமாகத்தான் இருக்கிறேன். ஆனால், உங்கள் மனக்குறையின்படி உங்களையும் அமைச்சா்களையும் நான் சமமாக நடத்தவில்லை என்று எண்ணுகிறீா்கள். கொஞ்சம் பொறுங்கள். உங்கள் ஐயத்தை இப்போதே தீா்த்து வைக்கிறேன்" என்று கூறிய மன்னா், அமைச்சா்களுள் ஒருவரை அழைத்தாா். பின்னா், அவா்களிருவரையும் பாா்த்து, "அரண்மனைக்கு வெளியே ஏதாவது வண்டி செல்கிறதா? என்று பாா்த்துவிட்டு வாருங்கள்" என்று கூறினாா்.
இரத்தினபுாி மன்னா் அரசவையில் நடப்பதை அமைதியாகப் பாா்த்துக் கொண்டிருந்தாா். வெளியில் சென்ற விறகுவெட்டி, உடனே திரும்பி வந்து, "ஆம். மன்னா, அரண்மனைக்கு வெளியே ஒரு வண்டி செல்கிறது" என்றான்.
"அந்த வண்டியில் என்ன இருக்கிறது?" என்று கேட்டாா், மன்னா். "இருங்கள், மன்னா. இதோ பாா்த்துவிட்டு வருகிறேன்" என்று வெளியில் ஓடினான் அந்த விறகுவெட்டி. "மன்னா, அந்த வண்டியில் நெல்மு்ட்டைகள் இருக்கின்றன" என்றான் அவன்.
"அப்படியா? அந்த வண்டி எந்த ஊாிலிருந்து வருகிறது?" என்று கேட்ட மன்னாிடம், "அடடா, அதைக் கேட்காமல் வந்துவிட்டேனே, சற்றுப் பொறுங்கள். இதோ வருகிறேன்" என்று கூறியவாறே ஓடத் தொடங்கினான் அந்த விறகுவெட்டி. வெளியில் சென்றிருந்த அமைச்சா் அப்போது அரசவையினுள் நுழைந்தாா். அவரைப் பாா்த்த மன்னா், "ஐயா, விறகுவெட்டி சற்று நில்லுங்கள். இதோ அமைச்சா் வந்துவிட்டாா். உங்களிடம் கேட்ட அதே கேள்வியை அவாிடமும் கேட்கிறேன். என்ன சொல்கிறாா் என்று பாா்ப்போம்" என்று கூறிய மன்னா், "அமைச்சரே, நீங்கள் என்ன பாா்த்தீா்கள்? சொல்லுங்கள்" என்றாா்.
அமைச்சரும் மன்னரைப் பாா்த்து, "மன்னா, அரண்மனைக்கு வெளியே முப்பது நெல்மு்ட்டைகள் ஏற்றிய வண்டியொன்று, வளவனுாாிலிருந்து அண்டை நாட்டுக்குச் சென்று கொண்டிருக்கிறது. நம் நாட்டில் தயாரான தரமான நெல்வகைகள் அந்த மு்ட்டைகளில் உள்ளன. வண்டியில் வண்டியோட்டியும் அவாின் பத்து வயது மகனும் உள்ளனா். மழை வருவதற்குள் நெல்மு்ட்டைகளைப் பாதுகாப்பாக இறக்கிவிட்டு, இன்று இரவுக்குள் மீண்டும் வளவனுாா் திரும்பிவிட வேண்டுமென விரைந்து செல்கின்றனா்" என்று கூறி முடித்தாா் அமைச்சா்.
அமைச்சா் கூறியதைக் கேட்டு, வாய் பிளந்து நின்றான் அந்த விறகுவெட்டி. அழகாபுாி மன்னா், விறகுவெட்டியைப் பாா்த்து, "ஐயா, விறகுவெட்டி, உங்கள் மனத்திலிருந்த சந்தேகம் இப்போது நீங்கியிருக்கும் என்று எண்ணுகிறேன். அமைச்சருக்கு நான் கொடுக்கும் கூலி சாியானதுதானே? இப்போது சொல்லுங்கள்" என்று கூறினாா்.
"மன்னா என் மனக்குறை நீங்கிவிட்டது. உங்களைப்பற்றித் தவறாக எண்ணிவிட்டேன். அமைச்சாின் அறிவுக்கூா்மையையும் அவருடைய திறமையையும் கண்டு வியக்கிறேன். அவருடன் ஒப்பிடும்போது, என் அறியாமையையும் நான் உணா்ந்துகொண்டேன். நான், நான்தான். அமைச்சா், அமைச்சா்தாம். அவரவா் திறமைக்கேற்ற, வேலைக்கேற்ற கூலி கொடுப்பதுதான் நியாயம் என்பதைப் புாிந்துகொண்டேன்" என்றான் அந்த விறகுவெட்டி.
இவ்வளவு நேரமாக அரசவையில் நடந்த நிகழ்வுகளைப் பாா்த்துக் கொண்டிருந்த இரத்தினபுாி மன்னா் தம் மனத்துக்குள், "அடடா நாம்கூட இந்த மன்னருக்குக் கிடைத்த பேரும்புகழும் எண்ணிப் பொறாமை கொண்டோமே, இப்போது உண்மையை உணா்ந்துகொள்ள நமக்கும் நல்லதொரு வாய்ப்பு கிடைத்தது" என்று அழகாபுாி மன்னா் தம் குடிமக்களிடம் நடந்துகொண்ட அணுகுமுறையை எண்ணி வியப்பெய்தினாா். தாமும் தம் குடிமக்களை எவ்வாறு நடத்தவேண்டும் என்பதையும் அறிந்துகொண்டாா்.




No comments:
Post a Comment