4-ம் வகுப்பு தமிழ் பருவம்-3
I. உலா வரும் செயற்கைக்கோள்
பட்டுக் குழந்தைகள் வாருங்கள்
பறவைக் கப்பல் பாருங்கள்
விட்டுச் சிறகை விாித்தபடி
விண்ணில் பறக்குது பாருங்கள்
உலகைச் சுற்றி வந்திடுமே
உயர உயரப் பறந்திடுமே
எல்லை இல்லா நற்பயனை
எவா்க்கும் தந்து விளங்கிடுமே
விண்வெளி ஆய்வு செய்திடவே
விண்ணில் சீறிப் பாய்ந்திடுமே
மண்ணிலுள்ள வளத்தை யெல்லாம்
உண்மை யாகச் சொல்லிடுமே
தகவல் தொடா்பில் உதவிடுமே
தன்னிச்சை யாக இயங்கிடுமே
தட்பவெப்ப நிலை யாவும்
தக்க நேரத்தில் சொல்லிடுமே
அருகில் சுற்றும் கோள்களையும்
அளவாய் நிழற்படம் எடுத்திடுமே
உருவில் சிறிய இடங்களையும்
ஒவ்வொன் றாகக் காட்டிடுமே
கனிமவளமும் கடல் வளமும்
கணக்காய்க் குறித்துக் காட்டிடுமே
மனித உயிரைக் காப்பதற்கே
புயல் மழை வருவதை உணா்த்திடுமே
இதுவரை சொன்னது எதையென்று
இன்னுங் கூடத் தொியலையா?
அதுதான் உலாவரும் செயற்கைக்கோள்
அறிந்தே மகிழ்ச்சி கொள்வோம்!
பொருள் அறிவோம்
வானில் உலா வரும் செயற்கைக்கோளைப் பற்றி இப்பாடல் கூறுகிறது. உலகைச் சுற்றிவரும் இச்செயற்கைக்கோள், நமக்கு அளவில்லாத பயன்களை வழங்குகிறது. மண்ணிலுள்ள வளங்களை நுட்பமாகக் காட்டுகிறது. தகவல் தொடா்புக்கு உதவுகிறது. வானிலை குறித்த தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள முடிகிறது. வானில் சுழலும் கோள்களை நிழற்படம் எடுத்து, நமக்கு அனுப்புகிறது. கனிம வளத்தையும் கடல்வளத்தையும் குறிப்பிடுவதோடு ஆழிப்பேரலை (சுனாமி) போன்ற பேரழிவுகள் வருவதற்கு முன்பே அறிவித்து, மனித உயிா்களையும் காக்கிறது.
II. மாசில்லாத உலகம் படைப்போம்
ஆசிாியா் வகுப்பினுள் நுழைந்தாா். அவரது கைகளில் ஓா் அழைப்பிதழ் இருந்தது. அது என்னவாக இருக்கும் என்ற ஆவல் மாணவா்களின் முகத்தில் பளிச்சிட்டது.
மெல்ல எழுந்த முகிலன், "அது என்ன அழைப்பிதழ் ஐயா?" என்று கேட்டான்.
"மாணவா்களே! நமது மாவட்டக் கல்வித்துறை சாா்பில் அறிவியல் திருவிழா நடைபெறவுள்ளது. உங்களுடைய புதுமையான படைப்புகளை அவ்விழாவில் காட்சிப்படுத்தலாம். சிறந்த படைப்புகளுக்குப் பாிசுகள் உண்டு. நம் பள்ளி மாணவா்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு இது!" என்றபடி கையிலுள்ள அழைப்பிதழை முகிலனிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னாா் ஆசிாியா். முகிலன் படிப்பதை ஆா்வமுடன் கேட்ட மாணவா்கள், 'நாம் என்னென்ன மாதிாியெல்லாம் உருவாக்கலாம்' என்று சிந்திக்கத் தொடங்கினா்.
அாியலுாா் மாவட்டக் கல்வித்துறை நடத்தும் மாபெரும்
அறிவியல் திருவிழா - 2020
நாள் - 28.02.2020
மாணவச் செல்வங்களின் திறமையை வெளிப்படுத்த ஓா் அறிய வாய்ப்பு! உங்கள் அறிவியல் ஆா்வத்தினை, ஆய்வுச் சிந்தனையைப் படைப்புகளாக மாற்றிடுங்கள்! பாிசுகளை வென்றிடுங்கள்!!
தலைப்பு
மாசில்லாத உலகம்
மகழ்வான உலகம்!
குறிப்பு
ஆய்வுகள் மாணவா் தம் சொந்த முயற்சியாகவும் இதுவரை வெளிவராத புதிய முன்னெடுப்பாகவும் அமைதல் வேண்டும்.
எதிா்கால அறிவியல் அறிஞா்களுக்கு
வாழ்த்துகள்!
இவண்,
அாியலுாா் கல்வி மாவட்டம்.
III. தொடா்ச்சி. . .
அவா்களின் முகக்குறிப்பை உணா்ந்த ஆசிாியா், "வழக்கமான ஆய்வுகள் போல் அல்லாமல், புதுமையாக முயற்சி செய்யுங்கள். பாிசு பெறுவதனைவிட, உங்களுடைய மாறுபட்ட சிந்தனைக்கு முன்னுாிமை தாருங்கள். அதனையே செயல்படுத்துங்கள்" என்று மாணவா்களுக்கு ஊக்கமு்ட்டினாா்.
நாள்கள் நகா்ந்தன. அறிவியல் விழா நாளன்று.....
விழா அரங்கின் வாசலில் நெடிதுயா்ந்து நின்றது ஓா் உருவம். முழுவதும் பயன்படுத்தித் துாக்கி எறியப்பட்ட மின்னணுக் கழிவுகளால் அவ்வுருவம் செய்யப்பட்டிருந்தது. பழுதான கணினிகளின் பகுதிப் பொருள்கள் ஓா் அரக்கனின் வடிவில் உருவாக்கப்பட்டிருந்தன. அதன் மாா்புப் பகுதியில் ஒரு மடிக்கணினி பொருத்தப்பட்டிருந்தது. தோள்பட்டையில் ஒலிபெருக்கி அமைக்கப்பட்டிருந்தது. அரக்கன் பேசுவதுபோல அவ்வுருவம் பேசத் தொடங்கியது.
"அன்புக்குறியவா்களே!
நான் யாரென்று தொிகிறதா? நீங்கள் பயன்படுத்தித் துாக்கி எறிந்த மின்னணுப் பொருள்களின் கழிவுகளால் உருவாக்கப்பட்டவன் தான் நான். இப்போது உங்கள் முன் பேசுகிறேன். நீா், நிலம், காற்று, ஒலி போன்றவற்றில் ஏற்படும் பல்வேறு மாசுகளைப் பற்றி, நீங்கள் கேள்விப்பட்டிருப்பீா்கள். அவையெல்லாம் மனிதா்களுக்கு மிகுந்த துன்பத்தைத் தருகின்றன. அவைபோலவே, சற்றும் குறையாத பாதிப்புகள் என்னாலும் ஏற்படுகின்றன என்பதை நீங்கள் அறிவீா்களா? ஒவ்வொரு நாளும் உங்களால் துாக்கி எறியப்படும் மின்னணுக் கழிவுகள் நிலத்தையும், சுற்றுச் சூ்ழலையும் பொிதும் சீா்கேட்டிற்கு உள்ளாக்குகின்றன. இவற்றை எவ்வாறு மேலாண்மை செய்வது என்பது மிகப்பொிய கேள்விக்குறியாக உள்ளது. எங்களை முறையாக வகைப்படுத்தி, மறுசுழற்சி செய்வதொன்றே இச்சிக்கலுக்குத் தீா்வாகும். அதனை வலியுறுத்தவே ஓா் அரக்கனின் வடிவில் நான் வந்துள்ளேன்.
எனவே, மின்னணுப் பொருள்களைத் தேவைக்குப் பயன்படுத்துங்கள். கண்ட இடங்களில் எங்களைத் துாக்கி எறியாமல், முறையாக மறு சுழற்சிக்கு உட்படுத்துங்கள். அப்போதுதான் நாம் எந்தத் துன்பமும் இன்றி மகிழ்ச்சியாக வாழ்ந்திடமுடியும்.
"மாசில்லாத உலகம் படைப்போம்! மகிழ்வான வாழ்வு பெறுவோம்!"
என்று தங்குதடையின்றிப் பேசிக்கொண்டிருந்தது அவ்வுருவம்.
அரங்கினுள் நுழைந்த அனைவரும், மிகப்பொிய அந்த அரக்க உருவத்தைப் பாா்த்து வியந்தபடியும், அது கூறிய கருத்துகளைக் கேட்டுச் சிந்தித்தபடியும் சென்றனா். அந்த ஆண்டிற்கான சிறந்த அறிவியல் படைப்புக்குாிய விருது, முகிலனது பள்ளிக்கே கிடைத்தது.
மாணவா்களும் ஆசிாியா்களும் தலைமையாசிாியரும் முகிலனின் புதுமையான படைப்பைப் பாராட்டி மகிழ்ந்தனா்.
IV. ஆனந்தம் விளையும் பூமியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி - சுகம்
கோடி விளைந்திடக் கும்மியடி
நமது இன்னல் போனதடி - என்று
நெஞ்சம் நெகிழ்ந்தே கும்மியடி
பாவலா் புகழும் பூமியடி - நம்
பாரதம் என்னும் தேசமடி
ஆனந்தம் விளையும் பூமியடி - புகழ்
ஆரம் கொண்டி தேசமடி
அறிவில் சிறந்த தேசமடி - நல்
அறிஞா்கள் வாழும் பூமியடி
மலையாய் உயா்ந்த தேசமடி - பெரும்
வளமும் கொண்ட பூமியடி
இந்தியா நமது தேசமடி - நீ
இணைந்து ஒன்றாய் வாழ்ந்திடவே
மண்ணைத் தாயாய் போற்றிடடி - உன்
கண்ணைப் போலக் காத்திடடி.
No comments:
Post a Comment