Kids Learning: Kids Learning Tamil

Kids Learning Tamil

 

முதல் வகுப்பு தமிழ் பருவம்-3



1. உலா போகலாம் பாடல்


நிலா பாரு நிலா பாரு 

     நீல வானிலே 

நாம் நடக்க நாம் நடக்க

     கூட வந்திடுமே


வளரும் தேயும் வளரும் தேயும் 

     வருத்தம் ஏதுமில்லை 

வானில் மேகம் மறைத்த போதும்

     வாடி நின்றதில்லை


நிலா போல நிலா போல

     உலா போகலாம்

நீல வானில் நீல வானில் 

     நீந்தி மகிழலாம்.


https://youtu.be/LsHrus_fMnI



2. முதல் வகுப்பு தமிழ் பருவம்-3



இனிப்பு செய்யலாமா? கதை

நண்பர்கள் இனிப்பு செய்யக் கூடினர்.  கேழ்வரகு மாவு எடுத்து வருகிறது சேவல்.  வெல்லம் சுமந்து வருகிறது கட்டெறும்பு.  தேன் எடுத்து வருகிறது தேனீ.  நெய் எடுத்து வருகிறது வெட்டுக்கிளி.  தேங்காய் எடுத்து வருகிறது சுண்டெலி.  இனிப்பு தயார் ஆகிறது.  அடடே! கேழ்வரகு  உருண்டை விருந்து நாமும் சாப்பிடலாமா? 


பெயரைச் சொல்வேன் எழுத்தை அறிவேன்

செ    செடி 

செ    செருப்பு

வெ   வெங்காயம் 

வெ   வெட்டுக்கிளி 


சொற்கள் அறிவோம்

கெண்டி

செங்கல்

கட்டெறும்பு 

எண்ணெய் 

தெரு 

நெல்

பெட்டி 

மெழுகுவத்தி

வெல்லம்


https://youtu.be/r3rI5R3uEG8



முதல் வகுப்பு தமிழ் பருவம்-3


கண்ணாடி பாடல்

மெத்தப் பெரிய கண்ணாடி

     வீட்டில் என்னிடம் இருக்கிறது

நித்தம் நித்தம் அதன் முன்னால் 

     நின்றே அழகு பார்த்திடுவேன்

எப்படி எப்படி செய்தாலும் 

    என்போல் அதுவும் செய்திடுமே

நன்மை செய்தால் நன்மை தான்

     நம்மை நாடி வந்திடுமே.


https://youtu.be/_QaS_yBFSfI



முதல் வகுப்பு தமிழ் பருவம்-3



பெயரைச் சொல்வேன் எழுத்தை அறிவேன்

டை   குடை

டை   கூடை

தை   நத்தை

தை   ஆந்தை

மை   ஆமை

மை   பொம்மை 

ரை   அவரை

ரை   குதிரை

லை   இலை

லை   மலை

வை  ஔவை

வை   போர்வை

ழை   கற்றாழை 

ழை   வாழை

னை   யானை 

னை   பானை


சொற்கள் அறிவோம்

குகை

எலுமிச்சை 

முட்டை 

வீணை

சிறுத்தை 

பை

மை 

குதிரை

லை

கற்றாழை

தவளை 

வை

காலுறை 

பூனை 



https://youtu.be/0H7xsGNWsLk



முதல் வகுப்பு தமிழ் பருவம்-3


1. பறக்கலாம் கண்ணே கதை

கண்ணே!

வெளியே வா!

எதற்கு அம்மா?

உயரே பறக்கலாம் 

எனக்குப் பறக்கத் தெரியாதே

உன் சிறகு வளர்ந்து உள்ளது பார்

அடடே! ஆமாம் அம்மா! 

ஐ... மேலே பறக்கிறேன்!

நானும் வருகிறேன் 

உணவு தேடலாம்.


2. ஊஞ்சல் ஆடலாமா! கதை

விலங்குகள் ஊஞ்சல் ஆட விரும்பின.  யானை அஞ்சலை ஆட்டுகிறது.

குதிரை ஊஞ்சல் ஆடுகிறது. 

கழுதை ஊஞ்சல் ஆடுகிறது.

சிறுத்தை ஊஞ்சல் ஆடுகிறது.

ஆமை ஊஞ்சல் ஆடுகிறது.

பூனைக்கு அடிபட்டுள்ளது.

எப்படி ஊஞ்சல் ஆடும்?

அட... குரங்கின் உதவியுடன் பூனை ஊஞ்சல் ஆடுகிறது.


https://youtu.be/KuizLZPZdXY




முதல் வகுப்பு தமிழ் பருவம்-3



1. எங்கள் குடை கதை

கல்லை அங்கே வை

சரி

அட! மழை 

? !

ஆந்தையும், மைனாவும் எங்கே?

அங்கே பார்

ஆகா!

இது எங்கள் குடை.


2. இனியாவின் ஒரு வாரம் கதை

ஞாயிறு

தாத்தா கதை சொல்கிறார்.

திங்கள்

பாட்டி நடித்துக் காட்டுகிறார்.

செவ்வாய் 

அம்மா மகுடம் செய்கிறார்.

புதன்

அப்பா வாள் வாங்குகிறார்.

வியாழன் 

மாமா உடை தைக்கிறார்

வெள்ளி 

தங்கை கை தட்டுகிறாள்.

சனி

அத்தை ஒப்பனை செய்கிறார்.

இனியா நடிக்கிறாள்.


3. தோரணம் செய்வோமா! கதை

தோரணம் செய்வோமா?

வண்ணத் தாள் வாங்கி வருகிறேன்.

அம்மா கடைக்குப் போய் வண்ணத்தாள் வாங்கி வரட்டுமா? 

சரி, பொன்மணி போர்வையை தாத்தாவிடம் கொடு.

தாத்தா, என்ன தேடுகிறீர்கள்?

மோதிரம் தொலைந்து விட்டது. 

தாத்தா இதோ உங்கள் மோதிரம்!

கிடைத்து விட்டதா? நன்றி.

வண்ணத்தாள் கொடுங்கள் ஐயா.

இதோ தருகிறேன்.

சுவரில் தொங்க விடுவோமா?

ம்...

அழகாக இருக்கும்.



https://youtu.be/eLyoKH3t_hU



முதல் வகுப்பு தமிழ் பருவம்-3


1. பெயரைச் சொல்வேன் எழுத்தை அறிவேன்

கொ   கொக்கு 

கொ   கொய்யா 

தொ   தொப்பி 

தொ   தொட்டில்


சொற்கள் அறிவோம்

கொடி

சொட்டு

தொலைபேசி

பொரி

மொட்டு

வானொலி


2. பாட்டொன்று பாடலாம்

மலையொன்றின் அருகிலே

     கதிரொளியும் வந்ததே

குயிலொன்று கூவவே

      எதிரொலியும் கேட்டதே 

அவ்வொலியைக் கேட்டுமே

      மயிலும் அங்கே ஆடுதே.



https://youtu.be/Vv9NxfvPhd0

No comments:

Post a Comment