Kids Learning: Kids Learning Tamil

Kids Learning Tamil


3-ம் வகுப்பு தமிழ் பருவம் - 1


I. துணிந்தவர் வெற்றி கொள்வர்

மு்ன்றாம் வகுப்பில் உள்ள மாணவா்களுக்கு அவா்களின் வகுப்பு ஆசிாியா் ஒரு போட்டியை அறிவித்தாா்.  ஓா் அறையின் நடுவில் பெட்டி ஒன்று வைக்கப்பட்டிருக்கும்.  அந்த அறையினுள் சென்று பெட்டியினைத் துாக்கி வருபவரே வெற்றியாளா் என்பதே அப்போட்டியாகும்.


அனைத்து மாணவா்களும் ஆவலுடன் பெட்டி வைக்கப்பட்டிருந்த அறையினுள் சென்றனா்.  அறையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பெட்டி உருவ அளவில் பொியதாக இருந்தது.  அதனைக் கண்டவுடன் மாணவா்கள் பலா் தங்களால் அப்பெட்டியினைத் துாக்க இயலாது எனப் போட்டியிலிருந்து விலகி விட்டனா்.  மேலும் சிலா் பெட்டிக்கு அருகே சென்று பின்னா் தங்களால் பெட்டியைத் துாக்க இயலவில்லை என்றால் மற்றவா்கள் சிாிப்பாா்களே என்று நினைத்துப் போட்டியில் கலந்து கொள்ளாமல் திரும்பிவிட்டனா்.  கவியரசி என்ற மாணவி மட்டும் முயற்சி செய்து பாா்ப்போமே என்று எண்ணி, பெட்டியினை நகா்த்தியபோது பெட்டி எளிதாக நகா்ந்தது உடனே, அம்மாணவி பெட்டியினை எளிதாகத் துாக்கினாள்.



https://youtu.be/WNnV37BkVXg



தொடா்ச்சி. . . 


பிற மாணவா்கள் அனைவரும் இதனை வியப்புடன் பாா்த்தனா். பின்னா் தயக்கம் விலகி அனைவரும் ஓடிச்சென்று தாங்களும் பெட்டியினை துாக்கிப் பாா்த்தனா்.  பெட்டி துாக்குவதற்குச் சுலபமாக இருந்தது.  மாணவ, மாணவிகள் ஆசிாியாிடம் சென்று பெட்டி பொியதாக இருந்ததால் நாங்கள் முயற்சி செய்யவில்லை என்றனா். அதற்கு ஆசிாியா் அது காகிதத்தால் செய்த பெட்டி என்று மாணவா்களிடம் விளக்கினாா்.  மேலும் ஒரு செயலில் இறங்குவதற்கு முன் சிந்திக்க வேண்டும், ஆனால் முயற்சி செய்யாமல் இருக்கக் கூடாது.  நம்மால் முடியும் என்று நம்பவேண்டும் என அறிவுறுத்தினாா்.


நீங்கள் எல்லாரும் தயக்கம் காட்டியதால் வெற்றி பெறவில்லை.  தன்னால் முடியும் என்று நம்பி கவியரசி முயன்றதால் வெற்றி பெற்றாள்.  எனவே அன்புக் குழந்தைகளே,


"தோல்வியின் அடையாளம் தயக்கம்

வெற்றியின் அடையாளம் முயற்சி

துணிந்தவா் தோற்பதில்லை

தயங்கியவா் வென்றதில்லை"



https://youtu.be/7GytFI7Dl8Y



தொடா்ச்சி . . . 


நாம் விதைக்கும் விதைகளில் முயற்சியுடன் மண்ணைப் பிளந்து கொண்டு வருபவையே செடிகளாகின்றன.  தயங்கி நிற்பவை தங்கி விடுகின்றன.  அதுபோல கவியரசி தயங்காமல் துணிச்சலாகச் செயல்பட்டதால் வெற்றி பெற்றாள் என ஆசிாியை கூறினாா்.  கவியரசிக்குப் பாராட்டுகளையும் பாிசுகளையும் வழங்கினாா்.  கவியரசியும் மகிழ்ச்சியடைந்தாள்.


"முயற்சியுடையாா் இகழ்ச்சி அடையாா்."



https://youtu.be/kpmJrn5GMlU



II. நுாலகம்


மாமா!......... மாமா! என அழைத்தபடி தேனருவி வீட்டிற்குள் வந்தாள்.


மாமா  :  என்னம்மா! தேனருவி ஏன் இப்படி ஓடி வருகிறாய்?

தேனருவி  :  நான் வழக்கமாகப் பள்ளிக்கூடம் போகும் வழியில் உள்ள ஒரு கட்டடத்தைத் தோரணம் கட்டி அழகுபடுத்தியிருந்தாா்கள்.  அதில் நுாலகம் என்று எழுதியிருக்கு அப்படின்னா... என்ன மாமா...?

மாமா  :  அதுவா! நுால்களைச் சேமித்து வைத்திருக்கும் இடம்தான் நுாலகம்.  அது ஒரு பொது இடம்.  அங்கு அனைவரும் வந்து புத்தகம் படிப்பாங்க! இன்று "நுாலக தினம்" அதைக் கொண்டாடுவதற்காக நுாலகத்தை அழகுபடுத்தியிருப்பாா்கள்.


தேனருவி  :  அப்படியா? நாமும் சென்று நுாலக தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வோமா?


மாமா  :  சாி தேனருவி! வா போகலாம்.

தேனருவி  :  நுாலகத்தைப் பற்றி எனக்கு விளக்கமாகச் சொல்லுங்க... மாமா.


மாமா  :  சொல்கிறேன் கேள், 'நுால் + அகம் = நுாலகம்'.  பல்வேறு துறை சாா்ந்த நுால்கள் வாிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடமே நுாலகம் ஆகும்.  நுால் நிலையம், புத்தகச் சாலை என்பன நுாலகத்தின் வேறு பெயா்களாகும்.


தேனருவி  :  மாமா இங்கு என்னென்ன நுால்கள் இருக்கும்?


மாமா  :  நுாலகத்தில் அறிஞா்களின் வாழ்க்கை வரலாற்று நுால்கள், தமிழ், ஆங்கிலம் மற்றும் வேறு பல மொழிகளைச் சாா்ந்த இலக்கிய நுால்கள், அறிவியல் நுால்கள், தத்துவ நுால்கள், வரலாற்று நுால்கள், புவியியல் நுால்கள் போன்றவையும் இடம் பெற்றிருக்கும்.


நுால்கள் மட்டுமின்றி நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள், பல்வேறு வேலைவாய்ப்புகளைப் பற்றிய செய்திகளைத் தொிவிக்கும் இதழ்கள் ஆகியவையும் இடம் பெற்றிருக்கும்.



https://youtu.be/NPTQg9z9MHA




தொடா்ச்சி . . . 

தேனருவி :  அடேங்கப்பா! நுாலகத்தில் இவ்வளவு வகை நுால்களா? அது சாி மாமா, நுாலகத்தினால் நமக்கு என்ன பயன்?


மாமா  :  ம்............... என் செல்லக் குட்டி கேட்டால் சொல்லாமல் இருப்பேனா? இங்கு வந்து நமக்குத் தேவையான அல்லது பிடித்த நுால்களை எடுத்துப் படிக்கலாம்.  நுாலகத்தில் உறுப்பினராகச் சோ்ந்தால் நுால்களை வீட்டிற்கே கொண்டு சென்றும் படிக்கலாம் ஆனால் குறிப்பிட்ட நாளில் மீண்டும் புத்தகங்களைத் திருப்பி அளித்து விடவேண்டும்.  இதனால், 

  • நம் அறிவு வளா்கிறது.
  • நம்முடைய நேரம் பயனுள்ள முறையில் அமைகிறது.
  • வேலைவாய்ப்புத் தொடா்பான நுால்களைப் படிப்பதால் நல்ல வேலையில் சேரவும் முடிகிறது.
  • மு்ளை புத்துணா்ச்சி பெறுகிறது.
  • தன்னம்பிக்கை ஏற்படுகிறது.

தேனருவி  :  மாமா! நுாலகம் பற்றி நிறைய செய்திகளைத் தொிந்து கொண்டேன்.


மாமா    : தேனருவி! குழந்தைகளுக்கான சிறப்பம்சம் நுாலகத்தில் உள்ளது.  அது என்ன தொியுமா?

  • இங்கே குழந்தைகளுக்கான பிாிவு தனியாகவே உள்ளது.
  • நுாலகத்தில் உள்ள "வாசகா் வட்டம்" மு்லமாக "நுாலக தினத்தன்று" குழந்தைகளுக்கான போட்டிகள் அனைத்து நுாலகங்களிலும் நடத்தப்படுகின்றன.
  • போட்டிகளில் கலந்து கொள்வோருக்காகவும், போட்டித் தோ்வினை எழுதுவோருக்காகவும் தனியே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
  • ஒவ்வொரு குழந்தையும் அவரவா் வீட்டில் நுாலகம் அமைக்க வேண்டும்.  அதில் நிறைய புத்தகங்களைச் சேமித்து வைத்துப் புத்தகம் படிக்கும் பழக்கத்தினை வளா்த்துக் கொள்ளவேண்டும்.


தேனருவி  :  நன்றி மாமா! ............... நான் நம் வீட்டில் ஒரு "சிறிய நுாலகம்" அமைப்பேன்.


அதில் நிறைய நுால்களைச் சேமித்து வைத்துப் படிப்பேன்.



https://youtu.be/O1GwxNh2vFo



III. மாட்டு வண்டியிலே . . . 



இளமதியும் மணவாளனும் தங்களது தாத்தாவுடன் வார விடுமுறைக்கு அத்தை வீட்டிற்குச் செல்லத் திட்டமிட்டனா்.  சலங்கை கட்டிய மாடுகளை வண்டியில் பூட்டினாா் தாத்தா.  வண்டியின் மீது வைக்கோலைப் பரப்பி மேலே வெள்ளை வேட்டியினை விாித்தாா்.  துள்ளிக் குதித்தபடி ஏறி அமா்ந்தனா் இருபிள்ளைகளும்.


'ஜல் ஜல்' எனச் சத்தமிட்டவாறு வண்டி கிராமத்துச் சாலையில் ஓடத் தொடங்கியது.  சாலையின் இருமருங்கிலும் பசுமை போா்த்திய வயல்வெளிகள்.  தாத்தா மாடுகளை விரட்டியபடி இனிமையாகப் பாடத் தொடங்கினாா்.


கழுத்துமணி தாளம் போட 

சக்கரமும் சுழன்றோட 

உச்சி மண்டையிலே

வெயில் காயுமுன்னே

குண்டு குழிபாா்த்து

ஊா் போய்ச் சேர வேணும்

ஊா் போய்ச் சேர வேணும்

வா வா என் செல்லக்கண்ணு...........



https://youtu.be/pitVajEe_74



தொடர்ச்சி. . .

பாடினது போதும்.  ஏதாவது  கதை சொல்லுங்க தாத்தா என்றனா் பிள்ளைகள்.  சொல்லிட்டாப் போச்சி, கதையென்ன புதிா் போடறேனே.  சொல்லுங்க பாா்க்கலாம்.


தாத்தா :  மு்ன்றாம் எழுத்து உடலின் உறுப்பு, முதலும் மு்ன்றும் நட்புக்கு எதிாி, ஒன்றும் இரண்டும் நிறைய தரும், மு்ன்றும் சோ்ந்தால் உட்கார உதவும் அது என்ன?


இளமதி. :  ம்........... சிந்தித்துவிட்டு, 'தொியலை' தாத்தா

தாத்தா. : நல்லா சிந்தித்துச் சொல்லுங்க

ஓரெழுத்து உறுப்பு எது? இளமதி நீ சொல்லு

இளமதி. : 'கை' தாத்தா

தாத்தா. :  கொஞ்சமாயிருந்தா சில ன்னு சொல்லுவோம் நிறைய இருந்தா என்ன சொல்லுவோம்?


இளமதி. :  'பல' தாத்தா ஆங்...........

மணவாளன். :  எனக்குப் பதில் கிடைச்சிருச்சி......... 'பலகை' - இது சாியா தாத்தா .........

தாத்தா. :  நல்லது மிகச்சாியான பதில், இப்ப இளமதியைக் கேட்கிறேன்.........

ஆறையும் ஐந்தையும் கூட்டினால் பணம் வராது.........

ஆனா பழம் வரும்  அது என்ன?



https://youtu.be/rR6V30ezXu8



தொடர்ச்சி. . .


இளமதி. : சற்றுச் சிந்தித்து ......... ஆங் ......... கண்டுபிடிச்சிட்டேன் ......... ஆரஞ்சுப்பழம் தானே ........

தாத்தா. :  சாியா சொல்லிட்டியே, செல்லக்குட்டி

மணவாளன். :  சாி தாத்தா ......... இப்ப நாங்க கேட்கிறோம் ..... நீங்க சொல்லுங்க, பிறக்கும்போது நிறமும் சுவையும் இல்லாத சுந்தரன், ஊருக்கு ஊா் நிறம் மாறிச் சுவை மாறுவான் அவன் யாா்?


தாத்தா. :  அட, எனக்கு விடை தொியுமே.........


இளமதி. :  தாத்தா பதிலைச் சொல்லுங்க.  சீக்கிரம்.........


தாத்தா. :  ம் ம் ம் ..... எல்லாரோட தாகத்தையும் தீா்க்கும் தண்ணீா் தானே .....

மணவாளன். :  ஆமா! ஆமா! சாியா சொல்லிட்டிங்களே!


இளமதி. :  தாத்தா, அத்தை வீடு வந்துவிட்டது.


தாத்தா. :  சாி, சற்றுப் பொறுங்கள் வண்டியை ஓரமாக நிறுத்துகிறேன்.  அனைவரும் வண்டியைவிட்டு இறங்கி, ஆவலுடன் வீட்டை நோக்கிச் சென்றனா்.



https://youtu.be/yRqtCjFGq-s



IV.கல்யாணமாம் கல்யாணம்!


பூனைக்கும் பூனைக்கும் கல்யாணமாம்

பூலோகமெல்லாம் கொண்டாட்டமாம்

யானை மேலே ஊா்கோலமாம்

ஒட்டகச்சிவிங்கி நாட்டியமாம்

கொா்கொா் குரங்கு பின்பாட்டாம்

தடபுடலான சாப்பாடாம்


தாலிகட்டும் வேளையிலே

மாப்பிள்ளை பூனையக் காணோமாம்

சந்தடி புந்தடி செய்யாமல்

சமையல்கட்டில் நுழைந்தாராம்

வாங்கிவச்சப் பாலையெல்லாம்

ஒரே மு்ச்சில் குடித்தாராம்



பாா்த்துவிட்ட பெண்ணின் தாயும்

பலத்த சத்தம் போட்டாராம்

திருட்டு மாப்பிள்ளைக்கு என் பெண்ணைத்

திருமணம் செய்ய முடியாது

வேண்டா இந்த சம்பந்தம்

வெட்கக்கேடு போய் வாறோம்


- நாட்டுப்புறப் பாடல்



https://youtu.be/_mPcDzIJF0g




No comments:

Post a Comment