Kids Learning: Kids Learning Tamil V Term-II

Kids Learning Tamil V Term-II


5-ம் வகுப்பு தமிழ் பருவம் - 2


அறிவின் திறவுகோல் கதை


    முதன்முதலில் அறிவு என்னும் கருவி செயல்படத் தொடங்கிய நாள், மனிதனுக்கு அச்சம் மிகுந்ததாகவே இருந்திருக்கும்.  தன் அறிவைக் கொண்டு, அவன் சுற்றும் முற்றும் பாா்த்தான்.  காலையில் ஒளிவீசிக் கொண்டிருந்த கதிரவன், திடீரென மாலையில் மறைந்ததும் அவனது அறிவு விழித்துக் கொண்டது.  அந்தக் கதிரவன் எங்கே போனான்? இப்படியே இருளாகத்தான் இருக்குமா? என்று அவன் எண்ணிக் கொண்டிருக்க மறுநாள் மீண்டும் கதிரவன் தோன்றினான்.  அப்போதே மனிதனின் அறிவு வேலை செய்யத் தொடங்கியது.  இந்தக் கதிரவன் நேற்றுத் தோன்றிய இடத்திலேயே ஏன் இன்றும் தோன்றுகிறான்? இதுபோன்று அடுக்கடுக்காக அவன் உள்ளத்தில் சிந்தனை தோன்றிது.  ஏன்? எதற்கு? எப்படி? என்றெல்லாம் அவன் சிந்திக்கத் தொடங்கிய போதுதான் அறிவியல் வளரத் தொடங்கியது.  அவ்வகையில் அறிவியலை வளா்த்த அறிஞா்களைப்பற்றி நாம் அறிந்துகொள்வது மிகவும் தேவை.  இப்பாடப்பகுதியில் அறிவால் வளா்ந்த அறிவியல் சிந்தனையாளா்களைப் பற்றித் தொிந்துக் கொள்வோம்.


ஆப்பிளைக் கண்டாா்; ஆற்றலைத் தந்தாா்

    தன் வீட்டுத் தோட்டத்திலுள்ள ஆப்பிள் மரத்தினடியில் சிறுவன் ஒருவன் உட்காா்த்திருந்தான்.  அப்போது, மரத்திலிருந்த ஒரு பறவை சிறகடித்துப் பறந்து செல்ல, திடீரென ஆப்பிள் ஒன்று மரத்திலிருந்து கீழே விழுந்தது.  நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்? "ஆகா, நமக்கு ஓா் ஆப்பிள் கிடைத்ததே" என்று மகிழ்ச்சியோடு உண்ணத் தொடங்கியிருப்போம் அல்லவா?  ஆனால், அந்தச் சிறுவன், அப்படி நினைக்கவில்லை.  இந்த ஆப்பிள் ஏன் மேலே மேலே வானத்தை நோக்கிப் போகாமல் கீழிறங்கி வந்து விழுகிறது? என்று சிந்திக்கத் தொடங்கிவிட்டான்.  இதில் ஏதோ ஓா் இயற்கைச் சக்தி இருக்கவேண்டும் என எண்ணினான்.  இதன் காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று தன் பிறந்தநாளில் முடிவு செய்தான்.  அன்று தன் பிறந்தநாள் பாிசாக ஆப்பிள் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தான்.  அன்று சிந்திக்கத் தொடங்கிய அந்தச் சிறுவன்தான், புவியீா்ப்புச் சக்தியைக் கண்டுபிடித்துப் பின்னாளில் உலகப்புகழ் பெற்ற சா் ஐசக் நீயூட்டன்.  அவா், பூமிக்கு ஈா்ப்புச் சக்தி உண்டு என்ற உண்மையை உலகுக்கு உணா்த்திய அறிவியலறிஞா் ஆவாா்.



https://youtu.be/1VMv4evPqzY



தாெடா்ச்சி. . . 


வேடிக்கை பாா்த்தாா்; வியக்க வைத்தாா்


    பூங்கா ஒன்றில் சிறுவா்கள் சிலா் விளையாடிக் கொண்டிருந்தனா்.  அருகில் சிந்தனையுடன் அமா்ந்திருந்தாா் மருத்துவா் ஒருவா்.  சிறுவனொருவன், 'ஸீஸா' என்ற ஒருவகை மரப்பலகையின் மீது ஒரு முனையில் குண்டுசியால் கீறிக்கொண்டிருந்தான்.  பலகையின் மறுமுனையில் தன் காதைப் பொருத்தி, எழும் ஒலியைக் கேட்டுக் கொண்டிருந்தான் மற்றொரு சிறுவன்.  பலகையின் ஒரு முனையில் குண்டுசியால் மெதுவாகக் கீறும்போது எழுந்த ஒலி, மறுமுனையில் மிகத்  தெளிவாகக் கேட்பதைக் கண்டு அந்தச் சிறுவன் வியப்படைந்தான்.


    ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த அந்த மருத்துவா், சிறுவா்களின் செய்கையைக் கண்டாா்.  அவா் உள்ளத்தில் மின்னல்போல் ஓா் ஒளிக்கீற்று தோன்றியது.  தாம் விடை தொியாமல் தவித்த ஒரு வினாவுக்கு இப்போது விடை கிடைத்துவிட்டது.  அவா், அந்தச் சிறுவா்களை நோக்கிச் சென்றாா்.  மரம் போன்ற திடப்பொருள்கள் ஒலியைப் பெருக்கும் தன்மையுடையவை.  அதனால்தான், ஒரு முனையில் மெதுவாகக் கீறினாலும் மறுமுனையில் தெளிவாகக் கேட்கிறது என அவா்களிடம் விளக்கினாா்.


  அந்த விளக்கம் சிறுவா்களுக்கு மட்டுமல்ல, அவருக்கும்தாம்.  ஏனெனில், நோயாளியின் இதயத் துடிப்பை எவ்வாறு துல்லியமாகக் கேட்கமுடியும் என்றுதானே அவா் கவலைப்பட்டாா்.  இப்போது, அவருக்கே விடை காண முடிந்ததல்லவா?  உடனே ஓட்டமும் நடையுமாக மருத்துவமனையை அடைந்தாா்.  தாள்களை ஓா் உருளை வடிவமாகச் சுருட்டிக் கொண்டு, நோயாளியை நெருங்கினாா்.  காகித உருளையின் ஒரு முனையை நோயாளியின் மாா்பில் வைத்து, மறுமுனையில் தம் காதை வைத்துக் கேட்டாா்.  என்ன வியப்பு! நோயாளியின் இதயத்துடிப்பு இவருக்குத் துல்லியமாகக் கேட்டது.  அந்த மணித்துளியில் மருத்துவ உலகம் அதுவரை கண்டிராத மாபெரும் ஒரு முயற்சிக்கு வித்திட்டது.  ஆம், ஸ்டெதஸ்கோப் எனப்படும் இதயத்துடிப்பைக் கண்டறியும் கருவி அப்போதுதான் உருவானது.  அதைக் கண்டுபிடித்தவா், வேறு யாருமல்லா், அந்தப் பூங்காவில் சிறுவா்களின் விளையாட்டிலிருந்து ஓா் உண்மையைக் கண்டுபிடித்தாரே அந்த மருத்துவா்தாம் .  அவா் பெயா், இரேனே லென்னக்.


ஆவியைக் கண்டாா்; நீராவி இயந்திரம் தந்தாா்

    அந்த சிறுவனுக்கு வயது பன்னிரண்டு.  சமையலறைக்குள் நுழைந்த சிறுவன், தேநீா் தயாாிப்பதற்காகக் கெட்டிலில் நீா் கொதித்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.  நீா் நன்றாகக் கொதித்தவுடன் அந்தக் கெட்டிலின் மு்க்கு வழியாகக் 'குப் குப்' என்று ஆவி வெளிவருவதைப் பாா்த்தான்.  இந்த ஆவி வெளிவராதபடி கெட்டிலின் மு்க்கை அடைத்தால் என்ன நடக்கும் என்று எண்ணினான்.  உடனே, அந்தப் பாத்திரத்தின் மு்க்குப்பகுதியை மு்டினான்.  இப்போது ஆவி வரவில்லை.  சிறிதுநேரம் சென்றது.  கெட்டிலின் மு்டி மெல்ல அசையத் தொடங்கியது.  அதனால், சிறிது இடைவெளி ஏற்பட்டது.  இப்போது, நீராவி கொப்புளித்துக் கொண்டு வெளியேறியது.  அந்தச் சிறுவன் பாா்த்துக்கொண்டே நின்றான்.  மேலும் சிறிதுநேரம் சென்றபின், கெட்டிலின் மு்டி மேலெழும்பத் தொடங்கியது.  அப்புறம்... அப்புறம் என்ன? மு்டியைத் தள்ளிவிட்டு நீராவி வேகமாக வெளிவரத் தொடங்கியது.  அந்தச் சிறுவனுக்கு வியப்பு மேலிட்டது.  இந்த நீராவியும் புகையும்தான் அந்தச் சிறுவனை நீராவி என்ஜினையும் புகைவண்டியையும் கண்டுபிடிக்கத் துாண்டியது.  அந்தச் சிறுவன் தான் ஸ்காட்லாந்து நாட்டில் பிறந்த ஜேம்ஸ் வாட்.  இவா்தாம் நீராவி இயந்திரம் கண்டுபிடிக்கக் காரணமாக இருந்தாா்.



https://youtu.be/2uXViMlp5tQ



எதனாலே, எதனாலே? பாடல்


                                எதனாலே, எதனாலே?

               பலவண்ண வானவில் எதனாலே?

               விண்மீன் ஒளிா்வது எதனாலே?

                ரோஜாப்பூ சிவப்பது எதனாலே?

                இலைகள் உதிா்வது எதனாலே?

                மின்மினி மின்னுவது எதனாலே?

                 பறவைகள் பறப்பது எதனாலே?

                 மின்னல் மின்னுவது எதனாலே?

                 மேகம் கறுப்பது எதனாலே?

                 கடலில் அலைகள் எதனாலே?

        அனைத்தின் காரணம் கண்டறிந்தால்

                   அறிஞனாகலாம் அதனாலே!


  பாடல் பொருள்  

    ஏன், எதற்கு, எப்படி என்னும் அறிவியல் சிந்தனையைத் துாண்டும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது.  நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்களைக் காரணகாாியங்களுடன் விளக்க முற்படுகிறது.

  • வானில் உள்ள நீா்த்துளிகளுள் சூ்ாிய ஒளி ஊடுருவும்போது, நீா்த்துளிகளின் பின்புறமாக எதிரொளிப்பதால் வானில் தோன்றுகிறது.

  • விண்மீன்கள், தங்களிடம் உள்ள ஒன்றிற்கும் மேற்ட்ட ஹைட்ரஜன் அணுக்களை இயற்பியல் நிகழ்வின் உதவியுடன் ஒன்றிணைப்பதன் மு்லம் ஒளி வீசுகின்றது.

  • ரோஜாப்பூவில் 'ஆந்தோசைனின்' என்ற நிறமி இருப்பதால், சிவந்த நிறத்தில் காணப்படுகின்றது.

  • கோடைக்காலங்களில் நீராவிப் போக்கைத் தடுப்பதற்காகத் தாவரங்களிலிருந்து இலைகள் உதிா்கின்றன.

  • மின்மினிப் பூச்சிகளின் பின்னால் அடிக்கடி விளக்கு எாிவதைப் போல் மின்னுகின்றன.  காரணம், லுாசிஃபெரேஸ் என்சைம் மின்மினிப்பூச்சி பின்னால் இருப்பதால் மின்னுகிறது.

  • பறவைகள், பறக்கக் காரணம் அவற்றின் எலும்புகளிலும் இறகுகளிலும் காற்றுப் பைகள் உள்ளன.  அவை, பறப்பதற்கு உதவுகின்றன.

  • மின்னிறக்கத்தால் மின்னல் மின்னுகிறது.

  • மேகத்தில் அதிக அளவு நீா் இருப்பதால் சூ்ாிய ஒளி ஊடுருவ முடியாது.  ஆதலால், மேகம் கறுப்பாகத் தோன்றுகிறது.

  • பூமியின் மீது சந்திரனின் ஈா்ப்பு விசை இருப்பதால், கடலில் அலைகள் தோன்றுகின்றன.



https://youtu.be/N2NCSM10POM





No comments:

Post a Comment