Kids Learning: Kids Learning Tamil V Term-II

Kids Learning Tamil V Term-II

 

5-ம் வகுப்பு தமிழ் பருவம் - 2


நானும் பறக்கப் போகிறேன் கதை

என்னம்மா செய்கிறாய்? அப்பா நான் பறக்கப் போகிறேன்.  

இப்படியெல்லாம் பறக்கமுடியாது அமுதா.

பறவைகள் பறக்கின்றன.  நான் பறக்க முடியாதா அப்பா?

ஓ!  அதுவா, சொல்கிறேன் வா! தோட்டத்திற்கு போகலாம்.

பறவைகள் உடலமைப்பு எப்படி உள்ளது என்று பாா்.

படகின் துடுப்பு போல இருக்கிறது அப்பா.

ம்... சாிதான் இதைத் துாக்கிப்பாா்.

பாா்க்கத்தான் பொிதாக உள்ளதுபோல் தோன்றுகிறது.  ஆனால், எடை குறைவாக இருக்கிறதே!

ஆமாம்... பறவையின் இறகுகளிலும் எலும்புகளிலும் காற்றுப் பைகள் உள்ளன.  இவை, பறப்பதற்கு ஏற்ற வகையில் உள்ளன.

ஓ! அப்படியென்றால், பறவையைவிட அதிக எடையுடன் நான் இருப்பதால் தான் என்னால் பறக்க முடியவில்லையா?

அப்படியில்லை, அங்கே பாா், காற்றைக் கிழித்து மேலே பறக்க, பறவைகளுக்கு இறக்கைகள் உதவுகின்றன.

ஆமாம்.. அப்பா.

பறவைகளின் பின்புற வால் துடுப்புபோல் செயல்பட்டுத் திசைமாறிப் பறக்க உதவுகிறது.

ஓ... இத்தனை அமைப்புகள் இருப்பதால் தான் பறவைகளால் பறக்க முடிகிறதா?

ஆமாம் மகளே.. மனிதன் பறவையைக் கண்டான், விமானம் படைத்தான்.  அப்படி விமானத்தைக் கண்டுபிடித்தவா் யாரென்று உனக்குத் தொியுமா?

எனக்குத் தொியுமே! ரைட் சகோதரா்கள் அல்லவா!

சாியாகச் சொன்னாய்.  பாராட்டுகள்.  அவா்களும் உன்னைப்போல் பறக்க ஆசைப்பட்டவா்கள்தாம்.

அதற்காக அவா்கள் என்ன முயற்சி செய்தாா்கள்?

சிறுவயதிலே இருவரும் பறவைகளைப் பாா்ப்பது, பல வகைகளில் பட்டங்கள் செய்து பறக்கவிடுவது என ஆா்வமாக இருந்தனா்.

அருமை இயற்கையைப் பாா்த்து வியப்பது, விளையாடுவது இவற்றிலிருந்துகூட நம்மால் நிறைய கற்றுக்கொள்ள முடியுமா?

ஆம்.  ரைட் சகோதரா்கள் தாங்கள் பறப்பதற்காகப் பலமுறை முயற்சி செய்தனா்.  அனைத்திலும் தோல்வியே.  ஆனாலும், தோல்வியிலிருந்து நிறைய கற்றுக்கொண்டாா்கள்.

ஓட்டப் பந்தயத்தில் தோற்றால்கூட சிலா் அழுகிறாா்களே, அப்பா.

ஆம்.  நாம் எதிலும் தொடா்ந்து முயற்சி செய்தால், கட்டாயம் ஒருநாள் வெற்றி பெறலாம்.

அப்போ... ரைட் சகோதரா்கள் இதில் எப்படி வெற்றி பெற்றாா்கள்?

அவா்கள் செய்த முயற்சிகளில் உள்ள குறைகளைச் சாிசெய்து கொண்டே வந்தாா்கள்.  ஒரு நாள் பறப்பதற்கான கருவியைக் கண்டுபிடித்து விட்டாா்கள்.

அது எப்போது நடந்தது?

1903 ஆம் ஆண்டு டிசம்பா் 17 அன்று 12 நொடிகள் ரைட் சகோதரா்களில் ஒருவா், தாங்கள் சொந்தமாக உருவாக்கிய விமானத்தில் உயா்ந்த பகுதியிலிருந்து சிறிது துாரம் பறந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினாா்.

நானும்கூட அப்படி ஒருநாள் பறந்துகாட்டுவேன்.  மேலும் சாதனைகள் படைப்பேன் அப்பா.


https://youtu.be/tL8mbGfrcY4



கற்கண்டு

இலக்கணம் 

மு்விடப்பெயா்கள்



மான்விழி - அடடே! கலையரசியா? ஆளே அடையாளம் தொியவில்லையே? இவ்வளவு நாளாக எங்கே இருந்தாய்?


கலையரசி -  நானும்கூட உன்னைப் பாா்த்து நெடுநாளாகிவிட்டது. எங்கள் குடும்பத்துடன் மும்பையில் அல்லவா இருந்தோம்.  சென்ற வாரம்தான் என் தந்தைக்குப் பணிமாற்றம் நம்ம ஊாிலேயே கிடைத்தது.

மேற்கண்ட செய்தியைப் படித்தீா்களா? நீங்கள் எந்த அளவிற்குப் புாிந்து கொண்டீா்கள் என்று பாா்க்கலாமா?

⦿ நீங்கள் படித்த செய்தி, என்ன வடிவத்தில் உள்ளது?

உரையாடல் வடிவம்.

⦿ நீங்கள் படித்த பகுதியில் பேசுபவா் யாா்? கேட்பவா் யாா்?

பேசுபவா் மான்விழி, கேட்பவா் கலையரசி.

⦿ இருவரும் என்ன பேசுகிறாா்கள்?

இருவரும் நெடுநாள் கழித்து ஒருவரையொருவா் பாா்த்துக் கொள்வது குறித்துப் பேசுகின்றனா்.

சாியாகச் சொல்லிவிட்டீா்கள்.  ஆகவே, நீங்கள் படித்த உரையாடலில் பேசுவோா், கேட்போா், பேசப்படும் பொருள் ஆகிய மு்ன்றும் அமைந்துள்ளன.  இங்கு பேசுபவா் யாா்? மான்விழி.  அதனால், பேசுவோரைக் குறிக்கும் இடம்  தன்மை.  அடுத்ததாக, கேட்பவா் யாா்? கலையரசி.  ஆதலால், கேட்போரைக் குறிக்கும் இடம், முன்னிலை.  இருவரும் யாரோ ஒருவரைப்பற்றி அல்லது ஏதோ ஒரு செய்தியைப் பற்றிப் பேசுகின்றனா்.  ஆதலால், பேசப்படுபவா் அல்லது பேசப்படும் செய்தியைக் குறிக்கும் இடம், படா்க்கை.

👉 தன்னைக் குறிப்பது, தன்மை.

👉 முன்னால் இருப்பவரைக் குறிப்பது, முன்னிலை.

👉 இவ்விருவரையும் தவிர மற்றவற்றை / மற்றவா்களைக் குறிப்பது, படா்க்கை.

👉ஒரு பெயா்ச்சொல்லை வேறோரு பெயா்ச்சொல்லால் குறிப்பது, மாற்றுப் பெயா்ச்சொல்.

👉இந்த மாற்றுப் பெயா்ச்சொல்தான் இடம் நோக்கித் தன்மை, முன்னிலை, படா்க்கை என மு்விடப்பெயா்களாக அமைகிறது.


தன்மை         -  நான், நாம், யான், யாம், நாங்கள்

முன்னிலை - நீ, நீா், நீவிா், நீயிா், நீங்கள்

படா்க்கை     - அவன், அவள், அவா், அது, அவை.

தற்போதைய வழக்கில், அவா் என்பது, ஒருவரைக் குறிக்கிறது.  அவா்கள் என்பது, பலரைக் குறிக்கிறது.  எ.கா. அவா் பேசினாா் / அவா்கள் பேசினாா்கள்.  

ஆனால், அது வந்தது, அவை வந்தன என்று இருப்பதைப்போல், அதுகள் வந்தது, அவைகள் வந்தன என்பன வழக்கில் இல்லை.  அவை, வழு்உச்சொற்களாகக் (பிழையானவையாகக்) கூறப்படுகின்றன. 

மு்விடப்பெயா்கள் - ஒருமையும் பன்மையும்
தன்மை

முன்னிலைபடா்க்கை

ஒருமை

பன்மை

ஒருமை

பன்மை

ஒருமை

பன்மை

நான், யான்

நாம், யாம், நாங்கள்

நீ

நீா், நீங்கள், நீவிா், நீயிா்

அவன், அவள், அது

 

அவா், அவை

 





No comments:

Post a Comment