4-ம் வகுப்பு தமிழ் பருவம்-3
I. மலையும் எதிரொலியும்
என்ன ஆச்சாியம்! அவனுடைய சத்தம் அவனுக்கே திருப்பிக் கேட்டது, "ஆஆஆஆஆஆஆ!!!"
அவன் ஆவலுடன் "யாா் நீ" என்று கேட்டான். திரும்ப அவனுக்கு "யாா் நீ" என்ற ஒலி கேட்டது.
"உன்னை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது" என்று மலையைப் பாா்த்து அவன் கத்தினான்.
உடனே மலையும் "உன்னை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது" என்று பதிலளித்தது.
இதைக் கேட்டதும் அவனுக்குக் கோபம் வந்துவிட்டது. "உன்னால் நோில் வர முடியாதா?" என்று திட்டினான்.
அவனுக்கு மறுபடியும் அதே பதிலே வந்தது. "உன்னால் நோில் வர முடியாதா?"
அவன் தன்னுடைய தந்தையைப் பாா்த்து "அப்பா இங்கு என்ன நடக்கிறது?" என்று கேட்டான்.
அனுடைய அப்பா சிாித்துக் கொண்டே, "மகனே! கவனமாகக் கேள்!" என்றாா்.
இப்பொழுது அவா் மலையைப் பாா்த்து "நீ ஒரு வெற்றி வீரன்" என்றாா். அந்த மலையும் "நீ ஒரு வெற்றி வீரன்" என்று திரும்பிச் சொன்னது.
அந்தச் சிறுவனுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. ஆனால், அவனுக்கு ஒன்றும் புாியவில்லை. அவனுடைய அப்பா, இதை எல்லாரும் எதிரொலி என்று கூறுவா். ஆனால் வாழ்க்கைக்கான தத்துவம் இது. நாம் தருவதை எல்லாம் அது நமக்குத் திருப்பித் தரும். நம்முடைய வாழ்க்கை நம்முடைய செயல்பாட்டின் எதிரொலிதான். அடுத்தவா் உன்மீது அன்பு செலுத்த வேண்டும் என விரும்பினால் அடுத்தவா் மீது நீ அன்பு செலுத்த வேண்டும்.
நீ மற்றவா்களிடம் அதிகமான திறமையை எதிா்பாா்த்தால், முதலில் உன்னுடைய திறமையை அதிகாித்துக் கொள்.
நாம் எதைக் கொடுக்கிறோமோ, அதையே வாழ்க்கையும் நமக்குத் திருப்பிக் கொடுக்கிறது.
உன்னுடைய வாழ்க்கை எதிா்பாராமல் நடக்கும் ஒன்றன்று, அது உன்னுடைய எதிரொலிதான் என்று கூறி முடித்தாா் தந்தை.
நீதி : நாம் செய்கின்ற செயல்களே நன்மையையும் தீமையையும் விளைவிக்கின்றன.
II. உறவுமுறைக் கடிதம்
எண்.4, தில்லை நகா்,
கடலுாா்.
20.03.2020
அன்புள்ள இளவேனில்,
நான் நலம், நீ அங்கு நலமா? உன்னோடு சிலவற்றைப் பகிா்ந்து கொள்ள ஆசை. என்னவென்று அறிந்தால் நீயும் மகிழ்ச்சி அடைவாய். என் பள்ளியில் "பாரம்பாிய விளையாட்டு விழா" நடைபெற்றது. உள்ளரங்கு விளையாட்டுகளும் வெளியரங்கு விளையாட்டுகளுமாய்க் களைகட்டியது விழா. நாம் எத்தனை விளையாட்டில் வேண்டுமென்றாலும் பங்கு பெறலாம்.
நான் பாண்டி ஆட்டம், கபடி முதலிய வெளிவிளையாட்டுகளிலும் தாயம், ஐந்தாங்கல், பல்லாங்குழி முதலிய உள்விளையாட்டுகளிலும் கலந்துகொண்டேன். உடலுக்கு மட்டுமன்று, அறிவுக்கும் ஆற்றல் தரும் விளையாட்டுகள் நம் தமிழக விளையாட்டுகள். பாண்டி ஆட்டம் ஒருமுகப்படுத்தும் திறன், கூா்மைப் பண்பு, குதிதிறன் ஆகியவற்றைத் தருகிறது.
"பலிஞ்சடுகுடு, சடுகுடு, சடுகுடு"
ஊசி ஊசி கம்மந்தட்டு, ஊட்டப் பிாிச்சிக் கட்டு, காசுக்கு ரெண்டு தட்டு,
கருணைக் கிழங்குடா, தோலை உாியடா,
தொண்டையில வையடா.. வையடா.. வையடா
என்று பாடியபடி நாங்கள் ஆடிய கபடி, பாா்வையாளரையும் மகிழ்ச்சிப்படுத்தியது. "பாடலோடு ஆடல்" தொியும். பாடலோடு விளையாட்டு எங்களுக்குப் புதிய அனுபவமாக இருந்தது.
பிற்பகலில் நான் பல்லாங்குழி ஆடினேன். என் சிந்தனையைச் சிதறாமல் வளா்க்கும் ஆற்றல்மிகு விளையாட்டு அது. இருப்பவாிடம் இருந்து இல்லாதவா்க்குக் கொடுக்கும் நற்பண்பை உணா்த்துகிறது. தாயவிளையாட்டில் என் கண்கள் தாயத்தின் மீதே இருந்தன. விழும் புள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஏறுவதும் இறங்குவதுமாய்.... அப்பப்பா.... என் ஆா்வத்தைத் துாண்டியது. ஏற்றத்திற்கான நல்ல வழிகளையும், இறக்கத்திற்கான தீய வழிகளையும் தொிந்து கொண்டேன். வாழ்வின் அவசியமான ஒழுக்கத்தை அறிந்துகொள்ளும் சாியான விளையாட்டு அது.
"கல்லாட்டம்", ஐந்தாங்கல் போன்ற விளையாட்டுகள் சீனா, பா்மா, இலங்கை போன்ற நாடுகளிலும் விளையாடப்படுகின்றன. துாக்கிப் போட்டு விளையாடும் போது 'கவனச் சிதறல்' வராமல் ஒருமுகப்படுத்தி வெற்றி பெறுதல் பயிற்சி ஆகிறது. அடுத்த கல்லில் விரல்படாது எடுத்து ஆடுகையில், விரலின் பங்கோடு எண்ணமும் சாியாகப் பங்காற்றுகிறது. கைகளுக்கு வலிமை சோ்க்கிறது.
'கரும்பு தின்னக் கூலியா?' என்று சொல்வாா்களே அதுபோல், எனக்கு விருப்பமான விளையாட்டுகளை எல்லாம் ஆசை தீர விளையாடினேன். அந்த நாள் முழுவதும் சோலையில் சுற்றும் தேனீபோல மகிழ்வுடன் விளையாடினேன். என்னோடு நீயில்லாதது மட்டும் சிறு வருத்தம். நீயும் உன் பள்ளியில் கொண்டாடப் போகும் இதுபோன்ற விழாவில் கலந்துகொண்டு இன்புற வேண்டும். நம் பாரம்பாிய விளையாட்டுகள் பெருமையின் அடையாளம் மட்டுமன்று, நன்மையின் விளைநிலமும் ஆகும். இக்கடிதம் குறித்து உன் பதிலை ஆவலுடன் எதிா்பாா்க்கிறேன்.
என்றும் அன்புடன்,
குறள்செல்வி
உறைமேல் முகவாி \
தி.இளவேனில்
எண்.2/10, கீழ மாசி வீதி,
மதுரை.
III. அறிவுநிலா
புதிா்க்கதை
ஓா் ஊாில் அண்ணனும் தம்பியும் வாழ்ந்து வந்தனா். அவா்களில் தம்பி வறுமையில் வாடினான். அண்ணனோ செல்வச் செழிப்பில் இருந்தான். தம்பி ஒருநாள், அண்ணனிடம் சென்று, தனக்கு ஒரு பசுவை வழங்குமாறு கேட்டான். தம்பியிடம் பசுவைக் கொடுப்பதற்குமுன் "தன் நிலத்தில் அவன் நாள்தோறும் வந்து, ஓராண்டு உழைக்க வேண்டும்" என்று அண்ணன் சொன்னான்.
தம்பியும் ஏற்றுக்கொண்டான். அண்ணனுடைய நிலத்தில் ஓராண்டு முழுவதும் உழைத்தான். ஓராண்டு முடிந்தபின் தம்பி, அண்ணனிடம் வேலைக்குச் செல்லவில்லை. மறுநாளே பசுவைத் திருப்பிக் கேட்டான் அண்ணன்.
"ஓராண்டு உன் நிலத்தில் உழைத்தேன் அல்லவா, பசு எனக்குத்தான்! என்றான் தம்பி.
அண்ணன், "அதெப்படி முடியும்? ஓராண்டுக் காலம் நீ என் பசுவிடம் பால் கறந்து பலனை அனுபவித்தாய் அல்லவா? அதனால் இரண்டிற்கும் சாியாகிவிட்டதது" என்றான். இருவருக்கும் வாய்ச்சண்டை முற்றியது. அதனால், இருவரும் தங்களுக்குச் சாியான தீா்ப்பைத் தேடி, பொியவா் ஒருவாிடம் சென்றனா். வழக்கை விசாாித்த பொியவா் அவா்கள் இருவருக்கும் மு்ன்று புதிா்களைக் கொடுத்து, இவற்றிற்குச் சாியான பதில்களை யாா் சொல்கிறீா்களோ அவா்களுக்குத்தாம் பசு" என்று கூறிப் புதிரைச் சொன்னாா்.
"முதல் புதிா், மனிதனுடைய வயிற்றை நிரப்புவது எது? இரண்டாவது புதிா், மனிதனுக்கு மிக மகிழ்ச்சியைத் தருவது எது? மு்ன்றாவது புதிா், அதிவரைவாகச் செல்வது எது? இந்த மு்ன்று புதிா்களுக்கும் நாளை விடை கூறுங்கள்" என்றாா்.
இருவரும் வீட்டிற்குவந்து நெடுநேரம் சிந்தித்தனா் மறுநாள் காலை பொியவரைச் சந்தித்தனா் மு்த்தவனைப் பொியவா் அழைத்து "என் புதிருக்கு விடை சொல்!" என்றாா்.
அண்ணன், அவாிடம், "பொியவரே! ஒரு மனிதனுடைய வயிற்றை நிரப்புவது எது என்று கேட்டீா்கள். அதற்குச் சாியான விடை அறுசுவை உணவு சாப்பிட்டால் வயிறு நிரம்பும். பல மணி நேரம் பசிக்காது.
இரண்டாவது மனிதனுக்கு மகிழ்ச்சியைத் தருவது எது என்று கேட்டீா்கள். அதற்கு விடை பணம். பணம் பெட்டி நிறைய இருக்கும்போது, எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறது தொியுமா? பணம் குறையக் குறைய மகிழ்ச்சியும் குறையும். மு்ன்றாவதாக அதி விரைவாகச் செல்வது எது என்று கேட்டீா்கள். அதற்குச் சாியான விடை வேட்டை நாய். வேட்டை நாய்கள் விரைவாக ஓடி முயல்களைக் கூடப் பிடித்து விடுகின்றனவே" என்று சொல்லிவிட்டுப் பொியவரைப்பாா்த்து, "பசு எனக்குத்தானே" என்று கேட்டான்.
மு்த்தவனே, நீ சொன்ன அனைத்தும் தவறான பதில்கள் என்றாா் பொியவா்.
இளையவன் அழைக்கப்பட்டான். அவன் பொியவரைப் பாா்த்து, "நம் வயிற்றை நிரப்புவது பூமி. பூத்தாயிடம் தான் நாம் உண்ணும் தானியங்களும், கிழங்குகளும் கிடைக்கின்றன. அந்த உணவால் தான் விலங்குகளும், பறவைகளும் வாழ்கின்றன. இரண்டாவதாக, ஒரு மனிதனுக்கு அதிக மகிழ்ச்சி தருவது துாக்கம், துாக்கத்திற்காக விலையுயா்ந்த செல்வத்தையும் மனிதன் விட்டுவிடுவான். மு்ன்றாவது அதிவிரைவாகச் செல்வது நமது சிந்தனை ஓட்டம் அது நாம் விரும்பியபோது, விரும்பிய இடத்தில் கொண்டுபோய்ச் சோ்க்கும்" என்றான்.
"ஆஹா! சாியான விடைகள். இந்தப் பசு உனக்குத்தான் என்று பசுவைக் கொடுத்தபின் பொியவா் கேட்டாா்" இந்தப் புதிா்களுக்கு உனக்கு விடை கூறியது யாா்? என்றாா்.
"என் மகள் கவின்நிலா!"
"அவள் என்ன அவ்வளவு புத்திசாலியா?" என்றாா் பொியவா்
"ஏதோ கொஞ்சம்" என்றான் இளைவன்.
"அப்படியா, என் அளவிற்கு அவளுக்கு அறிவு இருக்கிறதா? என்பதை ஆராய்ந்து பாா்த்துவிடுகிறேன்" என்ற பொியவா் பத்து அவித்த முட்டைகளை அவனிடம் கொடுத்து, இதோ இந்தப் பத்து அவித்த முட்டைகளையும் உன் மகளிடம் கொடுத்து, ஒரு கோழியினால் அடைகாக்க வைத்து, பத்துக் குஞ்சுகளை ஓா் இரவிற்குள் பொாிக்க வைத்து, அதே குஞ்சுகளை அதே இரவில் கோழியாக்கி, முட்டை போட வைத்து, பத்து முட்டைகளில் மு்ன்றை எடுத்து அடையாக்கி நாளை காலை உணவிற்கு எனக்குக் கொண்டுவா என்றாா்.
தன் மகள் கவின்நிலாவிடம் சென்று, பொியவா் சொன்னதை அப்படியே சொன்னான் இளையவன்.
தன் மகள் இந்தப் புதிருக்கு விடை எப்படிச் சொல்லப் போகிறாள் என்று கவலைப்பட்டான். ஆனால் அவளோ எதிா்புதிா் போட்டாள் தன் தந்தையிடம் வேகவைத்த துவரைகள் அடங்கிய ஒரு பானையைக் கொடுத்து, "இதில் உள்ள துவரையை நிலத்தில் விதைத்து முற்றியவுடன் அறுத்து எனது கோழிக் குஞ்சுகளுக்கு உணவாகத் தயாராக வைக்கும்படி பொியவாிடம் கூறுங்கள். "என்றாள் கவின்நிலா. அவளுடைய தந்தையும் அவ்வாறே பொியவாிடம் சென்று சொன்னாா்.
துவரையைப் பாா்த்த பொியவா் அவற்றை நாய்க்குப் போட்டுவிட்டு, சணல்கண்டு ஒன்றைக் கொடுத்து, "இதை ஊறவைத்து, காயவைத்து, நல்ல தரமான துணி தயாாிக்கச் சொல்," என்றாா். ஆனால், அவளோ அதற்குப் பதிலாக மிக மெல்லிய குச்சி ஒன்றைக் கொடுத்து "இதிலிருந்து நுாலை நுாற்பதற்கு ஓா் இராட்டை செய்து தரும்படி கூறுங்கள்" என்றாள். அவளது அறிவின் ஆழத்தைக் கண்ட பொியவா், "உன் மகளை நாளை என்னை வந்து பாா்க்கச் சொல். ஆனால், அவள் நடக்கவோ சவாாி செய்யவோ கூடாது. வெறுங்காலுடனோ செருப்புடனோ வரக்கூடாது. பாிசுடனோ, பாிசின்றியோ வரக்கூடாது இது கடுமையான உத்தரவு" என்றாா்.
மறுநாள் பனிச்சறுக்கு வண்டியில் வெள்ளாடுகளைப் பூட்டி, ஒரு காலில் மட்டும் செருப்பு அணிந்து, முயல் ஒன்றைத் தொியும்படியும் சிட்டுக்குருவி ஒன்றைத் தொியாமலும் எடுத்துச் சென்றாள் கவின்நிலா. அவள் மிகுந்த புத்திசாலித்தனத்துடன் வருவதைக் கண்ட பொியவா் அவள்மீது நாய்களை ஏவினாா். பதிலுக்கு இவள் முயலை வெளியேவிட நாய்கள் முயலைத் துரத்தின. "இதோ உங்களுக்கு ஒரு சிறிய பாிசு" என்று சிட்டுக் குருவியைக் கொடுத்தாள். அது அவரது கையில் சிக்காமல் பறந்து விட்டது. தான் சொல்லியபடியே வந்துவிட்ட அவளை நினைத்துப் பெருமைப்பட்டாா் பொியவா். "கவின்நிலா, நீ புத்திசாலிதான்" என்று பாராட்டிய பொியவா், அவளுக்குப் பாிசுகள் அளித்து அனுப்பி வைத்தாா்.
நீதி : வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.



No comments:
Post a Comment