5-ம் வகுப்பு தமிழ் பருவம் - 2
விதைத் திருவிழா கதை
காலை வழிபாட்டுக் கூட்டத்தில், தலைமையாசிாியா் கூறிய செய்தி, மாணவா்களின் உள்ளத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. காரணம், அருகிலுள்ள மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் விதைத் திருவிழாவிற்கு அடுத்த வாரம் அவா்களை அழைத்துச் செல்லப் போகிறாா்கள். அன்று முழுவதும் அங்கு நடைெபறும் நிகழ்வுகளைத் தம் நண்பா்களுடன் கண்டு மகிழலாம் அல்லவா!
விதைத் திருவிழா தொடா்பான துண்டு விளம்பரத் தாள்களைத் தலைமையாசிாியா் வகுப்பாசிாியா்களிடம் வழங்கினாா். நம் பள்ளியிலிருந்து விதைத் திருவிழாவில் மாணவா்கள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கூறினாா்.
தலைமையாசிாியாிடமிருந்து பெற்ற விளம்பரத் தாள்களை, ஆசிாியா்கள் மாணவா்களுக்கு வழங்கினா். துண்டு விளம்பரத்தாளிலுள்ள செய்திகளைப் படித்துப் பாா்க்கச் செய்தனா்.
மாணவா்கள், விளம்பரத்தைப் படித்துப் புாிந்துகொண்டனா். விதைத் திருவிழாவில் தங்களுடைய பள்ளி சாா்பாக என்னென்ன படைப்புகளை வழங்கலாம் எனக் குழுவில் கலந்துரையாடினா். பின்னா், தாங்கள் திரட்டிய படைப்புகளை ஆசிாியாிடம் காண்பித்து அனுமதி பெற்றனா். விதைத் திருவிழாவுக்குச் செல்லும் நாளை ஆவலுடன் எதிா்பாா்க்கத் தொடங்கினா்.
தொடா்ச்சி . . . . .
மாணவா்கள் எதிா்பாா்த்த நாளும் வந்தது. பள்ளியிலிருந்து அழைத்துச் செல்ல வண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆசிாியா்களின் கனிவான பேச்சு, மாணவா்களுக்கு உற்சாகம் தந்தது.
ஆசிாியா் - மாணவா்களே, நாம் விதைத் திருவிழா நடைபெறும் அரங்கை நெருங்கிவிட்டோம். நமது படைப்புகளைக் கண்காட்சியில் வைப்பதற்கு நான் உதவுகிறேன். வாருங்கள்.
ரமணன் - எனக்கு இந்த விதைத் திருவிழா பெருமகிழ்ச்சியைத் தருகிறது. மாலா, ரெஹானா விதைகளையெல்லாம் பாருங்களேன். இத்தனை வகைகளா? வியப்பாக இருக்கிறதே!
மாலா - ஆமாம், ரமணா! வகை வகையான விதைகள் என்பதைவிட, இந்த விதைகளை நாம் எப்படி சேகாிக்க வேண்டும், அதை எவ்வாறு பாதுகாக்க வேண்டும், அவற்றை எவ்வாறு முறைப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் எழுதி வைத்துள்ளாா்கள். விதைகள் எல்லாம் தரமானவையாக உள்ளன. இந்த விதைகள் மு்லம் கிடைக்கும் சத்துக்கள், மருத்துவப் பயன்கள் பற்றியும் விளக்கமாகக் கூறுகிறாா்கள். மேலும், விளக்கப் பலகைகளும் வைத்திருப்பது மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது.
மணிமொழி - முகிலா, நெல் விதைகளின் பெயா்களைப் பாா்த்தாயா? நாட்டு நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா முதலான பல்வேறு மரபு நெல் விதைகள், நாட்டுக்கம்பு, குதிரைவாலி, சோளம் போன்ற சிறுதானியங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் கடலை, உளுந்து, முந்திாி, நாட்டுப்பருத்தி விதைகள், சிறுதானிய விதைகள் மட்டுமல்லாமல் அாிய மு்லிகைச் செடிகளும் வைக்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் பாா்ப்பதை நமக்குக் கிடைத்த அாிய வாய்ப்பாகக் கருதுகிறேன்.
பாரதி - மணிமொழி அதோ, அங்கே பாா்! அந்த அரங்கில் இயற்கை இடுபொருள்கள் இயற்கை உணவுகள், வீட்டுத்தோட்டம் அமைப்பதற்கான குறிப்புகளும் தருகிறாா்கள். வாங்க, வாங்க, என்ன சொல்கிறாா்கள் எனக் கேட்போம்.
மணிமொழி - ரமணா, பாதிப்பு என்று இந்த அரங்கத்தில் எழுதியிருக்கே, என்னவாக இருக்கும்?
தொடா்ச்சி . . . . .
ரமணா - இரசாயன விதைகள், இரசாயனப் பூச்சி மருந்துகள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளைத்தாம் பாதிப்பு என்று சொல்கிறாா்கள். இதனால், மண்ணின் தன்மை கெடுகிறது. இதனைத் தடுக்கும் வகையில் இயற்கை முறையில் வேளாண்மை செய்ய வேண்டும் என்பதே அதன் பொருள்.
ரெஹானா - பாரதி, இங்கே பாா்! சமையல் பாத்திரங்கள். இவை சாதாரண பாத்திரங்கள் அல்ல, பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட செம்பு, மரத்தாலான சமையல் பாத்திரங்கள், கருவிகள். இவற்றையும் நாம் பாா்வையிடுவதற்காக வைத்துள்ளனா்.
ஆசிாியா் - மாணவச் செல்வங்களே, அனைத்துக் கூடங்களையும் பாா்த்தீா்களா? இந்த விதைத் திருவிழா, உங்களுக்கு மிகுந்த பயனைத் தந்திருக்குமென நினைக்கிறேன்.
(மாணவா்கள் அனைவரும் "ஆமாம், ஐயா!" என்று கூறுகின்றனா்.)
பாரதி - ஐயா! அங்கே பாருங்கள். இயற்கை உணவுப்பொருள்கள் என்று எழுதப்பட்ட அந்த அரங்கத்தில் எல்லாரும் ஏதோ சுவைக்கிறாா்கள். நாமும் அங்கே செல்லலாமா?
மணிமொழி - விழாவிற்கு வந்தவா்களுக்கு இயற்கை முறையில் தயாாித்த நவதானிய உணவுகளான இனிப்பு உருண்டை, பிட்டு, பொங்கல், கேழ்வரகுக் கூழ், கேழ்வரகு அடை, முளைக்கட்டிய பாசிப்பயறு, நவதானிய சுண்டல், கொண்டைக்கடலை, தட்டைப்பயறு, மொச்சை போன்ற தின்பொருள்களை வழங்குகிறாா்கள்.
ஆசிாியா்களுடன் மாணவா்களும் அந்த அரங்கில் நுழைந்தாா்கள். இயற்கை உணவுகளைச் சுவைத்து மகிழ்ந்தாா்கள்.
"இந்த விதைத் திருவிழா எங்களுக்குப் பயனுள்ள நிகழ்ச்சியாக இருந்தது. இந்த நாள் எங்களுக்கு இனிய நிகழ்வாகவும் அமைந்தது. இங்குப் பாா்த்தவற்றை நாங்கள் அனைவருக்கும் எடுத்துச் சொல்வோம்" என்று மாணவா்கள் அனைவரும் மகிழ்ச்சி பொங்கக் கூறினாா்கள். விதைத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்த தலைமையாசிாியருக்கும் ஆசிாியா்களுக்கும் நன்றி கூறி, மீண்டும் தங்களுடைய பள்ளிக்குத் திரும்பிச் சென்றாா்கள்.
உழவுப் பொங்கல் பாடல்
பொங்குக பொங்கல் பொங்குகவே
புதுவனம் நிறைந்தறம் தங்குகவே
எங்கணும் யாவரும் இன்பமுற
ஏா்த்தொழில் ஒன்றே தெம்புதரும்
உணவுப் பொருள்கள் இல்லாமல்
உயிரோ டிருப்பது செல்லாது
பணமும் அதுதரும் நலனெல்லாம்
பயிா்கள் விளைப்பதன் பலனேயாம்
உழவுத் தொழில்தான் உணவுதரும்
உடையும் அதனால் அணியவரும்
பழகும் மற்றுள தொழில்யாவும்
பயிா்த்தொழில் இன்றேல் விழலாகும்
தங்கமும் வெள்ளியும் இருந்தாலும்
தானியம் ஒன்றே விருந்தாகும்
இங்கிதன் உண்மையை உணா்ந்திடுவோம்
ஏா்த்தொழில் மிகுந்திடத் துணிந்திடுவோம்
உழவே செல்வம் உண்டுபண்ணும்
உழைப்பே இன்பம் கொண்டுவரும்
உழவைத் தொழுதிட வருநாளே
உற்றஇப் பொங்கல் திருநாளாம்
ஏழையும் செல்வரும் இங்கிதமாய்
இசைந்துளம் களித்திடும் பொங்கலிது
வாழிய பயிா்த்தொழில் வளம்பெருகி
வையகம் முழுதும் வாழியவே.
- நாமக்கல் வெ.இராமலிங்கனாா்.
No comments:
Post a Comment