Kids Learning: Kids Learning Tamil

Kids Learning Tamil

 

2-வகுப்பு தமிழ் பருவம்-1


I.நானும் நாங்களும் கதை

என் பெயர் எழில்.  இவர்கள் எல்லாரும் என்னை இப்படித்தான் அழைப்பார்கள்.  இவர்களைப் பற்றிச் சொல்லட்டுமா?

எழில்மா, எழில்கண்ணு,
எழில்குட்டி, எழிலா, எழில் தம்பி,
அண்ணா, 

அம்மா எதையும் பொறுமையுடன் கேட்பார்.  எதையும் முதலில் அம்மாவிடம் தான் சொல்வேன்.

அப்பா எனக்கு நிறைய கதைகள் சொல்வார்.  அவற்றில் எல்லாம் நான் தான் கதைத் தலைவன்.

தாத்தாவுடன் வெளியில் செல்வது எனக்குப் பிடிக்கும்.  அடிக்கடி செல்வேன்.

பாட்டி நன்றாகப் பாடுவார்.  நானும் அவரோடு சேர்ந்து பாடுவேன்.

நான் செய்வதையே குட்டித் தங்கையும் செய்து காட்டுவாள்.  பார்க்கச் சிரிப்பாக இருக்கும்.

உறவினர்கள் எப்போது வீட்டுக்கு வந்தாலும் எனக்கு மகிழ்ச்சி தான்.  

எனக்கு நண்பர்களுடன்
கால்பந்து விளையாடப் பிடிக்கும்.

இது என் செல்ல நாய்க்குட்டி.  எப்போதும் என்னையே சுற்றிச் சுற்றி வரும்.  இது என்னை எப்படி அழைக்கும் தெரியுமா. . .

லொள். . .
லொள். . .







II. என் கற்பனையில். . .



            நேயன்                    நிலா

நேயன், நாம் படம் வரையலாமா?

ஓ. . . வரையலாமே!

என்ன வரையலாம்?

வீடு வரையலாமா?

சரி, எனக்கும் வீடு வரையத் தெரியும்.  வரையலாமே.

நிலா, உனக்குப் பிடித்தது போல நீ வரை. எனக்குப் பிடித்தது போல நான் வரைகிறேன்.

(இருவரும் வரையத் தொடங்குகின்றனர்) 

என் வீட்டிலிருந்து பார்த்தால் மலை தெரியும்.

என் வீட்டிற்குப் பக்கத்தில் ஆறு இருக்குமே!

என் வீட்டின் இரு பக்கமும் மரங்கள் இருக்குமே!

என் வீட்டிற்கு முன்பக்கம் அழகான பூச்செடிகள் இருக்கும்.

வீட்டிற்கு எனக்குப் பிடித்த நீல வண்ணம் தீட்டுவேன்.

என் வீட்டிற்கு மஞ்சள் வண்ணம் அடிப்பேன்.

என் வீட்டில் எனக்குப் பிடித்த பூனைக்குட்டி வரைவேனே!

என் வீட்டுத் தோட்டத்தில் வாத்துகள் இருக்குமே!

என் வீட்டு மரத்தில் ஊஞ்சல் ஆடலாம்.

என் வீட்டின் படிக்கட்டில் சறுக்கும் பலகை இருக்குமே!

நான் வரைந்து முடித்துவிட்டேன்.

நானும் வரைந்து விட்டேன்.

நீ வரைந்த வீடு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

உன் வீடும் அழகாக உள்ளது.



https://youtu.be/I1XcbXYdDjM




III. விட்டுச் செல்லாதே கதை


அடடே. . .  கயல் என்னை எடுத்துச் செல்ல மறந்துவிட்டாளே!

நானும் இங்கே தான் இருக்கிறேன்.  முத்துவும் மறந்து விட்டான்.

பாத்திமாவும் தான்.

கயல் இன்று எப்படி எழுதுவாளோ? அவள் என்னை தேடுவாளே!

ஆமாம். . . பாத்திமாவும் எழுதும் போது பிளையானால், என்னைத் தேடுவாளே!

கரிக்கோல் கூராக இருந்தால் தான் முத்துவுக்கு பிடிக்கும்.  இன்று என்ன செய்வானோ?

நம்மை விட்டுச் சென்றதை எண்ணி அவர்களும் கவலைப் படுவார்களா?

நாளை தெரிந்துவிடும்.

அடுத்த நாள். . .

எங்கே போனது?

இங்கேயும் இல்லையே.

இங்கே தான் வைத்தேன்.

என் பொம்மை போட்ட அழிப்பான் கிடைத்துவிட்டது.

ஐ. . . என் துருவி.

இதோ என் பூப்போட்ட கரிக்கோல்.

இனி அவர்கள் எதையும் மறந்துவிட்டுச் செல்ல மாட்டார்கள்.  நீங்களும் தானே.



https://youtu.be/nrpWia_gHes



IV. ஆத்திசூடி கதை

         நன்மை கடைபிடி



அதோ பார் பழம். மரத்திலிருந்து விழுகிறது. 

அட ஆமாம்!

ஆ. . .

பார்த்துப் போ.

வா. பழத்தை எடுத்து இருவரும் தின்னலாம்.

இது சரியில்லை.

வேகமாக ஓடும் திறமை எனக்கிருக்கிறது.  அதனால் பழத்தை நானே எடுத்துக் கொள்வேன்.

அச்சச்சோ! அடிபட்டு விட்டதா?

ம். . . வலிக்கிறது.

நான் பழத்தை எடுத்து வருகிறேன்.

ம். . . இந்தா.  உனக்குப் பாதி.

நன்றி நண்பா.



https://youtu.be/otAA7CLHG0A




V. ஆத்திசூடி 2- வது கதை

      நீர் விளையாடேல்



நீரில் நீந்துவது எவ்வளவு மகிழ்ச்சி!

ஆமாம்.

நான் இன்னும் உள்ளே சென்று நீந்திப் போகிறேன்.

வேண்டாம்.  அங்கே பார் எச்சரிக்கைப் பலகை.

நீச்சல் போட்டி என்றாலே எப்போதும் எனக்குத்தான் முதல் பரிசு.  தெரியும் தானே!

ஆனாலும் இது ஆபத்து.

நான் பார்த்துக் கொள்கிறேன். துணிவுள்ளவர்கள் வரலாம்.

நான் வருகிறேன்.

எனக்குப் பயமில்லை. நான் போகிறேன்.

எனக்கு பயமாக இருக்கிறது இதற்கு மேல் நான் வரவில்லை.

காப்பாற்றுங்கள். . .

காப்பாற்றுங்கள். . .



https://youtu.be/7tNXPRW71Ig



VI. ஆத்திசூடி 3- வது கதை

       நூல் பல கல்


எங்கே போறீங்க?

எங்களுக்கு மிகவும் பிடித்த இடத்திற்குப் போகிறோம்.  நீயும் வரலாமே?

எங்கே போறீங்க?

அந்த இடத்தில் இருந்துகொண்டு உலகத்தையே பார்க்கலாம்.  நீயும் வருகிறாயா?

எங்கே போறீங்க?

நம் கேள்விகளுக்கு அங்கே பதில் கிடைக்கும்.  நீயும் வரலாமே?

எங்கே போறீங்க?

அங்குச் சென்றால் அறிவை வளர்த்துக் கொள்ளலாம்.

பொது நூலகம்

அப்படி ஓர் இடமா? நானும் வருகிறேன்.



https://youtu.be/7dHEBKg-wxg



VII. ஆத்திசூடி 4- வது கதை

       நோயினுக்கு இடம் 

       கொடேல்


அம்மா நாம் எங்கே போகப் போகிறோம்?

என் நண்பர்களைப் பார்க்கப் போகலாம் வா சின்னு!

அங்கே பார் சேவல்.  அது விடியற் காலையிலேயே எழுந்து விடும். தெரியுமா?

ஏன் அம்மா?

அதோ பார் யானை.  அது விரும்பிக் குளிக்கும்.

ஏன் அம்மா?

அதோ பார் மான்.  அது சுறுசுறுப்பாய் ஓடி விளையாடும்.

ஏன் அம்மா?

சின்னு. . . அதோ பார் முயல்.  அது கீரை, காய், பழங்களை விரும்பிச் சாப்பிடும்.

ஏன்? பதில் சொல்லுங்க அம்மா.

உன் கேள்விக்கு ஒரே பதில்தான்.  இவற்றை எல்லாம் செய்தால் நோயின்றி வாழலாம்.

ஓ. . . புரிந்தது அம்மா.






No comments:

Post a Comment