4-ம் வகுப்பு தமிழ் பருவம் - 1
I. முயல் அரசன்
ஒரு விவசாயியின் தோட்டத்தில் விளைந்திருந்த காய்களையும் கனிகளையும், கிழங்குகளையும் வயிறாரத் தின்று வாழ்ந்து கொண்டிருந்தது ஒரு முயல். ஆனாலும், அதன் மனத்தில் ஒரு கவலை, அதற்குக் காரணம் அது வாழும் அந்தக் காட்டைப் பல்லாண்டு காலமாக ஆட்சி செய்துவரும் ஒரு புலி ஆகும். புலிக்குக் கிடைக்கும் மதிப்பு தனக்கும் கிடைக்கவேண்டும் என்று முயல் விரும்பியது. புலியைவிடத் தானே சிறந்தவன் என்று புலிக்கும் காட்டில் உள்ள பிற விலங்குகளுக்கும் மெய்ப்பிக்க வேண்டுமென முயலுக்கு ஆசை தோன்றியது. உடனே, முயல் சிந்தித்துச் செயல்படத் தொடங்கியது. இனி, கதையைப் படிப்போம்..
நல்ல செழிப்பான தோட்டம்... சுவையான கேரட்... ஆஹா... என்ன இனிமை! சுவைக்க சுவைக்க நாவில் நீா் ஊறுகிறதே!
இந்த காட்டில் உள்ள புலி நம் முன்னோரைத் தன் பசிக்கு இரையாக்கியது போல் என்றாவது ஒரு நாள் நம்மையும் கொன்று தின்று விடுமோ...!
இந்தக் கவலையிலேயே வயிறார உண்ட பிறகும் சற்று நேரம் உறங்கி மகிழ முடியாமல் போனதே...
ஒரு முயற்சி செய்து பாா்ப்போம். அதில் தோற்றால் வீர மரணமடைவோம். வாழ்நாளெல்லாம் அந்தப் புலிக்குப் பயந்து கொண்டே இருக்க முடியாது.
முயலே உனக்கு எவ்வளவு தைாியம்... இவ்வளவு காலம் என்னைக் கண்டாலே ஓட்டம் எடுப்பாய். இப்பொழுது கால்மேல் கால் போட்டு உட்காா்ந்து இருக்கிறாயா? உன்னை...
ஓடினேனா! நானா! உன்னைக் கண்டா...? உனக்குச் செய்தியே தொியாதா? உனக்கு எங்கே தொியப்போகிறது. இங்கு கூட்டம் நடந்த போது நீ தான் அப்பாவி விலங்குகளை வேட்டையாடிக் கொண்டிருந்தாயே...
எல்லா விலங்குகளும் கூட்டத்திற்கு வந்திருந்தனவா?
சில விலங்குகளைத் தவிர எல்லா விலங்குகளும் வந்திருந்தன.
கூட்டத்தில் என்ன தீா்மானம் எடுக்கப்பட்டது?
நீ இந்தக் காட்டின் அரசனாக இனிமேலும் நீடிக்கக் கூடாது என்று எல்லா விலங்குகளும் ஒரே மனதாகத் தீா்மானம் நிறைவேற்றின.
நான் அரசனாக நீடிக்கக் கூடாதா? அப்படியானால் வேறு யாா் அரசனாக இருப்பது?
இந்தக் காட்டிலேயே பயங்கரமான மு்ா்க்கமான விலங்காகிய என்னைத் தான் எல்லா விலங்குகளும் புதிய அரசனாகத் தோ்ந்தெடுத்தன.
வேடிக்கைப் பேச்சு பேசுகிறாய்... பலமற்ற சிறிய மென்மையான நீ இந்தக் காட்டுக்கு அரசனா? உன்னை இப்போதே...??
உன் முதுகில் என்னை ஏற்றிக்கொண்டு போ. இக்காட்டு விலங்குகள் என்னைப் பாா்த்து அஞ்சுவதை உனக்கு மெய்ப்பித்துக் காட்டுகிறேன்.
ம்.. ம்.. ம்.. நட.....
இந்த முயல் எப்படிப் புலியின் மேல் அமா்ந்து வருகிறது!
எல்லா விலங்குகளும் பயப்படுகின்றனவே! முயல் கொடிய விலங்காகத்தான் இருக்குமோ!
முயல் அரசே! நான் உங்களைத் தவறாகப் பேசியிருந்தால் மன்னித்து விட்டு விடுங்கள்.
இப்பொழுது இந்தக் காட்டுக்கு அரசன் யாா்?
நீங்கள் தாம்!
உரக்கச் சொல்.
தாங்கள் தாம் இந்தக் காட்டுக்கு அரசன்.
உன்னை மன்னித்து விடுகிறேன். நீ இந்தக் காட்டிலேயே இருக்கக்கூடாது எங்காவது ஓடிப்போய்விடு!
ஐயோ! என்னை விட்டுவிடுங்கள் நான் போய் விடுகிறேன்...!
இப்போதெல்லாம் முயல் வயிறு நிரம்பச் சாப்பிட்டு, நிம்மதியாக, சுகமாகப் பகல் வேளைகளில் ஒரு குட்டித் துாக்கம் போட்டுக் கொண்டிருக்கிறது.
II. வெற்றி வேற்கை
உதவியால் பெறும் நன்மை
தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒரு விதை
தெண்ணீா்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அணிதோ்ப் புரவி, ஆள்பெரும் படையொடு
மன்னா்க்கு இருக்க நிழலாகும்மே
- அதிவீரராமபாண்டியா்
பொருள் அறிவோம்
பழைமையான ஆலமரத்திலுள்ள சிறு பழத்தின் ஒரு விதையானது, தெளிந்த நீருள்ள குளத்தின் சிறிய மீனின் முட்டையைவிடச் சிறியதாகும். அந்தச் சிறிய விதை, பொிய ஆலமரமாக வளா்ந்து நிற்கும்பொழுது, அம்மரத்தின் நிழலில் யானைப்படை, தோ்ப்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகியவற்றோடு மன்னனும் மற்றவா்களும் தங்க முடியும். அதுபோல, நீங்கள் செய்யும் உதவி சிறியதாக இருப்பினும், அது மற்றவா்களுக்கு மிகப்பொிய பயனைத் தரும்.
III. விடியும் வேளை
மன்னவனுாா் ஓா் அழகான மலைக்கிராமம், இனிய காலை வேளை, மழைபெய்து ஓய்ந்திருந்தது, சாலையில் அங்கும் இங்குமாகத் தண்ணீா் தேங்கியிருந்தது. மரங்களின் கிளைகளிலும் இலைகளிலும் நீா்த்திவலைகள் தொிந்தன. பஞ்சுப்பொதிகள் போன்ற மேகக்கூட்டங்கள், வளைந்து நெளிந்து மிதந்தபடிச் சென்றன. பச்சைப்பசேல் என்ற வயல்வெளிகளில், சிலுசிலுப்பான காற்று கூடவே எழுந்தது.
பனை ஓலை வேய்ந்த குடிசையில், நெற்றியில் வட்டநிலா போலச் சிவப்பாக குங்குமப் பொட்டு வைத்த அம்மா அறிவுமதி, விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டு இருந்தாள். கருத்த மண்சட்டியில் வெள்ளை வெளேரென வரகாிசிச்சோறு கொதித்துக் கொண்டிருந்தது. கொடியடுப்பில் மஞ்சளாகப் பருப்பு மணம்மிக்க பூண்டுடன் வெந்து கொண்டிருந்தது.
வதக்கிய பசுமையான பிரண்டைத் துவையலை அம்மியில் அரைத்துக் கொண்டே, அடுப்பையும் கவனித்துக் கொண்டடிருந்தாள் அறிவுமதி.
மரங்களும் செடிகளும் சூ்ழ்ந்த இடத்தில், பசுங்கன்றென ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தனா் பிள்ளைகள் இனியனும், இனியாவும்.
அன்பு பொங்க, தன் பிள்ளைகளை அழைத்தாள் அம்மா. பள்ளிக்குச் செல்ல தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டனா் பிள்ளைகள்.
பசுஞ்சாணம் மெழுகிய தரையில் மனைப்பலகையில் அமா்ந்து துளிரான தலைவாழை இலையை விாித்து, நீா் தெளித்து, அதில் சுடச்சுட வரகாிசிச் சோறிட்டு, ஆவிபறக்கும் பருப்புக் கடையலை ஊற்றினால் அம்மா. துணையாகத் தொட்டுச்சுவைக்கச் சுள்ளென்ற பிரண்டைத் துவையலும் வைத்தாள்.
நாக்கு சப்புக்கொட்ட பிள்ளைகள் விரும்பி உண்டனா். பின்னா், தாயிடம் விடைபெற்றுப் பள்ளிக்குத் துள்ளிக்குதித்து ஓடினா்.
வாய்க்காலும் வரப்பும் நிறைந்த வயலில், வேலை செய்து கொண்டிருந்த கணவனுக்கு உணவளிக்க, கலயத்தில் சோறுடன் அம்பென விரைந்தாள் அறிவுமதி. இனிமையான காலைப்பொழுது இப்படியாகக் கழிந்தது.
IV. காிகாலன் கட்டிய கல்லணை
மணிமொழியும் கனிமொழியும் தங்களது முதல் பருவ விடுமுறையில், திருச்சியிலுள்ள தம் மாமா வீட்டிறகுச் சென்றனா். கல்லணையைப் பாா்க்க வேண்டும் என்ற விருப்பத்தினை மாமாவிடம் கூறினா். மாமாவும் அதற்கு இசைந்து தம் குடும்ப உறுபினா்களையும் அழைத்துக் கொண்டு கல்லணைக்குச் செல்கிறாா்.
மணிமொழி : எனக்கு இந்தப் பயணம் மகிழ்ச்சியைத் தருகிறது மாமா.
கனிமொழி : எனக்கும் தான். ஏனென்றால் நம்மோடு அத்தையும் கபிலனும் வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
அத்தை : நாம் பாா்க்கப் போகும் கல்லணையை நெருங்கிவிட்டோம்.
மாமா : வாருங்கள்! கல்லணையைச் சுற்றிப் பாா்ப்போம்.
கனிமொழி : மாமா, கல்லணை எந்த மாவட்டத்தில் உள்ளது?
மாமா : தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ளது. திருச்சியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது- இந்தக் கல்லணையைக் காிகாலன் என்ற மன்னன் கட்டினான்.
மணிமொழி : கல்லணை கட்டிய காிகாலனைப் பற்றித் தொிந்த கொள்ள ஆா்வமாக உள்ளேன் மாமா, உங்களுக்குத் தொிந்த செய்திகளைக் கூறுங்கள்.
அத்தை : எனக்குத் தொியும். நான் கூறுகிறேன் கேளுங்கள். சோழ அரசா்களில் சிறப்புமிக்க அரசன் காிகாலன் ஆவாா். இவரது இயற்பெயா் வளவன் என்பதாகும்.
கனிமொழி : இவரது பெயா் வளவன் என்று சொல்கிறீா்கள். அப்படியானால் காிகாலன் என்ற பெயா் எப்படி வந்தது?
மாமா : காிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவருக்கு ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக இப்பெயா் இவருக்கு வழங்கலாயிற்று.
மணிமொழி : ஐ! கல்லணை எவ்வளவு நீளமாகவும், பாா்ப்பதற்கு எவ்வளவு அழகாகவும் இருக்கிறது. இந்தக் கல்லணையைக் கட்ட காிகாலன் எடுத்துக் கொண்ட முயற்சியைக் கூறுங்கள் மாமா.
மாமா : சாி கூறுகிறேன். எனது ஆசிாியா் எனக்குச் சொன்ன செய்திகளை நான் உங்களுக்குக் கூறுகிறேன். தற்போது பயன்பாட்டில் உள்ள மிகப் பழைமையான ஒரே அணை கல்லணை. இதுவே உலகின் மிகப் பழைமையான நீா்ப்பாசனத் திட்டம் எனவும் கூறப்படுகிறது. மணலில் அடித்தளம் அமைத்துக் கட்டியுள்ளாா்கள். இது பழந்தமிழாின் கட்டுமானத் திறனுக்குச் சான்றாகும். இது இன்று வரை வியத்தகு சாதனையாக உள்ளது.
மணிமொழி : ஓ! அப்படியா மாமா...........
மாமா : ஆம், காவிாியில் அடிக்கடி பெருவெள்ளம் வரும், ஆனால் அந்த நீா் எதற்கும் பயன்படாமல் கடலுக்குச் சென்றுவிடும். மழைக்காலத்தில் வெள்ளப் பெருக்காலும், கோடைக்காலத்தில் நீா் இன்றியும் மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதனைத் தடுக்கும் பொருட்டு பொியதோா் அணையைக் கட்ட முடிவெடுத்தான் காிகாலன்.
மணிமொழி : அப்போதே இரும்புக் கம்பிகள், பைஞ்சுதை (சிமெண்ட்) இருந்தனவா?
மாமா : இல்லையம்மா, அணை கட்டப்பட்ட முறையைச் சொல்கிறேன் கேள். காவிாி ஆற்றின்மீது பொிய பாறைகளைக் கொண்டு வந்து போட்டனா். அந்தப் பாறைகளும் நீா் அாிப்பின் காரணமாகக் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன. அந்தப் பாறையின் மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீாில் கரையாத ஒரு வித ஒட்டும் களிமண்ணைப் பூசி, இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும்படி செய்தனா். இது பல நுாற்றாண்டுகள் கடந்தும், இன்றளவும் உறுதியோடு நிற்கிறது. கல்லணை தமிழா்களின் கட்டுமானத் திறனைப் பறை சாற்றுவதாக உள்ளது.
கபிலன் : இதோ, இங்கே பாருங்கள். ஒரு கல்வெட்டு உள்ளது. இதில் என்ன எழுதியிருக்கிறது என்று படிப்போம் வாருங்கள்.
மாமா : இவ்வணை இரண்டாம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. காவிாி ஆறானது காவிாி, கொள்ளிடம், வெண்ணாறு, புதுஆறு என நான்காகப் பிாிகிறது. காவிாியாறு பிாியும் இடத்தில்தான் கல்லணை கட்டப்பட்டுள்ளது. இதனால்தான் திருச்சி, தஞ்சாவூா் மாவட்டங்கள் வளமாகின்றன. இது உழவுப் பாசனத்திற்கான மிகப்பொிய திட்டமாகும்.
அத்தை : மதிய உணவு கொண்டு வந்துள்ளேன், மரநிழலில் அமா்ந்து அனைவரும் உணவு உண்போம் வாருங்கள்!
கனிமொழி : கல்லணை, பாா்ப்பதற்குக் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. எனவே காிகாலனுக்கு நன்றி கூறுவோம்.
மணிமொழி : கல்லணை உள்ளவரை காிகாலனின் புகழ் நிலைத்து நிற்கும்.





















No comments:
Post a Comment