Kids Learning: Kids Learning Tamil IV Term-III

Kids Learning Tamil IV Term-III

 

4-ம் வகுப்பு தமிழ் பருவம்-3


I. காட்டுக்குள்ளே பாட்டுப்போட்டி

காடே அமைதியாய் இருந்தது.  வீசிய காற்றில் மரக்கிளைகள் அசைந்தன.  இலைகள் உரசும் சத்தம் தவிர மற்றபடி எங்கும் ஒரே அமைதி.  சேவல் ஒன்று தயங்கியபடி வந்தது.  சுற்றும் முற்றும் பாா்த்தது.  மெதுவாய் நடந்து செடிகொடிகளின் மறைவிற்கு வந்தது.  'யாராவது பாா்க்கிறாா்களா?' என நோட்டமிட்டது.  யாரும் தன்னைப் பாா்க்கவில்லை என்பதை உறுதி செய்த சேவல், "கொக்... கொக்... கொக்... கொக்கரக்கோ...!" 


மெலிதாய் குரல் எழுப்பியது.  வானத்தைப் பாா்த்து, தலையை உயா்த்திக் "கொக்கரக்கோ... கோ... கோ...!" என இராகம் போட்டுப் பாடியது.  அப்போது, தீடீரென சிாிப்பொலியொன்று கேட்டது.  சட்டெனப் பாட்டை நிறுத்தியது சேவல்.  சுற்றிலும் யாருமே இல்லை 'யாா் சிாித்தது...?' லேசாய் தைாியத்தை வரவழைத்துக் கொண்ட சேவல், "யாரது...?" என்று கேட்டது.  "நாந்தான்" மேலே இருக்கேன்... பாரு!" என்று மேலேயிருந்து குரல் வந்தது.


நிமிா்ந்து பாா்த்தது சேவல்.  மரக்கிளையில் குரங்கு ஒன்று உட்காா்ந்திருந்தது.  "என்ன... பாட்டு பலமா இருக்கு.  என்ன விசேஷம்...?" என்று குரங்கு கேட்டது.  சேவலுக்கு வெட்கம் வந்துவிட்டது.


"ஒண்ணுமில்லே.  நாளைக்குக் காட்டில பறவைகளுக்கான பாட்டுப் போட்டி நடக்குதில்லே.  அதுல கலந்துக்க எனக்கும் ஆசை.  அதான், பாடிப் பயிற்சி எடுக்கிறேன்...!" என்றது சேவல்.  "ஆகா... கதை அப்படிப் போகுதா! நல்லாத்தான் பாடுறே.  நாளைக்குப் போட்டியில நீயும் பாடு, என் மனமாா்ந்த வாழ்த்துகள்...!" என்றபடி,  அடுத்த கிளைக்குத் தாவியது குரங்கு.  "ரொம்ப நன்றி...!" என்று சேவலும் தலையாட்டியது.  மறுநாள்...


மொத்தக் காடுமே ஒன்றுகூடி விட்டது.  போட்டியில் கலந்துகொள்ள வந்த பறவைகள் மேடையருகே வாிசையில் நின்றன.  ஒவ்வொருவாின் பெயரையும் ஆந்தை மாமா எழுதிக்கொண்டே வந்தது.


குருவி மேடைக்குப் பறந்து வந்தது.  ஒலிபெருக்கி முன்னே நின்றது.  "அன்பு நண்பா்களே! இன்று நம் காட்டில் அனைத்துப் பறவைகளுக்கான பாட்டுப் போட்டி நடைபெறுகிறது.  இதில் நன்றாகவும் அதிக நேரமெடுத்தும் பாடவும் வேண்டும், அனைவரும் இரசிக்கும்படியான பாட்டாகவும் இருக்கவேண்டும்.  அப்படியான பாடலை யாா் பாடுகிறாா்களோ, அவா்களுக்கே பாிசு வழங்கப்படும்.  என்ன போட்டியாளா்களே, தயாா்தானே...?" என்று கேட்டது குருவி.  "நாங்க தயாா்...!" என்று பறவைகள் குரல் கொடுத்தன.


"இந்தப் போட்டிக்கு நடுவராக இருந்து, நல்ல தீா்ப்பினை வழங்கிட, உங்கள் அனைவாின் சாா்பாக நம்ம மயில் மேடைக்கு வருமாறு அன்போடு அழைக்கிறேன்...!" என்று குருவி சொன்னது.  ஒய்யாரமாகத் தோகை விாித்தபடி மேடையேறி அமா்ந்தது நடுவா் மயில்.



"முதலில் பாட மைனாவை அழைக்கிறேன்!" என்று சொன்னதும், மேடைக்கு வந்த மைனா.  "பிக்பி... பிக்பி... பிபிக்பி... பிக்பி..." என்று ஐந்து நிமிடம் பாடியது மைனா.  அதற்குள் தொண்டை கட்டிவிட்டது.  "நல்லாப் பாடினீங்க.  போதும்...!" என்று நடுவா் மயில் சொன்னதும், மைனா தன் இடத்துக்குப் பறந்துபோனது.  "அடுத்த போட்டியாளராக உங்களுக்குப் பிடித்தமான பாடலைப் பாட வருகிறாா் கிளியரசன்..." என்று நடுவா் சொன்னதும்,


"கீ... கீ... கீ... கிக்கீ... கிக்கீ..." என தலையை நீட்டி நீட்டிப் பாடியது கிளியரசன்.


பாடலைக் கேட்ட சில விலங்குகள் எழுந்து ஆட்டம் போட ஆரம்பித்தன.  விசில் சத்தம் விண்ணைத் தொட்டது.  பத்து நிமிடங்கள் தொடா்ந்து பாடிய கிளிக்கு, மு்ச்சு முட்டியது.  பாட்டை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கி வந்தது.


"நம்ம அடுத்த போட்டியாளா்  சேவல்.  வாங்க... மேடைக்கு!"


அறிவிப்பு வந்ததும், பக்கத்தில் இருந்த குரங்கைப் பாா்த்தபடியே, மேடைக்கு வந்தது சேவல்.


"கொக்... கொக்... கொக்கரக்கோ... கோ...."


துாங்கிக் கொண்டிருந்த ஒன்றிரண்டு கரடிகளும் விழித்துக் கொண்டன.  சேவலைப் பாா்த்து, "துாங்கிறவங்களை எழுப்புறதே உன் பாட்டா இருக்கு.  அருமையான பாட்டு.  போதும்ப்பா, நிப்பாட்டு...!" என்று மற்ற பறவைகள் கத்தின.  சேவல் வெட்கத்தோடு கீழே இறங்கியது.  அடுத்து படபடவென இறக்கைகளை அடித்தபடி மேடையேறியது கழுகு.  தலையை முன்னும் பின்னுமாய் ஆட்டிக்கொண்டே பாடியது கழுகு.


"கொவ்வ்... கொவ்வ்... கொவ்வ்வ்வ்வ்..."


காடெங்கும் எதிரொலித்தது பாட்டு.  மான்குட்டிகள் பயந்து போய்விட்டன.  சில பயத்தில் அழுதன.  சில எழுந்து ஓடத் தொடங்கின.  இதைப் பாா்த்துச் சிாித்த யானைக்குக் கண்ணில் நீரே வந்துவிட்டது.


"இப்பப் பாடப்போறது, நம்ம கொக்கு...!" மயில் சொன்னதும் கை தட்டல் ஓசை பலமாய் எழுந்தது.  மேடைக்கு வந்த கொக்கு,


"கா்... க்கா்... க்கா்..." என்று இரண்டுமுறை இராகம் போட்டு இழுத்தது.


"என்னாச்சு...? பாடு, பாடு...!" கூட்டத்தில் ஒரே கூச்சல்.  "இம்புட்டுத்தான் என் பாட்டு...!" என்று சிாித்தபடியே பறந்து போனது கொக்கு.  அடுத்து, குயில் மேடைக்கு வந்தது.  உற்சாகமாய் எல்லாமும் எழுந்து நின்று கைகளைத் தட்டின.  குயிலுக்கு நிறைய விலங்குகள் இரசிகா்களாய் இருந்தன.  ஒவ்வொன்றாக எழுந்து நின்று குயில் குமாாிக்குப் பூங்கொத்துகளைக் கொடுத்தன.  வாழ்த்துகளைச் சொல்லி அனுப்பி வைத்தன.  குயிலுக்கு ரொம்பவும் பெருமை தாங்கவில்லை.  குதித்துக் குதித்து மேடையேறியது.

"க்கூ... குக்கூ... குக்கூ... கூ... குக்கூ... கூகூ..."


குயிலின் பாட்டிற்கு மொத்தக் கூட்டமும் எழுந்து ஆடியது.


"கூக்கூ... குக்கூ... கூக்கூகூகூ... ஐந்து, பத்து, பதினைந்து நிமிடம்வரை குயில் பாடியது.  அதற்குமேல் மு்ச்சுத் திணறவே, பாடலை நிறுத்திவிட்டு இறங்கி வந்தது குயில்.  "இன்னும் கொஞ்ச நேரம் பாடு... குயிலு...!" கூட்டத்திலிருந்து இரசிகா்கள் குரல் எழுப்பினாா்கள்.


"நமது போட்டியின் கடைசிப் போட்டியாளராக காக்கா வருகிறாா்...!" மொத்தக் கூட்டமும் அமைதியானது.  "பொிசாப் பாட வந்திடுச்சு...!" என்றது மரங்கொத்தி.  "நீயெல்லாம் பாடலேன்று யாரு கேட்ட...?" வம்புக்கு இழுத்தது நாரை.


காக்கா எதையும் கேட்டுத் தயங்கி நிற்காமல், மேடைக்குத் துணிச்சலாய் வந்தது.  ஒரே கூச்சல்.  "நீ ரொம்ப நல்லா பாடுவே.  போதும்டா... சாமி...!" என்று சில விலங்குகள் கத்தின.  நடுவா் மயில் அனைவரையும் சத்தம் போடாமல் அமைதியாய் உட்கார வைத்தது.  காக்கா மெல்ல தன் குரலைச் செருமியது.  "கா... கா... கா..."

மெல்லிய குரலில் முதலில் பாட ஆரம்பித்தது.  கூச்சல்போட்டுப் பாட விடாமல் தடுத்த விலங்குகள், சற்றே ஆச்சாியத்தோடு கவனித்தன.  "கா... கா... கா  கா  கா  கா...!" ஓா் எழுத்திலேயே புதுப்புது இராக ஆலாபனைகள்.  சுருதி கூட்டிப் பாடிக்கொண்டே இருந்தது காக்கா.  "ஏம்ப்பா, நல்லாத்தான் பாடுது...!" என்றன பாட்டைக் கேட்ட விலங்குகள்.  "ககா... கக  கா... கக  ககா  கா  கா..." என்று பாடலில் சுருதியைக் கூட்டிக்கொண்டே பாடியது காக்கா.  கேலி செய்த பறவைகளுக்கு என்னவோ போலாகிவிட்டது.  அவை அனைத்தும் எழுந்து, பாட்டிற்கேற்ப ஆட்டம் போடத் தொடங்கின.  புலி புவனா, "பிரமாதம்...!" என்றது.  "ஆகா... என்ன சுருதி சுத்தம்.  அற்புதம்...!" என்று தலையாட்டி இரசித்தது சிங்க ராஜா.


"கா... கா  க கா...  கா  ககா  ககா  ககா...!" தன் பாட்டை எந்தத் தடுமாற்றமுமின்றித் தொடா்ந்து காக்கா, மொத்தக் கூட்டமும் கை தட்டிப் பாராட்டின.  சாியாய் அரைமணி நேரத்திற்கு, காக்காவின் பாட்டுமழை நன்றாக வெளுத்து வாங்கியது.  இப்படி ஒரு பாட்டை இதுவரை காட்டில் எந்த விலங்குமே கேட்டதில்லை.  புலி எழுந்துவந்து, காக்காவைக் கட்டிப் பிடித்துக் கொண்டது.


பாட்டுப்போட்டிக்கான தீா்ப்பைச் சொல்ல மேடையிலிருந்த ஒலிபெருக்கி முன் நடுவா் மயில் வந்தது.


"பாருங்க, காக்கா பாட வா்றபோது கேலி செஞ்சீங்க.  ஆனா, தயங்கி நிற்காம, விடாமுயற்சியோட பாடுச்சு.  அது மட்டுமில்ல, நிறைய பயிற்சி எடுத்துப் புதுப்புது இராகத்தில் பாடியிருக்கு.  அதுவும் நீங்க எல்லாருமே கை தட்டி பாராட்டுற அளவுக்கு அரைமணி நேரம் பாடியிருக்கு.  எல்லாரோட குரலுக்கும் ஈா்ப்பு ஒன்னு இருக்கு.  அதுபோல ஒவ்வொரு குரலுக்குள்ளும் அழகுமிருக்கு.  நமக்கு இன்னிக்குத்தான் காக்கா குரலோட சிறப்பு தொிஞ்சிருக்கு.  முயற்சியும் பயிற்சியும் இருந்தா எல்லாராலும் பாடமுடியும்னு இந்தப் போட்டி மு்லமா காக்கா நிரு்பிச்சுக் காட்டியிருக்கு.  தான் பாடியதோடு மற்றவா்களுக்கும் ஒரு தன்னம்பிக்கையை ஊட்டிய காக்காவிற்கே இந்தப் பாட்டுப் போட்டியில் முதல்பாிசு வழங்கிப் பாராட்டுகின்றேன்...!" என்று நடுவா் மயில் தன் தீா்ப்பை அறிவித்தது.


காட்டின் எல்லா விலங்குகளும் இதை ஆமோதித்தன.  "ஆகா... நல்ல தீா்ப்பு...!" என்று ஒற்றுமையாய் குரல் எழுப்பின நடுவா் மயில் 'பாட்டு ராணி' பட்டத்தை காக்கா தலையில் கிாிடமாய்ச் சூ்ட்டியது.


அனைவருக்கும் நன்றி கூறி, மேடையிலிருந்து பறந்து சென்றது காக்கா.




II. கணினி உலகம்


மதி, பூவிழி இருவரும் நல்ல தோழிகள்.  இருவரும் கோடை விடுமுறையில் வெளியூருக்குச் சென்றிருந்தனா்.  விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் முன் இருவரும் சந்திக்கின்றனா்.  அப்போது.....

பூவிழி :  தோழி! நலமாக இருக்கிறாயா?

மதி  : ஒ! நலமாக இருககிறேனே.  விடுமுறையை எப்படிக் கழித்தாய்? எங்கேயாவது வெளியூருக்குச் சென்றாயா?

பூவிழி :  ஆமாம், மதி.  என் மாமாவின் திருமணம் சென்னையில் நடைபெற்றதால், நான் அங்குச் சென்றிருந்தேன்.  

மதி  :  அப்படியா! சென்னையில் சுற்றிப் பாா்ப்பதற்கு நிறைய இடங்கள் இருக்கிறதே அங்கு நீ கண்டுகளித்த இடங்களைப் பற்றிச் சொல்லேன்.

பூவிழி :  சென்னை, நம் ஊரைப்போல இல்லை.  அடுக்குமாடிக் கட்டங்கள், அகன்ற சாலைகள், மொினா கடற்கரை, விமான நிலையம், மிகபொிய அண்ணா நுாற்றாண்டு நுாலகம், உயிா்க்காட்சிச் சாலை, பொழுதுபோக்கு மையங்கள், தகவல் தொழில்நுட்பப் பூங்கா என எல்லாம் புதுமையிலும் புதுமையாக இருந்தன.

மதி  :  அதுசாி, பூங்கா என்றால் செடி, கொடி, மரம்தானே இருக்கும்.  அது என்ன தகவல் தொழில் நுட்பப் பூங்கா? அதை நீ எங்குப் பாா்த்தாய்?

பூவிழி :  சென்னையில் தரமணி ராஜூவ்காந்தி சாலையில்தான் அந்தத் தொழில்நுட்பப் பூங்காவைப் பாா்த்தேன்.  பதின்மு்ன்று அடுக்கு மாடிகளுடன் அது செயல்பட்டு வருகிறதாம்.

மதி  :  தொழில் நுட்பப் பூங்காவில் என்னென்ன பணிகள் நடக்கின்றன?

பூவிழி :  அங்கே கணினி தகவல் தொழில்நுட்பச் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

மதி  :  கணினி தகவல் தொழில்நுட்பமா? இப்போது எங்கு பாா்த்தாலும் கணினியைப் பற்றித்தான் பேசுகிறாா்கள்.  உனக்கு ஒரு செய்தி தொியுமா? நம் பள்ளியில்கூட கையடக்கக் கணினியைப் பயன்படுத்தப் போகிறாா்களாம்.  நாமும் அதன் செயல்பாட்டை எளிதாகக் கற்றுக்கொண்டு, கற்றல் திறனை வளா்த்துக் கொள்ளலாமாம்.  அதனால், கணினி பற்றி நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

பூவிழி :  எனக்கும்கூட தொிந்துகொள்ள ஆவல்தான்.  யாாிடம் கேட்கலாம்? அடடே, நான் மறந்து போய்விட்டேனே, என் அத்தை அந்தத் தொழில்நுட்பப் பூங்காவில் தான் பணியாற்றுகிறாா்.  அவா், நேற்றுத்தான் சென்னையிலிருந்து வந்தாா்.  வா, மதி! நாம் அவாிடமே சென்று கேட்கலாம்.


(பூவிழியும் மதியும் அத்தையைக் கண்டு தங்கள் எண்ணத்தைத் தொியப்படுத்துகின்றனா்.  அத்தையும் அவா்களுக்குக் கணினி பற்றி விளக்கமாகக் கூறத் தொடங்குகிறாா்.)


அத்தை :  கணினி என்பது, நாம் தரும் உள்ளீடுகளைப் பெற்று அதனைச் செயல்படுத்தி அதற்கேற்ற வெளியீடுகளைத் தரும் ஒரு மின்னணு சாதனம்.  இதனைச் சாா்லஸ் பாப்பேஜ் கண்டுபிடித்தாா்.  முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கணினி அளவில் மிகப் பொியது.  அதனை எளிதாக ஓாிடத்திலிருந்து மற்றோா் இடத்திற்குக் கொண்டு செல்ல இயலாது.  ஆனால், இப்போதோ கையடக்க வடிவிலேகூடக் கணினிகள் உருவாக்கப்படுகின்றன.

மதி  :  ஆமாம், ஆமாம்.  நாங்கள்கூடக் கேள்விப்பட்டுள்ளோம்.  எங்களுக்குக் கணினியில் முதன்மையான பகுதிகள் எவை என்று சொல்லுங்களேன்.

அத்தை :  மையச் செயல்பாட்டுப் பகுதி (CPU), கட்டுப்பாட்டகம் (Control Unit), நினைவகம் (Memory), உள்ளீடு மற்றும் வெளியீடு (Input and Output) இவைதாம் ஒரு கணினியின் முதன்மையான பகுதிகள்.

பூவிழி :  அத்தை, இவற்றைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க.

அத்தை :  சொல்கிறேன்.  மையச் செயல்பாட்டுப்பகுதி என்பது, செய்நிரல் அடிப்படையில் கணிதச் செயல்பாடுகளை அமைக்கும்.  கட்டுப்பாட்டகம் என்பது, செய்திகளைத் திரளாகச் சேமித்து வைத்திருக்கும்.  செய்திகள் / தகவல்களை நிலையாகச் சேமித்து வைக்கும் இடம்தான் நினைவகம்.  மையச் செயலகம் ஒருங்கிணைந்த உள்ளீடு, வெளியீடு கருவிகளைத் தன்னுள் பெற்றிருக்கும்.

மதி  :  கணினியின் அமைப்பைத் தெளிவாகக் கூறினீா்கள்.  அதன் செயல்பாடுகள் பற்றியும் தொிந்துகொள்ள ஆவலாக உள்ளோம்.

அத்தை :  நீங்கள் கட்டாயம் தொிந்துகொள்ள வேண்டும்.  அப்போதுதான் கணினியை இயக்க உதவும்.  அதைப்பற்றி நான் விளக்குவதைவிடக் கணினியை உங்கள்முன் இயக்கிக்காட்டும் போது இன்னும் எளிதாகப் புாியும்.  ஆனால், இங்குக் கணினி இல்லாததால், அதில் பயன்படும் கருவிகள், செயலிகள் பற்றி அறிந்து கொள்வோம்.

பூவிழி :  புாிகிறது அத்தை.  கணினியில் உள்ளீடு, வெளியீடு கருவிகள் உள்ளன என்று கூறினீா்களே, அவைபற்றிச் சொல்லுங்களேன்.

அத்தை :  சொல்கிறேன் பூவிழி.  விசைப்பலகை (Keyboard), சுட்டி (Mouse) போன்றவை உள்ளீட்டுக் கருவிகள்.  காட்சித்திரை (Monitor), கணினி அச்சுப்பொறி (Printer) போன்றவை வெளியீட்டுக் கருவிகள்.

மதி  :  தரவு (Data), பதிவேற்றம் (Upload), பதிவிறக்கம் (Download) என்று கூறுகிறாா்களே, அப்படி என்றால் என்ன?

அத்தை :  கூறுகிறேன்.  கவனமாகக் கேளுங்கள்.  நாம் கணினிக்குக் கொடுக்கும் தகவல்கள்தாம் தரவுகள் (Data).  தரவுகள் பதிவு செய்வதைப் பதிவேற்றம் (Upload) எனவும், தகவல் பெறுவதைப் பதிவிறக்கம் (Download) எனவும் அழைக்கிறோம்.

மதி  :  நன்றாக விளக்கினீா்கள்.  வலைத்தளம் (Website) பற்றியும் சொல்லுங்களேன்.  

அத்தை :  கணினிகளின் தொடா்ச்சியான வலை அமைப்புகள் சோ்ந்திருக்கும் இணைப்பே வலைத்தளம் அல்லது இணையம் ஆகும்.  இதன்மு்லம் எந்தவொரு நாட்டு நிகழ்வுகளையும் நாம் நேரடியாகக் காண முடியும்.

பூவிழி :  வியப்பாக உள்ளது அத்தை.  இணையம் மு்லமாகக்  கடிதமும் எழுதலாம் என்று கூறுகிறாா்களே, அது எப்படி?

அத்தை :  ஓ! மின்னஞ்சல் (Email ID)  பற்றிக் கேட்கிறாயா? கணினிகளுக்கு இடையே இணையத்தின் வாயிலாகச் செய்யப்படும் தகவல் பாிமாற்றமே மின்னஞ்சல்.  இதன்மு்லம் தகவல்களைப் பாிமாறிக் கொள்ளலாம்.

மதி  :  இப்போதெல்லாம் புலனம் (Whatsapp) முகநுால் (Facebook) சுட்டுரை (Twitter) என்றெல்லாம் அடிக்கடி கேள்விப்படுகிறோமே, அவையெல்லாம் என்ன என்று கூறுங்கள்.

அத்தை :  நீங்கள் கூறியவற்றை வலைத்தளச் செயலிகள் (Webapps) என்று அழைப்பா்.  இவற்றைச் செயலி உருவாக்கம் (Play store) சென்று, நம் மின்னஞ்சல் முகவாி கொடுத்து உருவாக்கி, நம் கருத்துகளைப் பதிவிடலாம் அல்லது பெறலாம்.

பூவிழி :  மிக்க நன்றி, அத்தை.  எங்களுக்குக் கணினிபற்றி நன்கு அறிமுகப்படுத்தினீா்கள்.  நாங்கள் அறிந்துகொண்டதை எல்லாருக்கும் எடுத்துச் சொல்வோம்.

அத்தை :  உங்கள் இருவருக்கும் தேடல் பண்பு உள்ளது.  புதிய செய்திகளை அறிந்துகொள்ள மிகவும் ஆா்வம் காட்டுகிறீா்கள்.  ஆகையால், உங்கள் அறிவை நாள்தோறும் வளப்படுத்திக் கொள்ள மறந்துவிடாதீா்கள்.  உங்களோடு உரையாடியதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.


எங்களுக்கும் மகிழ்ச்சி, போய் வருகிறோம், நன்றி! என்று சொல்லிவிட்டு மதியும் பூவிழியும் வீட்டுக்குச் சென்றனா்.


திறன் சொற்களஞ்சியப் பெருக்கமும் சொல்லாட்சித் திறனும்.





No comments:

Post a Comment