1. உனக்கும் எனக்கும் கதை
இரண்டு பூனைகள்
கி...ர்...ர்...ர்...
கி...ர்...ர்...ர்...
என்று ஒரு பூனை வீட்டிற்கு வெளியே நின்று அழைப்பு மணிஓசை எழுப்பியது.
யாரது? என்று கேட்டது வீட்டின் உள்ளே மற்றொரு பூனை.
உள்ளே உள்ள பூனை கதவை திறந்ததும் வரலாமா? என்று மற்றொரு பூனை கேட்டது.
உடனே வீட்டில் உள்ள பூனை
உள்ளே வா!
வந்து உட்காரு. என்று பின்புறம் கையில் முறுக்கை ஒழித்து வைத்துக்கொண்டு கூப்பிட்டது.
பிறகு வீட்டிற்கு வந்த பூனைக்கு இந்தா உனக்கு முறுக்கு என்று வீட்டில் உள்ள பூனை கொடுத்தது.
எனக்கா?
என்று வாங்கிக்கொண்டு நமக்கு அந்த பூனை கொடுத்தது போல், நாமும் அந்த பூனைக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்து இந்தா உனக்கும் என்று திருப்பி கொடுத்தது.
ஐ! இது எனக்குப் பிடிக்கும் என்று கூறி அந்த முறுக்கை வீட்டில் உள்ள பூனை நல்ல மகிழ்ச்சியோடு தின்றது.
2. எண்ணுப்பெயர் அறிவோம்
1. ஒன்று. 🎈
2. இரண்டு 🐒🐒
3. மூன்று 🐤🐤🐤
4. நான்கு 🌴🌴🌴🌴
5. ஐந்து🐈🐈🐈🐈🐈
6. ஆறு🐢🐢🐢🐢🐢🐢
7. ஏழு🐪🐪🐪🐪🐪🐪🐪
8. எட்டு🐓🐓🐓🐓🐓🐓🐓🐓
9. ஒன்பது 🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟
10. பத்து🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
தமிழ் எழுத்துக்கள் அறிவோம்
தமிழ் எழுத்துக்கள் மொத்தம் - 247
அவை கீழ்கண்டவாறு விவரிக்கப் பட்டுள்ளது.
உயிர் எழுத்துக்கள் - 12
- அ முதல் ஔ வரை
- க் முதல் ன் வரை
- க முதல் கௌ வரை
- ஃ ஆயுத எழுத்து
முதல் வகுப்பு தமிழ் பருவம்-2
பழமும் படகும் கதை
முதல் வகுப்பு தமிழ் பருவம்-2. பறவைகளும், விலங்குகளும் பழத்தோட்டம் செல்ல திட்டமிட்டன. படகில் கிளம்பின, பழங்களை பரித்தன, எடை தாங்காமல் படகு தள்ளாடியது. பறவைகள் பழங்கொத்துக்களை கவ்விக்கொண்டன. கரையை அடைந்தன. மகிழ்வுடன் தின்றன.
பெயரைச் சொல்வேன் எழுத்தை அறிவேன்
முதல் வகுப்பு தமிழ் பருவம்-2.
கு - குரங்கு
கு - குடம்
சு - சுறாமீன்
சு - சுத்தி
டு - ஆடு
டு - வீடு
து - தும்பி
து - துடைப்பம்
நு - நுரை
நு - நுங்கு
பு - புறா
பு - புளியங்காய்
மு - முயல்
மு - முறம்
ரு - குருவி
ரு - கரும்பு
லு - எலுமிச்சை
லு - கிலுகிலுப்பை
று - கிணறு
று - முறுக்கு
குயில், பசு, நண்டு, துப்பாக்கி, நுங்கு, புலி, முயல், கரும்பு, எலும்பு, உணவு, புழு, புற்று.
No comments:
Post a Comment