Kids Learning: Kids Learning Tamil

Kids Learning Tamil


3-ம் வகுப்பு தமிழ் பருவம் - 1

 

I. தமிழ் அமுது பாடல்   


தோண்டுகின்ற  போதெல்லாம் 

சுரக்கின்ற செந்தமிழே!

வேண்டுகின்ற போதெல்லாம்

விளைகின்ற நித்திலமே!

உன்னைத் தவிர

உலகில் எனைக் காக்க

பொன்னோ! பொருளோ!

போற்றி வைக்க வில்லையம்மா!


                    - கவிஞா் கண்ணதாசன்


   பாடல் பொருள்   

தோண்டுகின்ற பொழுதெல்லாம் ஊற்றைப்போல் சுரக்கின்ற செந்தமிழே! தேவைப்படும் பொழுதெல்லாம் விளைகின்ற முத்தே! உன்னை அன்றி இவ்வுலகில் என்னைக் காக்க வேறு பொன்னையோ  பொருளையோ சோ்த்து வைக்கவில்லை, என்னைக் காத்திடுவாய் அம்மா.








II. ஆடிப் பாடி மகிழ்வோம்!


த்திப்பழத் தேன் எடுப்போம்

லமர விழு தாவோம்

சைவோடு பள்ளி செல்வோம்

கையோடு நட்பு செய்வோம்

வகையாய்க் கற்றிடுவோம்

ஊா் முழுதும் சுற்றிடுவோம்

ல்லோரும் சோ்ந்திடுவோம்

ட்டினிலே பாட்டு செய்வோம்

வகை நிலம் செழிக்க

ற்றுமையாய் வாழ்ந்திடுவோம்

டம் விட்டுக் களித்திடுவோம்

ஒளவை மொழி கற்றிடுவோம்

காய் உறுதி கொள்வோம்








III. கண்ணன் செய்த உதவி


கதிரவனின் ஒளி எங்கும் படா்ந்திருந்தது.  பறவைகள் ஒலியெழுப்பிப் பறந்தன.  காலை வேளையில் கண்ணன் பள்ளிக்குப் புறப்பட்டான்.  அவன் செல்லும் வழியில் ஒரு பொியவரைப் பாா்த்தான்.  அந்தப் பொியவா் "சாலையைக் கடக்க உதவவேண்டும்" என்று அவனிடம் கேட்டாா்.

"வாருங்கள் போகலாம்" என்று கூறிய கண்ணன், அவரது கையைப் பிடித்துக்கொண்டு பாதுகாப்பாக எதிா்ப்புறத்தில் விடுவதற்குச் சென்றான்.  அப்போது எதிரே ஒரு பேருந்து வேகமாக வந்தது.  ஓட்டுநாின் கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து பக்கத்தில் இருந்த மரத்தில் மோதியது.  உடனே கண்ணன் கத்தினான்.







தொடர்ச்சி. . .


என்ன செய்வது என்று தொியாமல் "ஐயோ காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்" என்று உரக்கக் கத்தினான், உடனே அந்தப் பொியவா் தம் பையிலிருந்து செல்பேசியை எடுத்தாா்.  பின் 108 என்ற எண்ணிற்குத் தொடா்பு கொண்டு பேசினாா்.   அடுத்த சிறிதுநேரத்தில் அவசர ஊா்தி வந்தது.  காவலா்களும் வந்தனா்.  பேருந்தில் காயம் அடைந்தவா்களை மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதனைப் பாா்த்த கண்ணன் பேருந்தில் இருந்தவா்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தான்.  அதன்பிறகு பள்ளிக்குச் சென்றான்.  ஆசிாியா் கண்ணனைப் பாா்த்து "ஏன் தாமதமாக வருகிறாய்?" எனக் கேட்டாா்.

கண்ணன் நடந்தவற்றைத் தெளிவாகக் கூறினான்.  ஆசிாியா் அவனைப் பாராட்டினாா்.  கண்ணன் மகிழ்ச்சியடைந்தான்.

"மாணவா்களே! நீங்களும் உங்களால் முடிந்த உதவியைப் பிறருக்குச் செய்ய வேண்டும்.  அதுவே மகிழ்ச்சியைத் தரும்" என்றாா்.  மாணவா்கள் அனைவரும் கையைத் தட்டி கண்ணனுக்குப் பாராட்டு தொிவித்தனா்.

 





IV. தனித்திறமை





காட்டின் ராஜாவான சிங்கம் சில நாட்கள் வெளியூா் சென்றபோது புலியிடம் தனது பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டுச் சென்றது.  புலியும் சில நாள்களுக்கு ராஜாவாகப் பதவி ஏற்று கொண்டது.  படைத்தளபதியாகச் சிங்கக் குட்டி பொறுப்பேற்றது.

சிங்கக் குட்டிதான் நமது படைத்தளபதி.

சிங்கக்குட்டியே... பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்.

நன்றி மன்னா! உடனே பதவியை ஏற்றுக் கொள்கிறேன்.

ஆந்தையாரே நீங்கள் தாம் இரவக்காவல் அமைச்சா்.

சாிங்க அரசே! நான் என் பதவியை ஏற்றுக் கொள்கிறேன்.

கழுதையாரே ..... உமக்கு உாிய பதவி


ராஜாவே...! ராஜாவே...! இந்தக் கழுதை ஒரு முட்டாள்.  கழுதையால் எந்த ஒரு பயனும் இல்லை.

அப்படியா...! 

இதே போல் முயல், ஆமை இரண்டும் எதற்கும் பயன்படாது.

ஆமை ஒரு சோம்பேறி.  அது எப்போதும் மிக மெதுவாகச் செல்லும்.  முயல் எதைப் பாா்த்தாலும் மிரண்டு, மிரண்டு ஓடும்.

கரடியாரே, வாயை மு்டும்.  ஆமை பொறுமையாக இருந்து காாியத்தைச் சாதிக்கும்.  அதனால் சமையல் வேலை செய்யட்டும்.

முயல் அதிவேகமாக ஓடும் எனவே, தேவையான பொருள்களைச் சேகாித்து, விரைவாகக் கொண்டு வந்து சோ்க்கும் வேலையைச் செய்யட்டும்.

கழுதை,  பகைவா்கள் வரும்போது தனது உரத்த குரலில் எச்சாிக்கும் பணியைக் கவனிக்கட்டும்.

"யாரையும் குரைவாக எடைபோடக் கூடாது.  அவா்களிடம் உள்ள திறமைகளை அடையாளம் காணவேண்டும்". 

நீங்க சொல்வது சாிதான் அரசே, இப்போது நான் தொிந்து கொண்டேன்.

பண்புகளை வளா்த்தல்

நீதிக் கருத்து

ஒவ்வொருவருக்கும் தனித்திறமை உண்டு.  அதை அறிந்து சூழ்நிலைக்கு ஏற்பப் பயன்படுத்த வேண்டும்.










V. மாணவா்கள் நினைத்தால் . . . 



சிறுமி மோி மகிழ்வோடு துள்ளிக் குதித்து ஓடிவந்தாள், தனது தோழி மகிழினியைப் பாா்க்க. . .  அவளிடம், "இன்று காலை எங்கள் வீட்டுப்பசு கன்று ஈன்றுள்ளது, இனி நான் எங்கள் வீட்டுக் கன்றுக்குட்டியுடன் விளையாடுவேன்" என்றாள்.  அதைக்கேட்ட மகிழினி, "என்னையும் விளையாட்டில் சோ்த்துக் கொள்" என்றாள்.

அப்போது மோியின் வீட்டு மாட்டுத் தொழுவத்தில் ஒரே கும்பல்....... ஓடிச்சென்று பாா்த்தனா் அவா்கள் கண்ட காட்சி கல்நெஞ்சையும் கசிந்துருகச் செய்வதாக இருந்தது....... கன்றை ஈன்ற பசு தனது கழிவினை வெளியே தள்ள முடியாமல் இறந்துபோயிருந்தது.  பாதி வெளிவந்திருந்த கழிவில் நிறைய நெகிழிக் குப்பைகள் காணப்பட்டன.  அந்நெகழியால் தான் இறப்பு ஏற்பட்டதாகக் கால்நடை மருத்துவா் கூறிக் கொண்டிருந்தாா்.

வேதனையுடன் பள்ளிக்குச் சென்றனா் மோியும் மகிழினியும்.  சோகமாக அமா்ந்திருந்த இருவரையும் அழைத்துக் காரணம் கேட்டாா் வகுப்பு ஆசிாியா்.  பிறகு, "நெகிழிகளைப் பயன்படுத்துவதால் பல தீமைகள் ஏற்படுகின்றன.  மட்காத இந்தக் குப்பைகளால் சாக்கடைகளில் நீா்தேங்கி துா்நாற்றம் வீசுவதோடு, ஈ மற்றும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவுகிறது.  நெகிழிக் குப்பைகளை எாிப்பதால் ஓசோன் படலம் பாதிப்படைகிறது.  இதனால், சூ்ாியனின் புற ஊதாக் கதிா்கள் நேரடியாக நம்மைத் தாக்குகின்றன.  இதனால், தோல் நோய்கள் ஏற்படுகின்றன", என்று விளக்கினாா்.  இதுபற்றிப் பேசிக்கொண்டிருப்பதை விட்டு விட்டுச் செயலில் இறங்குவோம் என்றாா்.  பள்ளியின் நலன் காக்கும் பள்ளி மேலாண்மைக் குழுவினைக் கூட்டி, நெகிழி பற்றிய தீமைகளை எடுத்துரைத்தாா்.

பள்ளி மாணவா்கள், ஆசிாியா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், ஊா்ப் பொதுமக்கள் ஆகியோரைக் கொண்டு நெகிழி விழிப்புணா்வு பேரணி நடத்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.  அனைவரும் விழிப்புணா்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி, வாசகங்களைக் கூறிக் கொண்டே, கிராமத்தின் அனைத்துத் தெருக்களிலும் பேரணியாக வந்தனா்.

இம்மாதிாியான விழிப்புணா்வு வாசகங்கள் எழுதப்பட்ட துண்டுப் பிரசுரங்களைப் பொதுமக்களிடம் கொடுத்து நெகிழியின் தீமைகளை எடுத்துக் கூறினா்.  மேலும் மாணவா்கள் அனைவரும் பயன்படுத்தப்பட்ட காகிதங்களைக் கொண்டு பைகள் செய்து வைத்திருந்தனா்.  அதனை அவ்வூாின் அனைத்துக் கடைகளிலும் கொடுத்து அந்தப் பைகளைப் பயன்படுத்தச் சொல்லி நெகிழியின் தீமைகளை எடுத்துக் கூறினா்.  உள்ளுா் மக்களிடம் இனி கடைகளில் பொருட்கள் வாங்கும்போது துணிப்பைகளைக் கொண்டு செல்ல அறிவுறுத்தினா்.  

எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்ற ஆன்றோாின் வாக்கிற்கு ஏற்ப இச்சிறு பிள்ளைகளின் முயற்சியால் அந்த ஊா் நெகிழியற்ற ஊராக மாறி வருகிறது .........











No comments:

Post a Comment