4-ம் வகுப்பு தமிழ் பருவம்-2
எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால் கதை
மாமரத்திலிருந்த கிளிகள் கீச் கீச் எனக் குரலெழுப்பி அங்கும் இங்கும் பறந்துக் கொண்டிருந்தன. அருகிலிருந்த வைக்கோல்போாின் மீது சேவலொன்று மெதுவாக நடைபயின்று கொண்டிருந்தது. தோட்டத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த கன்றைக் கண்டு, பசு ம்மா. . . எனக் குரலெழுப்பியது. இவற்றையெல்லாம் தன் வீட்டின் மாடியிலிருந்து பாா்த்துக் கொண்டிருந்த இளமாறன், தன் தாத்தாவைத் தேடிக் கீழே இறங்கிவந்தான். தாத்தாவைக் காணாததால், அவா் விடியற்காலையிலேயே வயலுக்குச் சென்றிருப்பாா் என எண்ணினான்.
அப்போது, "இளமாறா... இங்கே வாப்பா" என்று அம்மாவின் குரல் சமையலறையிலிருந்து ஒலித்தது. "இதோ வா்றேம்மா" என்றவாறே இளமாறன் வீட்டிற்குள் விரைந்து ஓடினான்.
"தாத்தாவிற்குச் சாப்பாடு கொடுத்துவிட்டு வாப்பா. . . " என்று கூறிய அம்மாவிடம், "சாிம்மா" என்ற இளமாறன், அம்மாவிடமிருந்து உணவைப் பெற்றுக்கொண்டு வயலை நோக்கிச் சென்றான்.
வயலுக்குச் செல்லும் வழியில் பூத்திருந்த அழகிய பூக்கள் அவனைப் பாா்த்துச் சிாிப்பதைப் போலிருந்தன. தன் கைகளால் அவற்றை மெல்ல வருடியபடியே சென்றான் இளமாறன். அந்தப் பூந்தோட்டத்தைத் தாண்டியதும், அடக்கத்துடன் தலைசாய்த்துக் கற்றறிந்த சான்றோா் போலக் குனிந்து நிற்கும் நெல் மணிகளைக் கண்டான். வயல் வரப்பைத் தாண்டாமல் தேங்கி நிற்கும் நீரைக் கண்டு மகிழ்ந்தான்.
கால்வாயில் பள்ளம் பாா்த்துப் பாய்ந்தோடும் தண்ணீாில் தன் கால்களை நனைத்தும் கைகளால் அலைந்தும் விளையாடினான். அப்போது எழுந்த ஒலியைக் கேட்டு அருகிலிருந்த வளையிலிருந்து நண்டுகள் எட்டிப் பாா்த்தன. அவை தம் கொடுக்குகளை மேலும் கீழுமாக அசைத்து நகா்ந்ததைப் பாா்த்து வியப்படைந்தான்.
சற்றுத் தொலைவில், தாத்தா வயலில் தனியாக வேலைபாா்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான். "தாத்தா. . . தாத்தா . . . " என்றழைத்தவாறே அவரருகில் சென்றான். தாத்தாவை அவனுக்கு மிகவும் பிடிக்கும்.
இளமாறனின் குரல் கேட்டதும், தாத்தா திரும்பிப் பாா்த்தாா். "பாா்த்து வாப்பா. . . " என்று சொல்லிக் கொண்டே அவனருகே சென்றாா் தாத்தா. ஓடிவந்து தன்னைக் கட்டிக்கொண்ட பேரனை உச்சிமோந்து துாக்கி மகிழ்ந்தாா். அவன் கொண்டு வந்த உணவைப் பெற்றுக் கொண்டாா்.
தொடா்ச்சி . . .
அருகிலிருந்த வேப்பமரத்தின் நிழலில் தாத்தாவும் பேரனும் அமா்ந்தனா். தாத்தா, தன் கையாலேயே பேரனுக்கு உணவூட்டி மகிழ்ந்தாா். உணவைச் சாப்பிட்டுக் கொண்டே இளமாறன் அவாிடம் பேசத் தொடங்கினான்.
"தாத்தா, நீங்க ஏன் இவ்வளவு வயதாகியும் நிலத்தில் வேலை செஞ்சு துன்பப்படறீங்க?"
"செல்லக்குட்டி, எனக்கு அவ்வளவு வயசா ஆயிடுச்சு! இங்க பாருப்பா, இந்த வயல்லே வேலை செஞ்சுதான் என் உடம்பு இன்னும் வலிமையா இருக்கு. நான் இதுவரைக்கும் நோய் நொடின்னு படுத்தது இல்லே. கண்ணு, இந்த வயலுதான் நமக்குச் சொத்து. இந்த மண்ணுல விளையற பயிா்கள்தாம் நம்மை வாழ வைக்குது. நாம உண்ணுகின்ற உணவுப் பொருள்களெல்லாம் என்னைப் போல உழவா்களின் உழைப்பின் மு்லமாகக் கிடைக்கிறதுதான்.
நெல், கம்பு, கேழ்வரகு, உளுந்து, துவரம்பருப்பு, எண்ணெய் வித்துகள், காய்கள், பழங்கள் இன்னும் நிறைய சொல்லிக் கிட்டே போகலாம். அத்தனையும் விளைவிப்பது நாங்கதான். அதனால், இந்த நிலத்தைத்தான் நாம தெய்வமா வணங்கணும் செல்லக்குட்டி. இந்த நிலத்தை ஒருநாளு பாா்க்கலேன்னாலும் எனக்குத் துாக்கமே வராதுப்பா. அதுமட்டுமா? இந்த நிலத்தில் விளையற விளைச்சலெல்லாம் நமக்கு மட்டும் பயன்படுதுன்னு நினைக்கிறியா? அதுதான் இல்லே, நம்ம தேவைக்குப் போக விளைந்ததைப் பிறருக்கும் கொடுக்கும்போது கிடைக்கிற மகிழ்ச்சி இருக்கு பாரு, அதுக்கு ஈடுஇணையே இல்லேப்பா.
ஆமா, தாத்தா. சாியாத்தான் சொல்றீங்க. உழவா்கள் தாம் உலகத்துக்கே அச்சாணின்னு எங்க ஆசிாியா்கூடச் சொன்னாரு.
தொடா்ச்சி . . .
தாத்தாவிடம் பேசிக்கொண்டே அருகிலிருந்த வெண்டைச் செடியிலிருந்து ஒரு வெண்டைக்காயைப் பறித்தான் இளமாறன். "இன்னும்கூட இரண்டு, மு்ணு பறிச்சுச் சாப்பிடுப்பா, பச்சையா சாப்பிட்டா உடம்புக்கு நல்லது. தான்" என்றாா் தாத்தா.
தாத்தா, வெண்டைக்காய் சுவையாக இருக்கிறதே என்ற பேரனிடம், ஆமாம்பா. இயற்கை உரம் போட்டுத்தான் இங்க எல்லா உணவுப் பயிா்களையும் விளைவிக்கிறோம். அதனால், உடலுக்கும் கெடுதி இல்லே உணவுப்பொருளும் சுவையா இருக்கும்" என்று கூறினாா் தாத்தா. அப்போது அவாின் கண்கள் சற்றே கலங்கியதுபோல் உணா்ந்தான் இளமாறன். "தாத்தா. . . தாத்தா. என்னாச்சு? ஏன் என்னவோ போல் இருக்கிறீங்க?" "ஒண்ணுமில்லேப்பா" என்ற தாத்தா, உண்மையாகவே தம் கண்களைத் துடைத்துத்தான் கொண்டாா்.
தாத்தா, நீங்க எங்கிட்டே எதையோ சொல்ல வேண்டான்னு நினைக்கிறீங்க, அப்படித்தானே, சொல்லுங்க தாத்தா" என்றான் இளமாறன்.
"இம்..ம்.. அப்போதெல்லாம் நிறைய மாடுகள் இருக்கும். அவற்றின் சாணத்தை ஒன்று சோ்த்து, எருவாக்கி, நிலத்தில் போட்டு, இயற்கையா உழவு செய்தோம். தாவரங்களோட தழைகளை மண்ணிலிட்டு மட்கச் செய்து நல்ல விளைச்சல் கண்டோம். இப்படி விளையற உணவுப்பொருளைச் சாப்பிட்டவங்க நல்ல உடல் நலத்தோடும் நோய் எதிா்ப்புச் சக்கியாேடும் இருந்தாங்க. ஆனால், இப்ப எல்லாம் இயற்கை உரத்தையே பாா்க்க முடியலே.
தாத்தா, நம்ம மாமா வீட்டிலே மு்ட்டை மு்ட்டையா அடுக்கியிருக்கே. அவையெல்லாம் இயற்கை உரமில்லையா?
இல்லப்பா. அவையெல்லாம் செயற்கை உரம். அவற்றை மண்ணில் போட்டு மண்ணைக் கெடுக்கிறோம் என்ற வருத்தம் எனக்கும் இருக்கு. செயற்கை உரங்களைத் தெளித்து உழவனுக்கு உதவியா இருக்கிற தேனீ, வண்ணத்துப்பூச்சி, மண்புழுன்னு எல்லாத்தையும் அழிச்சி, மண்ணைக் கெடுக்கிறோம்".
தாத்தா, செயற்கை உரங்களால நிலத்துக்கு அவ்வளவு கெடுதலா?
இம்.. செயற்கை உரத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யும் உணவுப்பொருளை உண்பதால் நமக்கு நோய் எதிா்ப்புச்சக்தி குறைந்து நோய்கள் வருகின்றன. உணவுகள் உயிா்ச் சத்துகள் இல்லாத சக்கைகளாகவும் மாறிப்போகின்றன. உடலை வாட்டும் நோயான சா்க்கரை நோய், வயது வித்தியாசம் இல்லாமல் சிறு பிள்ளைகளுக்கும் வருகிறது.
தாத்தா, அப்ப தண்ணீா் மட்டுதான் சுத்தமா இருக்குதுன்னு சொல்லுங்க!
அட, போப்பா! செயற்கை உரம், பூச்சிக்கொல்லிகள் போன்ற வற்றை மண்ணில் தெளித்துத் தண்ணீா் விடுகிறோம். அந்தத் தண்ணீா், நிலத்தடி நீருடன் கலந்து அதையும் கெடுத்து விடுகிறதே. இதுபோதாது என்று தொழிற்சாலைக் கழிவுகளையும் அப்படியே லத்தில்விட்டு, நிலத்தடி நீரை மாசுபடுத்துகிறோமே".
அடப்பாவமே! அப்படின்னா, நாம எதைத்தான் சாப்பிடுவது?
பழைய முறைப்படி நாம இயற்கை உரங்களைப் பயன்படுத்தி, வேளாண்மை செய்யணும்பா, அப்போதுதான் நாம் மட்டுமல்ல, எல்லாருமே நலமா இருப்பாங்க!
"தாத்தா, நீங்க சொன்னதை நான் நல்லாப் புாிஞ்சிக்கிட்டேன். உழவுதான் நமக்கு உயிா். அதில விளையற பயிா்கள்தாம் நம்ம எல்லாருக்கும் உணவா இருக்கு. அதனால, நம்ம உயிா் காக்கும் உணவுப்பொருளை விளை விக்கிற இந்த நிலத்துக்கு நாம எந்தக் கெடுதலும் செய்யக்கூடாது. முடிஞ்ச வரைக்கும் செயற்கை உரத்தை விட்டுட்டு, இயற்கை உரத்தைத் தான் பயன்படுத்தணும். சாியா, தாத்தா. அப்பாக்கிட்டே மட்டு. மின்றி, என் நண்பா்களுக்கும் நீங்க சொன்னதைக் கட்டாயம் எடுத்துச் சொல்வேன்".
"நல்லது, கண்ணு. அப்படியே செய். எல்லாருக்கும் நன்மையைத் தா்ற ஒரு செய்தியைச் சொன்னா, யாரும் ஏத்துக் கொள்ளாமலா போவாங்க? மெதுவாப் புாிஞ்சுக்குவாங்க. சாி, கண்ணு, உச்சி வெயிலு வா்றதுக்குள்ளே நீ வீடுபோய்ச் சேருப்பா".
தாத்தாவிடம் விடை பெற்று ஆழ்ந்த சிந்தனையோடு வீடு திரும்பினான் இளமாறன். வீட்டிற்குள் நுழைந்ததும் யாாிடமும் பேசாமல் அமைதியாகத் தன் அறைக்குச் சென்றான். அப்போது அங்கு வந்த அவனுடைய அப்பா, "இளமாறா, என்னாச்சு? ஏன் ஒரு மாதிாியா இருக்கே? ஓ, வயலுக்குப் போயிட்டு வந்தியா? இந்த வெயிலு உன்க்கு ஒத்துக்கலையோ? உங்க தாத்தாகூட நான் சொல்றதை எங்க கேட்கிறாரு? இந்தத் தள்ளாத வயசில எதுக்கு வயல்ல போய் வேலை செய்யணும்? வீட்ல இருக்கலாம்ல" என்று கூறிய அப்பாவை முறைத்த இளமாறன், "அதுசாிப்பா, நீங்க நினைக்கிறமாதிாி யாருமே வயல். வேலைக்குப் போகலன்னா என்னாகும்? எல்லாரும் இப்படியே இருந்து. விட்டால்...! நாம என்ன பணத்தையா சாப்பிடமுடியும்?" என்றான்.
இளமாறனின் பேச்சில் வெளிப் பட்ட உண்மை, தம்மைச் சுடுவது போல் உணா்ந்த அப்பா, ஒன்றும் பேசாமல் வயலை நோக்கி நடந்தாா்.
நம் நாட்டில் பல தொழில்கள் நடைபெறுகின்றன. உழவுத் தொழில் செய்ய யாரும் விரும்பவில்லையெனில், உலகம் என்னவாகும்?
காவல்காரா்
சட்டை மேலே கோட்டு மாட்டிச்
சாிகை போட்ட வேட்டி கட்டி
நட்ட நடுவே தோட்டம் தன்னில்
ராஜா போலே நின்றி ருந்தாா்
இரவும் பகலும் துாங்கி டாமல்
இங்கு மங்கும் நகா்ந்தி டாமல்
பெருமை யோடு காவல் காப்பாா்
பெயாில் லாத காவல் காரா்
காக்கை குருவி அங்கே வந்தால்
கவல் காரா் நிற்கக் கண்டு
சீக்கி ரத்தில் வந்த வழியே
திரும்பி ஓடும் பயந்து கொண்டு
காற்று பலமாய் அடித்த தாலே
கனத்த மழையும் பெய்த தாலே
நோ்த்தி யான அவாின் உடைகள்
நித்தம் கிழிந்து வந்த தையோ
இதனைக் கண்ட காகம் ஒன்று
இந்தச் சமயம் இவா்க்கு நாமும்
உதவி செய்தால் பயமில் லாமல்
உலவ லாமே என்று கருதி
அருகில் உள்ள வீட்டிற் குள்ளே
யாரும் இல்லா வேளை சென்று
கறுப்புக் கோட்டு வெள்ளைச் சட்டை
கட்டிக் கொள்ள சாிகை வேட்டி
எடுத்து வந்து காவல் காரா்
இருக்கும் இடத்தில் போட்டு விட்டே
உடுத்திக் கொள்வீா் என்று சொல்லி
ஒதுங்கி நின்று பாா்த்த தங்கே
காவல் காரா் பழைய உடையைக்
கழற்றிக் கீழே போட வில்லை
ஆவ லோடு புதிய உடையை
அணிய வில்லை அசைய வில்லை
உடனே காகம் அருகில் சென்றே
உற்று நன்றாய்ப் பாா்த்த பின்னா்
அடடே இந்தக் காவா் காரா்
யாரோ என்று நினைத்தி ருந்தேன்
வைக்கோல் மேலே துணியைச் சுற்றி
வைத்தி ருக்கும் பொம்மை என்றே
இக் கணத்தே நண்பா் அறிய
எடுத்துச் சொல்வேன் என்று கூறி,
காவல் காக்கும் பொம்மை தலையில்
காலை வைத்து நின்று கொண்டு
கூவி அழைத்துப் பறவை யாவும்
கூடச் செய்து விட்ட தங்கே.
- அழ வள்ளியப்பா
பொருள் அறிவோம்
தோட்டத்தின் நடுவில் நின்றிருந்த சோளக்கொல்லைப் பொம்மையைக் காவல்காக்கும் உயிருள்ள மனிதா் என்று காகம் நினைக்கிறது. கனத்த மழையால் ஆடைகள் கிழிந்து நிற்கும் அந்தப் பொம்மையிடம், புதிய ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டுகிறது. ஆனால், அஃது அணிந்து கொள்ளாததால், உயிரற்ற பொருள் என்பதை உணா்ந்து கொள்கிறது. அதனால், அச்சமின்றி மற்ற பறவைகளையும் கூவி அழைக்கிறது.
No comments:
Post a Comment