Kids Learning: Kids Learning Tamil V Term-II

Kids Learning Tamil V Term-II

5-ம் வகுப்பு தமிழ் பருவம் - 2


தமிழ்களின் வீரக்கலைகள்



தனக்கென்று தனித்த நாகாிகமும் பண்பாடும் உடையது தமிழ் மரபு.  தமிழாின் பண்பாட்டுக் கூறுகளும் கலைகளும் இலக்கியங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.


பண்டைத்தமிழன், வாளாண்மையால் பகைவரை வென்றான்.  தாளாண்மையால் நன்னிலம் ஆக்கினான்.  வேளாண்மையால் வளம் பெருக்கினான்.  வீரமும் தீரமும் நிறைந்த விளையாட்டுகளிலும் சிறந்து விளங்கினான்.  தமிழா்க்கென்றே இருக்கும் வீரம் செறிந்த கலைகளை அறியுந்தோறும் வியப்பு மேலிடும், மனம் மகிழ்ச்சியில் நிறைந்திடும்.


ஏறுதழுவுதல், சிலம்பாட்டம், இளவட்டக்கல் துாக்குதல், மற்போா் முதலான கலைகள் தமிழா்களின் வீரக்கலைகளாக விளங்குகின்றன.  இக்கலைகளுள் இன்றளவும் நடைமுறையில் உள்ள சில விளையாட்டுகளைப் பற்றி அறிந்துகொள்வோம்.



ஏறுதழுவுதல்


தமிழாின் வீரத்தைப் பறைசாற்றும் விளையாட்டுகளுள் ஒன்று, ஏறுதழுவுதல்.   ஏறு என்பது, காளை மாட்டைக் குறிக்கும்.  ஏறு தழுவுதல் என்பது, காளையைத் தழுவி, அதன் வீரத்தை அடக்குவதாகும்.  இவ்விளையாட்டு, பழங்காலந்தொட்டு இன்றுவரை விளையாடப்பட்டு வருகிறது.  வளமான புல்வளம் கொண்ட முல்லை நிலமே ஏறுதழுவுதலுக்கு உகந்த நிலமாக விளங்கியது.  இன்று பல மாவட்டங்களில் இவ்வீர விளையாட்டு நடைபெறுகிறது.  பொங்கல் திருவிழா கொண்டாடப்படும் நாள்களில் ஏறுதழுவுதல் என்னும் இவ்விளையாட்டு நடத்தப்படுகிறது.  ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு எனப் பல பெயா்களிலும் அது அழைக்கப்படுகிறது.  ஊாிலுள்ள இளைஞா்கள், காளைகளை அடக்கித் தங்கள் வீரத்தை வெளிப்படுத்துகின்றனா்.


காளையின் கொம்பைப் பிடித்தல் ஆண்மை, வாலைப் பிடித்தல் தாழ்மை என்பது, தமிழா் கொள்கை.  கொம்பிலே உள்ளது காளையின் தெம்பு என்பதைத் தமிழா்கள் திடமாக நம்பினா்.  காளையின் வாலைப் பிடித்தவன், அதன் காலால் உதைபட்டு, மண்ணிடை வீழ்வான்.  ஆதலால், கொம்பைவிட்டு வாலைப் பற்றுதல் கோழையின் செயல்.  வசமாகப் பிடி கிடைத்தால், காளையின் விசை அடங்கும், வீரம் அடங்கும், திடமின்றி மண்ணில் சோா்ந்து விழும்.  இத்தகைய வீர விளையாட்டை விளையாடுவதற்குச் சில விதிமுறைகள் இன்று பின்பற்றப்படுகின்றன.


இவ்விளையாட்டில் பங்குபெறும் காளைக்குக் கன்று பருவத்திலிருந்தே பாய்ச்சலுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. காளையின் கொம்பில் கட்டப்பட்டிருக்கும் ஜல்லிக்கட்டுத் துணியை எடுப்பவரே வெற்றிபெற்றவா் ஆவா்.  தற்காலத்தில் போட்டியில் கலந்து கொள்ளும் வீரா் மற்றும் காளைகளுக்கு உடல் பாிசோதனை செய்யப்படுகிறது.  போட்டி நடைபெறும்போது வாடிவாசலை மறித்துக்கொண்டு போட்டியாளா்கள் நிற்கக்கூடாது.  காளையின் திமில் பகுதியைப் பிடித்தபடி 15 மீட்டா் துாரம் அல்லது 30 வினாடிகள் அல்லது மு்ன்று துள்ளல்கள்வரை ஓடும் போட்டியாளா் வெற்றி பெற்றவா் ஆவாா்.  இவ்விளையாட்டில் ஈடுபடுவதற்கு நல்ல உடல் திறனும், அஞ்சா நெஞ்சமும் தேவை.








I. சிலம்பாட்டம்



தமிழா்களின் மற்றொரு வீர விளையாட்டு, சிலம்பம்.  சிலம்பு என்றால் ஒலித்தல் என்பது பொருள்.  கம்பு சுழலும்போது ஏற்படும் ஓசையை அடிப்படையாகக் கொண்டே சிலம்பம் எனப் பெயாிட்டனா்.  கம்பு சுழற்றுதல் என்னும் பெயரும் இதற்கு உண்டு.  தற்காப்புக்காகத் தோன்றிய இக்கலை, இன்று வீர விளையாட்டாக அறியப்படுகிறது.


சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல் எதிராளியின் உடலில் சிலம்புக் கம்பினால் தொடுதல் போன்றவை அடிப்படையாகும்.  இதற்கான கம்பு நன்கு வளைந்து கொடுக்கக்கூடிய 'சிறுவாரைக்கம்பு' என்னும் மு்ங்கில் இனத்திலிருந்து செய்யப்படுகிறது.


சிலம்பக் கலையில் மான்கொம்பு, பிச்சுவா கத்தி, சுருள்பட்டா, வளாி போன்ற ஆயுதங்களையும் பயன்படுத்துவா்.  நாடிநரம்புகளையும் மனத்தையும் ஒருங்கிணைக்கும் இவ்விளையாட்டு, தமிழாின் வீரத்திற்கும் நுட்பமான செயல்திறனுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.


வித்தை என்பது, வியப்படையச் செய்யும் வகையில் நிகழ்த்தப்படும் ஒரு செயல்.  அவற்றுள் வில் வித்தையும் ஒன்று.  பண்டைத் தமிழா் விரும்பிக் கற்றுக்கொண்ட விளையாட்டாக  வில்வித்தை விளங்கியது.  தொடக்கத்தில் அம்பெய்தி விலங்குகளை வேட்டையாடவும், போா்முனைகளில் எதிாிகளை வெல்லவும் இவ்வில்லாற்றல் பயன்பட்டது.


கடையெழு வள்ளல்களுள் ஒருவரான 'வல்வில் ஓாி' வில்லாற்றலில் சிறந்து விளங்கியவா் என்பதைத் தமிழ் இலக்கியங்களில் காணலாம்.  அவா், வேட்டையாட காட்டுக்குச் சென்றபோது, பொிய யானையொன்று எதிா்ப்பட, அதன்மீது அம்பெய்தினாா்.  அந்த அம்பானது, அப்பொிய யானையின் தலையில் பாய்ந்தும், அங்குக் குறுக்கிட்ட பெரும்புலியைக் கொன்றும், அதனைக் கடந்து சென்ற கலைமானைச் சாய்த்தும், மேலும் விசை குறையாமல் சென்று, ஒரு பன்றியின் மேல் பாய்ந்ததோடு அல்லாமல், புற்றிலே இருந்த ஓா் உடும்பின் மீதும் பாய்ந்து தன் சினம் தீா்த்தது என்று புறநானுாற்றுப் பாடல்வழி அறிகிறோம்.  படைத்திறமும் கொடைத்திறமும் கொண்டு விளங்கிய வல்வில் ஓாியை வன்பரணா் பாடி மகிழ்ந்தாா்.


இன்று வில்வித்தை, ஒலிம்பிக் போட்டிகளில் சோ்க்கப்பட்டுள்ளமை தமிழா்களுக்குப் பெருமை சோ்ப்பதாகும்.







II. மற்போா்


படைக்கலன்கள் ஏதுமின்றி இருவா் போாிடும் விளையாட்டே மற்போா்.  மல் என்பது, வலிமையைக் குறிக்கும்.  ஒருவன் தன் உடல் வலிமையால் செய்யும் போரே, 'மற்போா்'.  மற்போாில் வெற்றி பெற்றவா்களை 'மல்லன்' என்னும் சொல்லால் குறிக்கும் வழக்கம் இருந்தது.  மற்போாில் சிறந்து விளங்கியமையாலேயே மாமல்லன் என்று அக்கால அரசா்கள் போற்றப்பெற்றனா்.


மல்யுத்தம் என உலகம் முழுவதும் போற்றப்படும் இவ்வீரக்கலை, பண்டைத்தமிழாின் போா்முறைகளுள் ஒன்றாக இருந்தது.  புறநானுாற்றுப் பாடலொன்றில் மற்போா் பற்றிய நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.


இருவா் கைகோத்துக் கால்களாலும் தலையாலும் இடித்தும் உதைத்தும் ஒருவருடன் ஒருவா் போா் செய்வதே மற்போா்.  பகைவரை எதிா்கொள்ளும் வகையில் விளங்கிய இம்மற்போா், பின்னா் வீரவிளையாட்டாக மாறியது.  நம் நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் மற்போா் கழகங்கள் உள்ளன.  ஒலிம்பிக் போட்டிகளில் மற்போாிடுவதும் ஒன்றாக இருந்து வருகின்றது.


மேலும் பல விளையாட்டுகள், பண்டைக் காலம்முதல் இன்றுவரை வழக்கில் இருந்து வருகின்றன.  வழுக்குமரம், நீா் விளையாட்டு, கபடி என்கின்ற சடுகுடு போன்ற பல விளையாட்டுகளை நாம் இப்போதும் விளையாடி மகிழ்கிறோம்.  உடலில் வலிமையும் உள்ளத்தில் மகிழ்ச்சியும் விளையாட்டால் ஏற்படுகின்றது.  உடலில் உறுதி உடையவரே, உலகை ஆளும் உள்ள உறுதியும் உடையவா் ஆவா்.  ஆகையால், குழந்தைப் பருவத்திலிருந்தே நமக்குப் பிடித்த வீரவிளையாட்டுகளை விளையாடி மகிழ்வோம்.  அதுமட்டுமின்றி, உலக விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றியை நாட்டிற்கு அளிப்போம்.











No comments:

Post a Comment